Tag Archive | வேண்டுதல்

மனிதனுக்காக மரணிக்கும் மிருகங்கள்..!


இது மாலை மலர் இதழில் வெளியான செய்தியாகும்.

மாற்று ஆபரேசன் மூலம் மிருக உறுப்புகளை மனித உடலில் பொருத்த திட்டம்; சீன விஞ்ஞானிகள் ஆய்வு

பெய்ஜிங், மார்ச். 26- பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.சீனாவில் உள்ள நாஜ்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதற் கான ஆய்வை மேற்கொண் டுள்ளனர்.முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.

அது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

http://www.maalaimalar.com/2011/03/26123621/transfer-operation-used-for-an.html

இந்த செய்தியைச் சொன்னதுமே எனது மனைவி சொன்னது, பிசாசை ஆண்டவர் பன்றிக்குள் அனுப்பினார், மனுஷன் அந்த பன்றியை மனுஷனுக்குள் வைக்கப்போறானா ‘ என்று அங்கலாய்த்துக் கொண்டார்..!

ஏற்கனவே பன்றியின் கொழுப்பிலிருந்து இனிப்புகள் மீது போடப்படும் சில்வர் ஃபாயில் தயாரிக்கப்படுவதாகவும் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவருக்கான இன்ஸுலின் கூட பன்றியின் கணையத்திலிருந்தே தயாரிக்கப்படுவதாகவும் சொல்லப்படும் நிலையில் தற்போது அதன் உடல் உறுப்புகளும் மனிதனுக்குப் பொருத்தப்படும் என்ற செய்தியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது; அப்படியானால் பன்றிக்கும் மனிதனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறது;  இந்து மக்கள் இதன்காரணமாகவே ஒரு மிருகத்தையும் விடாமல் அனைத்தின் ஆதரவையும் நாடி அவற்றை தெய்வமாக வழிபடுகிறார்கள் போலும். இனி, உன் தெய்வங்கள் மனிதனுக்காக என்ன செய்தது என்று யாரும் கேட்கமுடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது; அவை தன்னைத் தானே பலியாக்கி மனித ஜீவன்களைக் காப்பாற்றப்போகிறது; மேலும் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கூற்றும் இதனால் பொய்யாகப் போகிறது; ஏனெனில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால் குரங்குகளின் உடல் உறுப்புகளையல்லவா ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியிருப்பார்கள்? 

மனிதன் நீடித்த நாட்கள் வாழ என்னென்ன ஆராய்ச்சிகளையோ செய்கிறான்; ஆனால் நித்திய நித்தியமாக வாழ அவனுடைய ஜென்ம பாவங்களுக்காக ஒருவன் பிராயசித்தம் செய்யாவிட்டால் அவனுடைய சரீரத்திலுள்ள வியாதிகள் குணமடையா.ஆன்மாவில் நம்பிக்கை பெருகினால் மாத்திரமே வியாதி குணமாகும்;அது மாத்திரமல்ல, இந்த ஜீவனுக்குப் பிறகு வரும் ஜீவனுக்கு உறுதியளிக்கும் ஒரு நண்பரை தன் சொந்த இரட்சகராக ஒருவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  • “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்;  அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” (நீதிமொழிகள். 28:13)
  • “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர்.6:23)
  • “…இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1.யோவான்.1:7)
  • “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால்,நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.” (1.யோவான்.1:9,10)
  • “சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” (1.தீமோத்தேயு.4:8)

தாய்மதம் திரும்பும் இந்துக்கள்..!


// திருநெல்வேலி:

பிற மதங்களில் இருந்து, இந்து மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி, நேற்று நெல்லையில் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நெல்லையில் நேற்று மதமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதமாறும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பார்வதி சேஷ மகாலில் நடந்தது. இதில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் கிறிஸ்தவர்கள். சுத்தி ஹோமம் நடத்தப்பட்டு, அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமிகள் அவர்களுக்கு வீட்டில் பூஜை செய்ய விளக்குகள் வழங்கி, ஆசிர்வதித்தார்.

இது குறித்து வி.எச்.பி.,மாநில கோபாலரத்தினம் கூறுகையில், “”இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, இந்து மக்கள் மட்டுமே கேட்டு அதன்படி நடக்கிறார்கள். இதனால், மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.

மதமாற்றத்திற்காக, ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் விதைக்கின்றன. “இந்தியாவில் அறுவடை’ என்ற பெயரில் முகாம் நடத்தி, மதமாற்றங்களை நடத்துகின்றனர். ஆனால், மற்ற மதங்களுக்கு செல்லும் மக்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அங்கேயும் ஆலய வழிபாட்டில் பேதம், இடுகாடு போன்றவற்றில் ஜாதிப் பிரச்னை நீடிக்கிறது.

எனவே, தாய் மதமான இந்து மதத்திற்கு பலரும் தாங்களாகவே விண்ணப்பித்து மாறுகிறார்கள். நாங்களும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா… அரசின் நலத் திட்டங்களுக்காக மாறுகிறார்களா… என, ஆலோசித்தே சான்றிதழ் வழங்குகிறோம், என்றார். நிகழ்ச்சியில் தர்மபிரசார் அமைப்பாளர் பெருமாள், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். //

http://www.dinamalar.com/district_detail.asp?id=172793

மேற்கண்ட தினமலர் பத்திரிகையின் விஷமமான செய்தியை வாசித்ததும் பயங்கரமான சிரிப்பு வந்தது;மீனவர்கள் கடலுக்குச் சென்று வலைவீசி மிகுந்த பிரயாசத்துடன் மீன்பிடிக்கிறார்கள்;அப்படி பிடிக்கப்பட்ட மீன்களிலிருந்து சிலது கரையேறும் முன்பே துள்ளி கடலில் வீழும்;அங்கே அவற்றை விழுங்க திமிங்கலங்கள் காத்திருக்கும்;அதுபோலவே மனித வாழ்க்கை என்பது உள்ளேயும் சரி, வெளியேயும் சரி துன்பங்கள் நிறைந்தது;அநித்தியமானது;இதில் எங்கே இருந்தால் என்ன‌?

ஏன் சிரிப்பு வந்தது என்றால் இந்த நாளிதழ் நல்ல தரமான நிருபர்களை உடையதானாலும் இந்த குறிப்பிட்ட செய்தியின் வாசகங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்,இதில் பக்கத்தை நிரப்ப எதையாவது எழுதவேண்டுமே..!

இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக இந்துக்களின் தொகை வேகமாக குறைந்து வருகிறதாம்;மேலும் மதமாற்றத்தின் காரணமாகவும் இந்துக்கள் தொகை குறைந்து வருகிறதாம்;மதம் மாறியவர்கள் இந்தியாவில் தானே இருக்கிறார்கள்? அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும்? இந்த தேசபக்தர்கள் இந்தியாவை சுரண்டி வெளிநாடுகளில் இலட்சம் கோடிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்களே,அதுவல்லவா இந்தியாவை பெலவீனப்படுத்தும்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வந்தபோது அதில் முக்கிய குறிப்பாக வைத்தது,பெண்களையும் குழந்தைகளையும் மதம் மாற்றக்கூடாது என்பதே;ஆனால் இங்கே 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதம் மாறினார்களா;இது கேலிக்கூத்தாக இல்லையா? குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங்கே போய் சொல்லுவது? எப்படியோ இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாகி விட்டால் இந்தியாவில் சாதிக்கொடுமைகளோ வரதட்சணை கொடுமைகளோ இலஞ்ச லாவண்யமோ வர்க்கக்கொடுமைகளோ இல்லாது முழு இந்தியாவும் சுபிக்ஷமாகிவிடும் என்று நம்புவோமாக‌.

அநியாயத்துக்கு மதம் மாத்தறாங்க‌..!


மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு – தினமலர் செய்தி.

பந்தல்குடி : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஒன்றிய துவக்க பள்ளிகளில், மாணவர்களிடம், “பைபிள்’ வழங்குவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தெற்கு, வடக்கு பள்ளிகளில் 550 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த நவ.16ல், தூத்துக்குடியிலிருந்து வந்த கிறிஸ்தவ “மிஷினரி’யினர், மாணவர்களிடம், பைபிள் புத்தகம் வழங்கினர். இதை படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்று பிரசாரம் செய்தனர். புத்தகத்தின் கடைசியில் இருக்கும் உறுதிமொழி படிவத்தில் மாணவர்களை கையெழுத்திட கூறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் கூறியவை:

சிவலிங்கம்: மூன்று ஆண்டுகளாக, மத புத்தகங்களை கட்டாய படுத்தி கொடுக்கின்றனர். மதம் மாற்ற முற்படுகின்றனர். இது குறித்து கேட்டால், “இனி தரமாட்டோம்’ என்கின்றனர்.

கருப்பசாமி: சில ஆசிரியர் களால் இந்த தவறு நடக்கிறது. தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டபோது “புத்தகங்களை எடுத்து செல்லுங்கள், பிரச்னை செய்யாதீர்கள்’ எனக்கூறினார்.

ராகவன், (தலைமை ஆசிரியர், தெற்கு பள்ளி): மதம் பற்றிய புத்தகங்களை கொடுத்தது தவறு தான். அனைவருக்கும் கல்வி இயக்க மற்றும் கற்றல் வழி புத்தகங்களை இலவசமாக தர வருவர். அது போல என நினைத்து பார்க்காமல் விட்டு விட்டேன். “பைபிள்’ என தெரிந்ததும் அவற்றை வாங்கி வைத்து விட்டேன். இனிமேல் இதுபோல நடக்காது.

நாகலட்சுமி, (தலைமை ஆசிரியை, வடக்கு பள்ளி): மத சம்பந்தமான புத்தகங்களை கொடுக்க அனுமதிக்க கூடாது என்று எனக்கு தெரியாது. பெற்றோர் கூறிய பிறகு அவற்றை வாங்கி திருப்பி கொடுத்து விட்டோம். பெற்றோரிடமும் மன்னிப்பும் கேட்டோம்.

அருப்புக்கோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன்: தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், உயரதிகாரிடம் தெரிவித்த பின் செய்யுங்கள் என்று பலமுறை கூறி வருகிறோம். மத புத்தகம் வழங்கல் பற்றி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதிகாரி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138246

அரசாங்க பள்ளியில் பைபிள் கொடுத்து மதம் மாற்றுகிறார்களாம்;அது உண்மையா?

இங்கே புகைப்படத்தில் காணும் காட்சி என்ன, மாணவர்களே போட்டி போட்டுக்கொண்டு அதனை வாங்குகின்றனர்; யாரும் வற்புறுத்தி கொடுப்பது போலத் தெரியவில்லை; மேலும் இது இலவசமாகத் தரப்படுவதால் அதினால் எந்த பாதிப்பும் இருப்பது போலவும் தெரியவில்லை.

ஆனாலும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உள்நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை தினமலர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது;தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற எதிர்ப்புகளாலேயே கிறித்தவ மார்க்கம் வளருகிறது.

ஏனெனில் ஒன்றுமறியா சிறுபிராயத்தில் மாணவர்களுடைய சிந்தனையை மழுங்கச் செய்யும் ஒன்றுக்கும் உதவாத‌ தத்துவங்களையும் சடங்குகளையும் இந்து மார்க்கம் திணிக்கிறது;ஆனால் கிறித்தவமோ ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குகிறது.

இதனால் கவரப்படும் மாண‌வர்கள் சிறுவயதில் எளிதில் கிறித்தவத்தின்பால் அதாவது இயேசு எனும் வழிகாட்டியின் மீதான நம்பிக்கை கொள்கிறார்கள்;அதனை பெரியவர்கள் தடுக்கும் போது ஏன் தடுக்கிறார்கள் என்ற கேள்வியே ஒரு மாணவன் மனதில் பெரிய பாதிப்பை உண்டாக்கி மற்றொரு வாய்ப்பில் முழுமையான கிறித்தவனாக மாறுகிறான்.

ஆனால் இந்து மார்க்கத்தின் பெரியவர்களோ தன் பிள்ளை சினிமா பார்த்தாலோ அல்லது வேறு எந்த தவறான பழக்கவழக்கங்களையோ பழகினால் அதனைப் பெரிதுபடுத்தாத நிலையில் மெய்ஞான மார்க்கமாகிய இயேசுவின் மார்க்கத்தைக் குறித்து பெரியதாக எச்சரிக்கை செய்து மாணவர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறார்களே தவிர அதனைத் தடுக்க இயலாது என்பதே மனோதத்துவ ரீதியிலான உண்மையாகும்.

ரோட்டில் கைப்பிரதி கொடுக்கக்  கூடாது,மருத்துவமனையில் சென்று முன்பின் அறியாத ஏழை எளிய மக்களை சந்தித்து ஆறுதல் கூறி பிரார்த்தனை செய்யக்கூடாது, மாணவர்களுக்கு நல்வழிக்கான ஆலோசனைகளைக் கூறி அவர்கள் வெற்றிபெற உதவும் இயேசுவின் வரலாறு அடங்கிய புதிய ஏற்பாடு புத்தகத்தைக் கொடுக்கவும் கூடாது.

அப்படியானால் எப்படி மத நல்லிணக்கம் வளருமாம்?

ஆனால் இவர்கள் அனைத்து அரசாங்க அலுவலகத்திலும் பொது இடங்களிலும் ஆக்கிரமித்து கோவில் கட்டி உண்டியல் வைத்து ஒன்றுமறியாத மக்களை ஏமாற்றி வசூல் செய்யலாம்;ஒரு சாதாரண தெருவோர கோவிலைச் சுற்றியுள்ள எத்தனை கடைகள், எவ்வளவு பணப்புழக்கம் ? இதையெல்லாம் யார் கேட்பது  ? இது தான் மதசார்பற்ற இந்தியாவில் ஜனநாயகம் என்பதா ? இது தான் பத்திரிகை சுதந்தரத்தைக் குறித்து பெரிதாகப் பேசும் தினமலர் போன்ற பத்திரிகையாளர்களின் கருத்து உரிமை தத்துவமா ?

திருநங்கைகள் Part.2


திருநங்கைகள் சம்பந்தமாக அண்மையில் தமிழ் கிறித்தவ தளத்தில் நாம் அளித்த பின்னூட்டம்…

அன்பு நண்பர் சரவ் அவர்களுக்கு தாங்கள் குறிப்பிட்ட திருநங்கைகள் சம்பந்தமான எனது கட்டுரையை தொடுப்பில் சென்று பார்க்கவும்;

https://chillsam.wordpress.com/2009/11/12/eunuch/

நண்பரே, 1.கொரிந்தியர் .5 திருநங்கைகளுக்காகவே எழுதப்பட்டதைப் போலக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்; அது மீட்கப்பட்ட சபைக்காக எழுதப்பட்டதாகும்.

// வேதம் நமக்கு இவ்வாறு நமக்கு சொல்லியிருக்க நாம் எப்படி திருநங்கைகள் என்று சொல்லபடுகின்ற நபர்களோடு அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில் கர்த்தருக்குள் ஐக்கியம் கொள்ள முடியும்.அவர்கள் சபையில் வரலாம் வேத வார்த்தையை கேட்கலாம் ஆனால் தங்கள் பாவ கிரியைகளை விட்டு மனந்திரும்பாத பட்சத்தில் எப்படி ஐக்கியம் கொள்ள முடியும் என்று தெரியவில்லை.//

மற்ற சாதாரண மனிதர்களோடு பழகி உறவாடி வியாபாரம் செய்து ஐக்கியம் கொள்ளும் போதும் இதே உணர்வு உங்களுக்கு உண்டாகுமா; அவர்கள் மனந்திரும்பும் வரை காத்திருந்து ஐக்கியம் கொள்வதைப் போலவே இவர்களுடனும் நேசம் பாராட்டுவதில் என்ன தயக்கம்? சபைக்குட்பட்ட‌ மற்ற மனிதர்கள் பாவமே செய்யவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்? திருநங்கைகள் என்றாலே அந்தரங்கமாக மிகவும் மோசமானவர்கள் எனும் தவறான அபிப்ராயமே தங்களது அச்சத்துக்குக் காரணமாக இருக்கிறது; இந்த உலகிலுள்ள அனைவரையும் போலவே திருநங்கைகளும் பாவத் தன்மையில் பிறக்கிறார்கள் என்பதைத் தவிர அவர்கள் எந்த வகையிலும் மற்ற மனிதர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர்களல்ல‌.

இன்னும் சொல்லப்போனால் பாவத்தை நிறைவேற்றும் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட மாறுபாட்டினால் மனம் பேதலித்து துவண்டுபோய் தாழ்வு மனப்பான்மையினால் சமூகத்தைவிட்டு தள்ளப்பட்டவர்கள்; இதனால் பாவ சோதனைகள் குறைவானவர்கள்; அன்புக்காக ஏங்குபவர்கள்.

பின்குறிப்பு:

இதையெல்லாம் படித்துவிட்டு என்னை சந்தேகப்படவேண்டாம்…ஹி..ஹி..!

Part.2:2

//நாளைக்கே ஒரு திருநங்கை மனந்திரும்பாமல் (தன பாலிய தொழிலை செய்து கொண்டும்) ஞான ஸ்நானம் வேண்டும் என்றால் எப்படி நம்மால் கொடுக்க முடியும்.//

திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற எண்ணத்தை முதலில் தவிர்க்கவேண்டும் ;அடுத்து தங்கள் பாலியல் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள் என்ற பகுதி ;இவையெல்லாமே பரிசுத்தாவியைப் பெற்றவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நிதானமாக செயல்பட்டு போதனையின் மூலம் நிறைவேற்ற வேண்டிய எல்லைகளாகும் ;

வேதமே தெளிவாகக் கூறுகிறது,தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தோரும் உண்டு ;தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டோருமுண்டு’ என ; ஆம் ,நார்மலாகப் பிறந்து தேவனுடைய ராஜ்யத்துக்காகத் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டோர் என்பார் தவறு செய்யவில்லையா ,அதுவும் போகட்டும் ,மனதின் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அண்ணகர்களாக தேவபணியாற்றுவோரை விட தங்களை சரீர ரீதியான கெடுத்துக்கொண்டு தங்கள் ஆண்மையை இழந்தோரின் நிலைமை பரிதாபமல்லவா ,அவர்களுடைய மனமே இதைச் செய்யக் காரணமாக இருந்தது எனில் வேத வார்த்தையின்படி அவர்கள் மனம் புதிதாகுமானால் எத்தனை மேன்மையாக இருக்கும்..?

Part.2:3

// நீங்கள் என்ன சொல்ல வருகிறீர் என்று எனக்கு புரியவில்லை.பாலியல் தொழில் செய்து கொண்டு இருந்தாலும் அவர்களை சபையில் ஞான ஸ்நானம் கொடுத்து,கர்த்தரின் பந்தியில் பங்கு பெற சொல்கிறீகளா? அல்லது வேறு என்ன சொல்ல வருகிறீர். //

திருநங்கைகளுக்கென்று தனி சுவிசேஷமோ தனி அணுகுமுறையோ தேவையில்லை என்கிறேன்; பாலியல் தொழில் செய்வோரை வேதம் எப்படி அணுகுகிறதோ அப்படியே திருநங்கைகளையும் அணுகினால் போதுமென்கிறேன்;

பாலியல் தொழில் செய்யாவிட்டாலும் இங்குமங்கும் ஓரிரு காரியங்களில் சறுக்கிவிட்டு பந்தியில் பங்கேற்போர் இருக்கிறார்களல்லவா? பந்தியில் பங்கேற்பது பெரிய விஷயமல்ல; நீங்கள் தராவிட்டால் அவரைக் குறித்து அறியாத எங்கு வேண்டுமானாலும் அவர் பந்தியில் பங்கேற்கமுடியும்; எனவே தான் வேதம் அவரவருடைய மனசாட்சியை இங்கே நீதிபதியாக (1.கொரிந்தியர்.1:31) கூறுகிறது.

இன்னும் சில சபைகளில் கணவன் மனைவி சண்டையிட்டு வந்தாலும்கூட பந்தியிலிருந்து விலக்குவார்கள்; இதற்கெல்லாம் யாருக்கும் அதிகாரமில்லை; இது கிறித்துவுக்குள் விசுவாசிக்குக் கொடுக்கப்பட்டுள்ள சுயாதீனத்தைக் கேள்விக்குரியதாக்கிவிடும்; போதிக்கவும் ஜெபிக்கவும் மட்டுமே ஊழியருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது; ஆனால் இங்கே மனைவியை தள்ளிவிட்டு விசுவாசியாக இருக்கமுடியாது; ஆனால் போதகராக இருக்கலாமல்லவா..? தள்ளிவிடப்பட்டவளை விவாகம் செய்பவனும் அவளை தள்ளிவிட்டவனுமாகிய இருவருமே அவளை விபச்சாரம் செய்யப்பண்ணுகிறார்கள் என்று வேதம் கூறுகிறது.

சரி, மீண்டும் மையப் பொருளை நோக்கி வருவோம்…
திருநங்கைகள் இயல்பிலேயே பாவத்துக்கு அடிமைகளல்ல, அன்புக்கே அடிமைகள்; ஏனெனில் அவர்களுடைய உடற்கூறு அமைப்பே அப்படிப்பட்டதாகும்; மேலும் பிறப்பிலேயே திருநங்கைகளானவர்கள் மூலமே இடையில் மனநிலை காரணமாகத் தங்களைத் திருநங்கைகளாக மாற்றிக் கொண்டோரை சந்திக்கவேண்டும்.

கிறித்தவ விசுவாசத்தைப் போல திருநங்கைகளை முழுமையடையச் செய்யும் வேறொரு கொள்கை இந்த அகிலத்திலேயே கிடையாது என்பேன்; ஆனால் திருநங்கைகளைக் கவர்ச்சிப் பொருளாகவும் வியாபாரப் பொருளாகவும் வேடிக்கைப் பொருளாகவும் இந்த உலகம் பார்க்கிறது; எனவே தங்களை வஞ்சிக்கும் இந்த உலகைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒருவித மூர்க்கத்தனம் அவர்களுடைய குணாதியத்தையே மாற்றிவிடுகிறது;

எப்படி மிகவும் அழுக்காக இருக்கும் ஒரு துணியை மிக அதிக தண்ணீரும் சௌக்காரமும் போட்டு அதிக முயற்சியினால் வெளுக்கிறோமோ அதுபோலவே திருநங்கைகள் மிகவும் மோசம் என்று நீங்கள் நினைத்தால் அவர்களைவிட்டு விலகாமலும் விலக்கிவிடாமலுமிருந்து அவர்கள் தானியேல்,எஸ்தர் போன்ற பரிசுத்தர்களை நேசத்துடன் வளர்த்தவர்தம் வழிவந்தோர் என்ற பாசத்துடன் அணுகினால் போதும் என்கிறேன்.

(தொடருவேன்…)

நேத்து ராத்திரி யம்மா..!


நேற்றிரவு (09:10:2010) தூக்கம் பறிபோனது, துக்கம் வரவானது; காரணம் எங்கள் ஊரிலுள்ள பெருமாளுக்கு ஏதோ விசேஷமாம்; கடந்த மூன்று நாளாக அரற்றிக் கொண்டிருந்தார்கள்; நமக்கு அதில் ஆர்வமில்லாவிட்டாலும் கட்டாயப்படுத்துவது போல அதிகாலையிலிருந்து இரவு பத்து மணிக்கும் மேலாக ஊரை ஒலியினால் மாசுபடுத்தினர்;

எல்லாம் போக நேற்று ஒரு ஊர் பயணம் முடித்து திரும்பி சோர்வுடன் படுக்கைக்குச் செல்லவே இரவு 11:30 ஆனது; ஒலிபெருக்கி சத்தத்திலிருந்து தப்பிக்க கதவையும் சன்னல்களையும் அடைத்துவிட்டு காற்றுக்கு வழியில்லாமல் துன்பத்துடன் தூங்க முயற்சித்தபோது சில மணித் துளிகளில் “டமடம” வென அடித்துக் கொண்டும் பஜன் பாடிக் கொண்டும் சாமி ஊர்வலம் வந்தது;

போதாக்குறைக்கு பட்டாசு வெடி… அந்த மிகப் பெரிய சைஸ் பேண்டு (Big Band)கள் மூன்றும் பள்ளிகளில் ‘மார்ச் ஃபாஸ்டு’ க்கு அடிப்பது, அத்துடன் சாவுக்கு அடிக்கும் மேள வாத்தியமும் சேர நெஞ்சை படபடக்கச் செய்யும் இரைச்சலுடனும் பிணத்துக்கு முன்பாக ஆடும் அருவருப்பான கூத்து நடனத்துடனும் சாமி ஊர்வலம் வந்தது;

கூத்து நடனம் ஆடிய இளைஞர்களும் மற்றவரும் நல்ல போதையில் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது; இந்த ஊர்வலம் வருவதற்காகவே சில தினங்கட்கு முன்பு எங்கள் வீட்டு வாசலிலிருந்த நல்ல நிழல்தரும் மரத்தை வெட்டி வீழ்த்தியிருந்தனர்; இது அவர்கள் தேசமல்லவா, யாரையும் எதுவும் கேட்க முடியாது;நாங்களோ வாடகைக்கு குடித்தனம் இருப்பவர்கள்; ஏதாவது நியாயம் கேட்டாலும் வீட்டை காலி செய்யவைப்பர்; வேறு வீடும் தரமாட்டார்கள்;

ஒரு மாட்டு வண்டியில் சாமியை அலங்கரித்து வைத்து அதற்கு மின்வசதி தரும் மின்கலத்தையும் வண்டியுடன் இணைத்து மாட்டுக்கு பதிலாக மனிதர்கள் இழுத்துவந்தனர்; வண்டியிலோ ஒரு பூஜாரி ராஜா போல அமர்ந்துகொண்டு கொஞ்சமும் உணர்ச்சியற்ற நிலையில் இயந்திர கதியில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்;

பக்தர்கள் கொடுத்த பூஜை தட்டை சில நொடிகள் அந்த விக்கிரஹத்திடம் ஒரு காட்டு காட்டிவிட்டு பக்தர்களிடம் கொடுக்க, அவர்களும் இயந்திரத்தைப் போல பெற்றுக் கொண்டு திரும்பினர்;

ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கக்கூடிய மின்சாரம் மற்றும் கேபிள் தொலைபேசி சர்வீஸ் கம்பிகளில் உரசி, உயர்ந்ததும் மட்டமானதுமான அந்த காகித அட்டை அலங்காரம் கவிழ்ந்து சாமி தடுமாறி விழுந்துவிடுமோ ‘ வென இளைஞர்கள் அதற்கென ஒரு கம்பை தயாரித்து அதன்மூலம் சர்வீஸ் கம்பிகளை உயர்த்திபிடித்து சாமியின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர்;

சாமியின் அழகோ கண்கொள்ளா காட்சி…
‘ஒருவனுக்கு ஒருத்தி ‘ என குடும்பஸ்தர்கள் வாழும் தெருக்களில் நுழைந்த சாமியோ சைடுக்கு ஒன்றாக ரெண்டு குட்டிகளுடன் வந்தார்; போனவாரம் வந்து போன மிஸ்டர் கணபதி சிங்கிளாகத் தான் வந்தார்;

சாமி குட்டிகளை மட்டும் கட்டிக்கொள்ள நம்ம பக்தர்கள் அவருடைய பெண்சாதிகளுடன் அவரையும் சேர்த்து கட்டியிருந்தனர்; விழுந்துருவாரோ என்ற நல்ல எண்ணமோ அல்லது தனது ஜோடிகளுடன் ஓடிவிடுவாரோ என்ற கெட்ட எண்ணமோ தெரியவில்லை;

என்னைப் பொருத்தவரை அவர் மிஸ்டர் கிருஷ்ணனாக இருக்கவேண்டும்; ஆனால் அவரைக் குறித்து பெருமாள் என புகழ்ந்தனர்; ‘ லாஜிக் ‘ புரியவில்லை;

பெருமாளைப் பொறுத்தவரையில் அலமேலு அம்மாவுடன் இருப்பார்; அதுவும் ஏதோ கொடுக்கல் வாங்கல் தகராறில் கோவித்துக் கொண்டு திருப்பதி மேலேறி தவமிருப்பதாகவும் அவருடைய கடன் தீர்ந்தபிறகே வந்து குடித்தனம் பண்ணுவார் என்றும் ஐதீகமாம்; நம்முடைய ஏழை எளிய மக்களும் தங்கள் முடி உட்பட அனைத்தையும் ஆண்டாண்டு காலமாக தானமாக வழங்கியும் இன்னும் அவருக்கு திருப்தியாகவில்லை;

எல்லா சாமியும் ஆசீர்வதிக்கும் பாவனையில் போதும் என்பது போல வலக்கரத்தைக் காட்ட இவரோ இன்னும் வேண்டும் என்பது போல வலக்கரத்தையும் இடக்கரத்தை அள்ளி முடித்துக் கொண்டது போலவும் வைத்திருப்பார்;

அப்படியானால் எங்கள் தெருவுக்கு வந்தது பெருமாள் அல்ல; இத்தனை கலாட்டாக்கள் நடந்தும் சாமியோ சாமியாரோ மக்களுடைய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் சொல்லவில்லை; அவர் அருள் தருவதாகச் சொல்லுவதும் பக்தர்கள் வேண்டியது நடக்கும் என்று காத்திருப்பதும் சுயநலம் சார்ந்த பக்தியாகவே தோன்றுகிறது; ஏனெனில் ஒரு தெருவுக்கு சாமி வந்து போவதாலோ சாமியைத் தேடி பக்தன் சென்று வருவதாலோ ஒரு தனிப்பட்ட மனிதனுடைய வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டது போலத் தெரியவில்லை;

கோயிலில் விழாக்கோலம் ஒருபுறம், பக்தன் அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு மல்லாந்து கிடக்கும் அலங்கோலம் மறுபுறம்; அவன் பெண்டு பிள்ளைகள் அங்கே சாமியை விழுந்து வணங்கிக்கொண்டிருக்க இங்கே இவன் சாக்கடையில் விழுந்து எதையோ தேடிக்கொண்டிருக்கிறான்;

அந்த காலத்தில் கோயிலில் பரத்தையர் நடனமாடுவர்; இதனை பரதநாட்டியம் என்றும் கூறுவர்; இந்த நடனத்தால் வசீகரிக்கப்ப‌டும் ரிஷிகளும் மன்னர் பெருமக்களும் அன்றிரவு அவர்களோடு தங்களைப் பகிர்ந்துகொள்வர்;

இன்றோ ஒரு பாவமுமறியாத சிறுமிகளையும் வயதுக்கு வந்த இளங்குமரிகளையும் அதே கோவில் வாசலில் ஆடவிட்டு அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்;

வீட்டுக்கு ஒன்றாக ஆணாகவோ பெண்ணாகவோ பெற்று நம்முடைய எதிர்காலத்தில் நமக்குத் துணையாக பிள்ளைகளை வளர்த்து இதுபோன்ற காமாந்தகர்களுக்கு அவர்களை பலியாக்கும் ஆபத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது;

ஏனெனில் அங்கே இருக்கும் சாமிகளின் கதைகளும் புராணங்களும் வீரபராக்கிரமங்களும் அத்தனை பயங்கரமானது; இந்த காலத்தில் அவர்கள் இறங்கி வந்து நம்முடைய பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு போகாவிட்டாலும் அவர்களுடைய ஆவியை இளைஞர்கள் மனதில் புகுத்தி அவர்கள் மூலம் பெண் பிள்ளைகளைக் கெடுத்துவிடுகிறார்கள்; இன்னும் அடுத்தவன் மனைவியையும்கூட இந்த சாமிகள் விட்டு வைப்பதில்லையே;ஆனானப்பட்ட விஷ்ணு பகவான் உட்பட தனது பக்தர்களை ருசிபார்ப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்;

இதையெல்லாம் யோசித்து யோசித்து நேற்றிரவு தூக்கம் பறிபோனது; சாமி அங்கே வேஷத்தைக் கலைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்க பக்தர்களோ வழக்கம்போல தங்கள் அன்றாட பாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்; பொழுதுபோக்குக்கு எந்திரன் முதலான திரைப்படங்களும் தொலைக்காட்சி சீரியல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சமத்துவ சமதர்ம சமுதாய மறுமலர்ச்சிக்கான அற்புதமான தளமாக டாஸ்மாக் கடைகளும் இருக்கவே இருக்கிறது.

வாழும் பாரதம்… வளரும் தமிழகம்…!?

“கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம்”


அண்மையில் எனது ஆதங்கத்தை “மாயாவி ஜட்சன் ஆபிரகாம் கையில் விஷ்ணு சக்கரம்” என்ற கட்டுரையாக்கும் போது தீவிரமான ஒரு சிந்தனையிலிருந்தேன்; ஆம், சரியான மாற்றுவழியைச் சொல்லாமல் வெறுமனே கிறித்தவ ஊழியர்களை விமர்சித்து பேசிக்கொண்டிருந்து கெட்டபெயரை எடுப்பதைவிட தீவிரமாக எதையாவது செய்யவேண்டுமென;  “கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம்” போன்ற பெயரில் ஒரு சுயாதீன இயக்கத்தைத் துவங்கவேண்டும்; அது
தமிழகம் முழுவதும்
ஆங்காங்கு துவக்கப்பட்டு ஒரு இயக்கமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும்;  இதன் உறுப்பினர்கள் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படலாம்;  இவர்களின் பணியானது அஹிம்ஸா வழியில்- ஜனநாயக முறையில் அமைந்திருக்கவேண்டும்.

அதாவது சத்தியத்துக்கு விரோதமான செயல்களை வரையறுத்துக் கொண்டு முதலாவது அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை எச்சரிக்க வேண்டும்.

அடுத்து அவர்களை அழைத்து கூட்டம் போடும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சில ஆலோசனைகளைக் கூறி அவர்கள் கவனமாக இருக்கவேண்டிய காரியங்களை உணர்த்தவேண்டும்.

இந்த மோசடி ஊழியர்கள் தங்கள் வழியை மாற்றிக் கொள்ளாமலும் நம்முடைய எச்சரிப்பைக் குறித்து மேடையில் பகிரங்கமாக அறிவித்து விளக்கம் கொடுக்காத பட்சத்தில் இவர்கள் நடத்தும் கூட்டத்தில் இவர்களுடைய நடவடிக்கைகள் கிறித்தவ நடைமுறைகளுக்கு விரோதமானது என்பதை துண்டுபிரதிகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.

இன்னும் தேவைப்பட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்; மோசடி நிதிநிறுவனங்களையும் போலி மருத்துவர்களையும் கூட புகாரின் அடிப்படையிலேயே போலீஸார் விசாரிக்கின்றனர்; எனவே பாதிக்கப்படாதிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிக்கச் சொல்லி காவல்துறையில் புகார் செய்யலாம்.

இதில் ஒத்த கருத்துடைய சகோதரர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ‘எது சத்தியம், எது சத்தியத்துக்கு விரோதமானது’ என்ற வரையறைகளையும் நடவடிக்கை எடுக்கவேண்டிய வழிமுறைகளையும் இறுதி செய்யலாம்;

இதற்கு தலைவர் என்று யாரும் தேவையில்லை; ஜாமக்காரன் ஆசிரியர் போன்ற யாரையாவது கௌரவ ஆலோசகராக வைத்துக் கொள்ளலாம்.

இது அவசியமா என்று கேட்டால்…

இந்த தேசத்தில் பத்திரிகை சுதந்தரம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?

மனித உரிமை குறித்த விழிப்புணர்ச்சி இருக்கிறதல்லவா?

தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?

அவ்வளவு ஏன் இயேசுவானவரையே எந்த அதிகாரத்தில் இவற்றை செய்கிறீர் என்று கேள்வி கேட்டனரே?

அந்நியன் வந்து நம்மை கேள்வி கேட்டு அவமானப்படுத்துவதற்குள் நம்மை நாமே சரி செய்துகொண்டால் என்ன‌?

சிறுபான்மை கல்விநிறுவனங்கள் மீது புதுவித வன்முறை..!


தமிழகஅரசு அண்மையில் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் ஆணையொன்றை நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் பிறப்பித்தது;இந்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் திடீரென அவசர கோலத்தில் இந்த ஆணையைப் பிறப்பித்ததால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தனியார் பள்ளிகள் தடுமாறிப் போயின;

(தொடரத் தொடரவும்…)

இரண்டில் ஒன்று…தீர்மானம் நன்று..!


நேற்று ஒரு நண்பர் தன்னுடன் ஒரு சகோதரரை அழைத்துக் கொண்டுவந்து அவருக்கு ஆலோசனை சொல்லி பிரார்த்திக்க வேண்டினார்; அவருடன் பேசியபோது எனது சிந்தையில் உதித்த சில கருத்துக்கள்:

ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்து -ஆனாலும் வேர்கொள்ளமுடியாமல் – நிரந்தர வேலையுமில்லாமல் – 2007- ம் வருடம் திருமணமாகி – ஆறுமாத ஆண் குழந்தையுடன் மனைவியை விட்டுப் பிரிந்த நிலையில்  -சில வாரங்கட்கு முன்பு சாலை விபத்தில் கையொடிந்து  -தங்க இடமில்லாமல் பரிதாப நிலையிலிருந்தவரிடம் நான் இப்படியாகப் பேசிக் கொண்டிருக்கிறேன்;

அவர்கள் இருவருக்கும் வந்ததும் உபசரிப்பாக ஆளுக்கொரு க்ளாஸ் தண்ணீர் கொடுத்தோம்;அதை ஒருவர் முழுவதும் குடித்துவிட மற்றவர் பாதியளவு மீதம் வைத்திருந்தார்; அதையே உதாரணமாக்கி நான் கேட்டேன்,இந்த இரண்டு க்ளாஸ்களில் எது சிறந்தது?

காலியாக இருக்கும் க்ளாஸா அல்லது ஏதோ கொஞ்சம் இருக்கும் க்ளாஸா?
எப்படியோ மிகச் சரியாகவே சொன்னார்,காலியாக இருக்கும் க்ளாஸ் தான் என்று;எப்படி என்று நான் விளக்கினேன்;

பாதியளவு தண்ணீர் இருக்கும் க்ளாஸில் இன்னும் கொஞ்சம் நிரப்பி பயன்படுத்தவும் முடியாது,இருக்கும் கொஞ்சம் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாமென்றாலும் முடியாது;ஏனெனில் அது இன்னொருவர் குடித்துவிட்டு வைத்ததும் மாசடைந்ததுமான தண்ணீராக இருக்கும்;எனவே என்ன செய்வோம்,அதை கொட்டிக் கவிழ்த்து  கழுவி விட்டு புதியதான தண்ணீரை நிரப்பி பரிமாறுவோம்;இப்படியே இதுவரை வாழ்ந்த உங்கள் வாழ்க்கை பயனற்றதாகவும் இனி செய்வோம் என்ற திகைப்புடனுமிருக்கும்;

ஆனால் ஒன்று செய்யலாம்,புதிய வாய்ப்புக்காக ஆவலுடன் ஆண்டவரை நம்பி காத்திருங்கள்;ஆண்டவர் புதியதொரு வாசலைத் திறப்பார்;அதுவரை உங்களுக்காக நீங்கள் உங்கள் பழைய அனுபவத்திலிருந்து திட்டமிடுவதை நிறுத்துங்கள்; நீங்கள் முழுவதும் குணமாகி சகஜநிலை திரும்பும் இந்த இடைபட்ட ஓய்வு காலத்தில்உங்களைப் பற்றிய நன்மதிப்புகளை வளர்ந்துக்கொள்ளுங்கள்; நல்ல நண்பர்களுடன் ஐக்கியம் கொள்ளுங்கள்; நல்ல ஆவிக்குரிய புத்தகங்களைப் படியுங்கள்;உங்கள் மீது நம்பிக்கை வளரும்படியான காரியங்களை யோசித்து அதை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் காரெக்டரை டெவலப் செய்யுங்கள்; உங்களுக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து நீங்கள் மீண்டு உயிருடனிருப்பதே ஆண்டவர் உங்களை நேசிக்கிறார் என்பதற்கு அடையாளமாகும்;

மனிதர் சற்று நம்பிக்கையுடனும் தெளிவுடனும் விடைபெற்றார்;என்ன என்னுடைய வழக்கமான போட்டோ எடுக்க மறந்துவிட்டேன்;விரைவில் அவரது போட்டோவை இங்கே பதிக்கிறேன்.

ஆகஸ்டு 10 கறுப்புதினம்..!


ஆகஸ்ட் 10 ஆகிய இதே நாளில் சரியாக அறுபது வருடத்துக்கு முன்பு அதாவது 1950 -ல் தலித் கிறித்தவர்களுக்கு மட்டும் உள்நோக்கத்தோடு தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் மறுக்கப்பட்டது;

அதற்கு இன்று வரையிலும் எந்த நியாயமான காரணத்தையும் யாரும் சொல்லி விடவில்லை; ஆனாலும் சமுதாய விடுதலைக்காக மதம் மாறும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டேயிருக்கிறது;

இதனைப் பொறுக்காத அடிப்படைவாதிகள் அவர்களை இன்னும் தரம் தாழ்த்தும் வண்ணமாக பணத்துக்கு மதம் மாறுவதாக வசைபாடுகிறார்கள்;

உண்மையிலேயே இந்தியா மதசார்பற்ற நாடாக இருந்தால் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளை மதசார்பில்லாமல் வழங்க என்ன தடை?

புத்த மதமும் சீக்கிய மதமும் விதிவிலக்காக சலுகை பெறும்போது கிறித்தவருக்கு மட்டும் அது ஏன் பொருந்தாது?

இந்நிலையில் இந்திய கிறித்தவர்களை சிரம் தாழ்ந்தும் பதம் பணிந்தும் வேண்டுவது யாதெனில் தாங்கள் சிறிது தியாகம் செய்து தங்கள் மார்க்க விடுதலையைப் பறைசாற்றுங்கள்;

அது எப்படி..?
அண்மையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததல்லவா, அதில் தங்கள் சாதியை எவ்வாறு குறிப்பிட்டீர்களோ அவ்வாறே தங்கள் மதத்தையும் குறிப்பிட்டு – தெளிவாக – நேரடியாக ‘நான் கிறித்தவ ஆதிதிராவிடன்’ என்று பதிக்கவேண்டும்;

இதனால் என்ன பலன் என்று கேட்கலாம், அதன் பிறகே நம்முடைய உண்மையான பெலத்தை அரசாங்கம் உணர்ந்து கொள்ளும்; நாமும் நம்முடைய சலுகைகளை உரக்கச் சொல்லிக் கேட்கலாம்;

அம்பேத்கர் சொன்னாராம், என்னை விட என் நாடு முக்கியம்,என் நாட்டை விட என் இலட்சியம் முக்கியம்,என் இலட்சியத்தைவிட எனது சமுதாயத்தின் விடுதலை முக்கியம்’ என்று!

ஆம், குறுகிய மத உணர்வுகளில் நாம் சிக்கிவிடாமல் இதுபோன்ற சமுதாயப் பிரச்சினைகளிலிருந்து அந்நியப் படாமல் ஏக சிந்தையுடன் இணைந்து போராடுவோம்;

வெற்றி நமதே..!

http://in.christiantoday.com/articles/dalit-christians-declare-black-day-on-aug-10/5548.htm

‘அத்வேஷ்டா’ என்றால் என்ன..?


நம்முடைய இந்து தள நண்பர்களால் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தையே இந்த ‘அத்வேஷ்டா ‘ என்பது; அதற்கு வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் தூண்டும் வண்ணம் செயல்படாமல் சமதர்ம சன்மார்க்கத்தை நிலைநிறுத்துவது என்பது பொருளாம்.
இதனை யார் போதிக்கிறார் என்றால் இடைவிடாமல் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வண்ணமாகப் பேசி எழுதிவரும் தமிழ்ஹிந்து தளத்தின் நண்பர் திருச்சிக்காரன்;
இவர் குறுகிய காலத்தில் பிரபலமாகக் காரணமானது இவரது நிலையற்ற கொள்கையும் பச்சோந்தித்தனமும் முரண்பாடுகளுமே என்றால் அது மிகையாகாது;
நாம் என்ன விளக்கம் கொடுத்தாலும் அவற்றையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாது எதிர்தரப்பை மனதளவில் சோர்வடையச் செய்வதே இவரது தந்திரம்;
இப்படின்னா அப்படின்னுவாரு…அப்படின்னா இப்படின்னுவாரு..!
இவருக்கு என்னைப் போன்றவர் பதிலளிக்காதிருந்தால் சீக்கிரமே காணாமற் போவார்;
நான் பதிலளிப்பதும் இவருக்காக அல்ல, இவருடைய அருவருப்பான கீழ்த்தரமான கருத்துக்களாலும் இவரால் ஊக்குவிக்கப்படும் கருத்துக்களாலும் ஒரு ஆத்துமாவும் வீணாகப்போகக் கூடாது என்ற கரிசனையே;
அண்மையில் ங்கே நகைப்புக்குரிய ஒரு நாடகம் அரங்கேறியது;அதன் விவரம் பின்வருமாறு:

ராபர்ட் ஸ்டான்லி (திருநாவுக்கரசு), on June 19, 2010 at 22:31 Said:

நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு,

இந்த தளத்தை ஒரு நண்பர் கொடுத்து படிக்கச்சொன்னார். அதனால் இங்கே கருத்து எழுதுகிறேன்.
என்னுடைய குடும்பம் மூன்று தலைமுறையாக கிறிஸ்துவ குடும்பம். எங்கள் குடும்பத்தில் நடக்காத துயர சம்பவம் இல்லை என்று சொல்லலாம். நாங்கள் சர்ச்சுக்கு போய் புலம்பாத புலம்பல் இல்லை. இருந்தாலும் மாறி மாறி துன்பங்கள் வந்துகொண்டே இருந்தன. மிகச்சிறிய வயதில் இழக்கக்கூடாத பலரை இழந்தோம்.
இறுதியில் ஒரு ஜோஸ்யரை கேட்டோம். அந்த அளவுக்கு நொந்து போயிருந்தோம். அவர் எங்களை மாரியம்மன் கோவிலுக்கு போய் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னார். செய்தோம்.
அன்றிலிருந்து எங்கள் வாழ்க்கையில் இழந்ததையும் அடைந்து நல்ல வாழ்க்கை வாழ்கிறோம்.
அந்த ஜோஸியரின் கூற்றுப்படி இறந்த பிணத்தை வீட்டில் வைத்து கும்பிடக்கூடாது. இயேசு எவ்வளவு நல்லவராக இருந்தாலும், பிணத்தை வைத்து கும்பிட்டதால்தான் இத்தனை துன்பங்களும். அதனால் மேலை நாட்டில் செல்வம் இருந்தாலும் விவாகரத்துகளும், நிம்மதியின்மையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இங்கே செல்வமில்லை என்றாலும் நிம்மதியான வாழ்க்கை, சந்தோஷமான குடும்ப சூழல் என்று இருகிறது. இதில் கிறிஸ்துவர்களான நாங்கள் வந்து குட்டையை குழப்பிவிட்டோம் என்று புரிகிறது.

என் கிறிஸ்துவ நண்பர்களுக்கும் இதையே சொல்லிக்கொள்கிறேன். நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைக்கு இந்து மதத்துக்கு திரும்பி வாருங்கள். நான் முன்னரே கிறிஸ்துவனாக இருந்தேன் என்பதால் அதில் எப்படி மூளைச்சலவையாகியிருக்கும் என்று புரிந்தே எழுதுகிறேன்.
-திருநாவுக்கரசு

நானும் எத்தனைதான் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இவர்களுக்கு பதிலளிக்காமற் போனாலும் இதுபோன்ற கீழ்த்தரமான புனைவுகளால் ஒரு சில் அப்பாவிகளாவது பாதிக்கப்படுவார்களே என்ற வைராக்கியம் என்னை உந்தித் தள்ளவும் நான் அளித்த பதில் பின்வருமாறு:

திரு.ராபர்ட் ஸ்டான்லி (திருநாவுக்கரசு)அவர்களே, தங்கள் குள்ளநரித்தனம் தங்கள் பெயரைக் குறிப்பிட்டதிலேயே தெரிகிறது; தாங்கள் பெயரை மாற்றிய பிறகும் ஏன் பழைய உதவாத கிறித்தவ பெயர் உங்களுக்கு..?

நானும் இயேசுவை வணங்குகிறேன்,
பிணமாக அல்ல, உயிர்த்தெழுந்த இரட்சகராக;

அதன் ஆதாரத் தத்துவம் எந்த உயிர்க்குமே மரணம் என்பதில்லை,
அது ஒரு மறுஜனனம் மட்டுமே (ஜன்மம் அல்ல…)-
அவனவனுக்குரிய பலனையடைய நித்திரையிலிருந்து எழும்புவதுபோல எழும்பவேண்டும் என்பதே;

இந்த மேலான நம்பிக்கை எனக்குள் இருப்பதால் என்னைச் சுற்றி நடக்கும் எதுவும் என்னை பாதிப்பதுமில்லை;அதற்கு நான் இறைவனைக் குற்றவாளியாக்குவதுமில்லை;

அவனவன் தத்தமது சுய இச்சையினால் இழுப்புண்டு சோதனையில் சிக்கிக் கொள்ளுவதாலேயே துன்பம் ஏற்படுகிறது என்று வேதம் சொல்லுகிறது;ஒருவருடைய தவறு மற்றும் துன்பம் அவரைச் சார்ந்தவரையும் பாதிப்பது மனித இயல்பு;இதற்கும் தெய்வ நம்பிக்கை மற்றும் தொழுதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

தங்கள் புத்தி ஆரோக்கியப்படாமல் மாரியம்மாளும் சரி மேரியம்மாளும் சரி எதுவும் செய்திட‌ இயலாது என்பதையறிய வேண்டுகிறேன்;

தாங்கள் மெய்யாகவே பாதிக்கப்பட்டிருந்தால் எனது கருத்து தங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்;

மற்றபடி உங்களைப் போல ஓராயிரம் பேர் எழும்பினாலும் கிறித்துவின் நற்செய்தியின் பாக்கியங்களைத் தடுத்துவிடமுடியாது;

சாம்ராஜ்யங்களும் சக்ரவர்த்திகளும் சர்வாதிகாரிகளும் நாத்திகமும் செய்திட முடியாததையா நீங்கள் செய்துவிடமுடியும்..?

என்னுடைய இந்த பதிலைத் தொடர்ந்து… ram, on June 20, 2010 at 22:31 Said: என்பவர்
// கோடான கோடி மக்களை ரத்தத்தைக் காட்டி பயமுறுத்தி மூளைச்சலவை செய்யும் கூட்டத்தில் உண்மையை உடைத்துப் பேச ஒருவரேனும் உளரே என்று நினைத்து மகிழ்கிறேன்.  //

நான் பின்வருமாறு எனது கருத்தை முன்வைக்கிறேன்: யாரோ ஒரு டுபாக்கூர் இங்கே வந்து எதையோ சொன்னார் என்பதற்காக யாரும் மகிழ்ந்துவிடவேண்டாம்;இந்த வரிகளை வாசிக்கும்போதே அவரவர் மனசாட்சியிலிருந்து தொனிக்கும் சத்தம் சத்தியத்தை உரைக்கும்;

யார் மூளைச் சலவை செய்பவர், யார் இரத்தத்தைக் காட்டி பயமுறுத்திப் பணிய வைப்பவர், யார் இரத்தஞ்சிந்தவும் காவு வாங்கவும் உயிர்களை எடுக்கவும் அலைபவர் என்பது தற்கால நாகரீக சமுதாயத்துக்கு நன்றாகவே தெரியும்;

ஊர் எல்லைகளில் சாமியாடி குறிசொல்லும் ஐயனாரின் பக்தனைக் கேளும்,

கருப்பனுக்கு பலியிட்டு ஆட்டின் கழுத்தை வெட்டி இரத்தத்தை உறிஞ்சி குடித்து கூடியிருக்கும் ஜனத்தை மிரட்டும் பூஜாரியைப் பாரும்;

முனியாண்டி என்றும் மாயாண்டி என்றும் அங்கே தூணில் என்றும் இங்கே துரும்பிலும் என்றும் படிப்பறிவில்லாத ஏழை எளியோரைக் கொள்ளையிடும் பிசாசின் தூதுவர்களைக் கேளும்;

உயிரை எடுப்பவரா,
உயிரைக் கொடுப்பவரா?
இரத்தம் கேட்பவரா,
இரத்தம் சிந்தி மீட்டவரா?
யார் உனக்கு சொந்தம் என்று சிந்தித்துப் பாரும்;

என்று இத்தனை தெளிவாக என்னுடைய கருத்தை முன்வைத்தும் அதற்கு வந்த பதில் எத்தனை மேலோட்டமாக இருக்கிறது என்று வாசகரே சொல்லட்டும்…

//ஊர் எல்லைகளில் சாமியாடி குறிசொல்லும் ஐயனாரின் பக்தனைக் கேளும், கருப்பனுக்கு பலியிட்டு ஆட்டின் கழுத்தை வெட்டி இரத்தத்தை உறிஞ்சி குடித்து கூடியிருக்கும் ஜனத்தை மிரட்டும் பூஜாரியைப் பாரும் //
அஹிம்சை என்பது இந்திய தத்துவத்திலே முக்கிய அம்சமாகும். இந்து, புத்த , சமண மதங்கள் அஹிம்சையை போதிக்கின்றன. கொல்லாமை என்பது பற்றி வள்ளுவர் , திருக் குறளில் தனி அதிகாரம் அமைத்து அறிவுரை வழங்கி இருக்கிறார். . வயதான பலர் புலால் உணவை உடல் நலம் கருதி விட்டு விடுகின்றனர். அதே நேரத்திலே புலால் உணவு உண்ணவே கூடாது என்று இந்து மதம் தடை போடவில்லை. உலகின் எல்லாப் பகுதிகளிலும் மக்கள் புலால் உணவு உண்பது போல இந்தியாவிலும் புலால் உண்கின்றனர். அப்படி புலால் உணவுக்காக ஆட்டை வெட்டும் போது, அதை கடவுளுக்கு படைத்து விட்டு உன்ன விரும்புகின்றனர். அவரவர் தனக்குப் பிடித்த உணவை தனக்குப் பிரியமானவருடன் பகிர்ந்து கொள்வது போன்றதே இது. இந்தியாவின் பல கோவிலகளில் பல வழிபாட்டு முறைகள் உள்ளன. பழனி, திருத்தணி உள்ளிட்ட எந்த முருகர் கோவிலிலும் ஆடு ,மாடுகளைப் பலியிடுவது இல்லை. கிராமக் கோவிலகளில் ஆடு மாடுகளைப் பலியிடுகின்றனர். இதில் பெரிய தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் ஆட்டைப் பலியிடும் பூசாரி, மக்களை மிரட்டுவதற்காக அப்படி செய்யவில்லை. எந்த ஒரு உயிரும் கொல்லப் படுவது, பரிதாபமான , உள்ளத்தை உருக்கும் செயலே. ஆனால் ஆடோ, கோழியோ அதைக் கொன்றுதான் சாப்பிடுகிறார்கள். அதை இறைவனுக்கு பலி கொடுப்பதாக கோவிலிலே வெட்டுகிறார்கள். பலி கொடுக்கும் பூசாரியும் சரி, அந்த நிகழ்ச்சயில் பங்க்கேடுப்பவரும் சரி, பிற மார்க்கத்தின் மீது , வெறுப்புக் கருத்துக்களைத் தூண்டவோ, பரப்பவோ இல்லை. எந்த ஒரு மனிதன் மீதும் வெறுப்புனரச்சியை தூண்டவும் இல்லை.
சகோதரர் சில்சாம் கொல்லாமை தத்துவத்தை, அஹிம்சை தத்துவத்தை ஆதரிப்பதை நான் வரவேற்கிறேன். சகோதரர சில்சாம், அவருடைய சுற்றத்தார் மற்றும் நண்பர்களிடம் கொல்லாமை தத்துவத்தை, அஹிம்சை வாழ்க்கை முறையை பரப்புவார் என்று நம்புவோம்.

அதோடு அத்வேஷ்டா சிந்தனைகளுக்கு , வெறுப்பை நீக்கிய சமரச அமைதி சிந்தனைகளுக்கு வருவார் எனவும் நம்புவோம், அது இயேசு கிறிஸ்து எந்த ஒரு விட்டுக் கொடுக்கும் பாதையை சொன்னாரோ அந்தப் பாதைக்கு அவர் வருவதாக அமையும்.
இதற்கு மேலும் அங்கே எனது பின்னூட்டத்தை இட்டு எனது கருத்துக்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்க எண்ணி இங்கே கட்டுரையாக அதனை வடித்திருக்கிறேன்;தற்போது வாசகர் தங்கள் கருத்தினை சுதந்தரமாகத் தெரிவிக்கலாம்;
எனக்கு பதில் சொல்வதென்றால் திருச்சிக்காரனுக்கு அல்வா சாப்பிடுவது போலவாம்;ஆனாலும் அவர்‘அபிஷ்டு ‘ மாதிரி எதையாவது உளறுவதையே சகித்துக்கொள்ள முடியவில்லை;

நான் தீர்க்கமாகவும் தொகுப்பாகவும் சொல்லும் அனைத்து  கருத்துக்களையும் முழுவதும் புறக்கணித்துவிட்டு நுனிப்புல் மேய்வது போலவும் முழுக்க நனைந்தும் சிலிர்க்காதது போலவும் ஓரிரு வரிகளைக் கொண்டு மேலோட்டமாக சிலதை சிந்திவிட்டுச் செல்லும் போது மிகவும் சோர்வாகவே இருக்கிறது;

மொத்தத்தில் நம்மைக் கிண்டி கிழங்கெடுப்பதில் சிறப்பான பணியாற்றி வருகிறார், அது எதிர்விளைவாகப்போகும் ஆபத்தையறியாமலே..!

இவர் அடிக்கடி சொல்லும் ‘அத்வேஷ்டா’ எனும் வார்த்தையைக் குறித்த மேலதிகத் தகவலை தளத்தில் தேடியபோது அருமையான விடயங்கள் கிடைத்தன;அவற்றைப் படித்தபோது நாம் நம்முடைய பொன்னான நேரங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறோமே என்ற குற்ற உணர்வே ஏற்பட்டது; அதற்கொரு உதாரணமே கீழ்க்காணும் தொடுப்பு.

http://mathimaran.wordpress.com/2010/02/03/artical-277/

‘அத்வேஷ்டா’எனும் வார்த்தையைத் தானே வேறு மொழியில் வேறு நோக்கத்தில் ஒண்ணாங்கிளாஸ் புத்தகத்திலிருந்து முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கக் காண்கிறோம்?

// அஹிம்சை என்பது இந்திய தத்துவத்திலே முக்கிய அம்சமாகும்;இந்து,புத்த,சமண மதங்கள் அஹிம்சையை போதிக்கின்றன. //

தங்கள் விதண்டாவாதத்தின் தாறுமாறுகளைக் கொஞ்சம் அடக்கினால் ந‌ல்லது; இந்தியாவில் பௌத்தமும் சமணமும் தோன்றிய பிறகே மிருகபலி நிறுத்தப்பட்டது என்பது வரலாறு;

இந்த விவரம் சென்றடையாத குக்கிராமங்களில் அது இன்னும் தொடருகிறது; அப்படியானால் காலங்காலமாக இறைவனுக்கு பலிசெலுத்தவும் வேட்டைக்காகவும் விருந்துக்காகவும் மிருகங்கள் கொல்லப்பட்டதும் இன்னும் யுத்த களத்தில் குதிரைகளும் யானைகளும் பலியானது

ம் எளிதில் தெரியவரும் தனி கணக்கு;

ஆரியத்துக்கு எதிராக அணிவகுத்த சமண மார்க்கப் பெரியோர்களை கழுவேற்றிய அக்கிரமமும் அரங்கேறியது;இந்து மார்க்கத்துக்கோ அதன் தத்துவங்களுக்கோ சற்றும் பொருந்தாத பௌத்தம் மற்றும் சமணத்துடன் தம்மையும் வெட்கமில்லாமல் சிலர் இணைத்துக்கொள்கின்றனர்;

இன்றைக்கு சுமார் 2000 வருடத்துக்கு முன்பே பேரரசர் அசோகரை யுத்த இரத்த வெறியிலிருந்து திருப்பிய புகழ் வாய்ந்தது பௌத்தம்;

ஆனால் இன்று வரை கிருஷ்ணனையும் இராமனையும் (யுத்தகளத்தில் பிதற்றியதாகச் சொல்லப்படும் ) கீதையையும் மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இந்து மார்க்கத்தார் அச்சுறுத்தும் சின்னங்களை உடலில் அணிந்தும் யுத்த ஆயுதங்களை தங்கள் ஆலயத்தில் நிறுத்தியும் மார்க்க பிரிவினைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்;

வில்லையும் அம்பையும் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?
வேலையும் சூலத்தையும் பார்க்கும்போது எப்படியிருக்கும்?
யாருக்கு எதிராக யார் செய்யும் யுத்தம் இது?
அதை வணங்குபவருக்கே அது வெளிச்சம்..!

// கொல்லாமை என்பது பற்றி வள்ளுவர்,திருக்குறளில் தனி அதிகாரம் அமைத்து அறிவுரை வழங்கி இருக்கிறார் //

அந்தணனல்லாத வள்ளுவன் என்ன சொன்னால் உமக்கென்ன?
திருப்புகழை தெருப்புகழாக எண்ணி வைணவ வழிபாட்டில் தடுக்கும் தீட்சிதர்கள் இருக்கும் வரை வள்ளுவரை எந்த மார்க்கமும் சொந்தங் கொண்டாட முடியாது;கற்பூரமான வள்ளுவத்தின் வாசனையறியாதோர்க்கு அதன் மேன்மையானது புரிய வந்தது எப்போது?

வைக்கோல் போர் அருகே படுத்திருக்கும் நாயானது அதன் அருகே வரும் மாட்டைப் பார்த்து குலைக்குமாம்,அது தனக்கு உரிமையானது என..!

தானும் பயன்படுத்தாமல் அடுத்தவனையும் பயன்படுத்தவிடாமல் தடுத்து தப்பித் தவறி அதனை யாராவது தொட்டுவிட்டால் ஊரைக் கூட்டும் அந்த நாயை வெக்கப்போர் நாய் என ஊர்பக்கம் சொல்வதுண்டு;

திராவிட இனத்தின் மேன்மையையும் அதன் மொழி வளத்தையும் கண்டறிந்து அதற்கு இலக்கணம் அமைத்துத் தந்து உலகப் பொதுமறை என்று நாத்திகரும் கொண்டாடும் குறளை அடையாளம் காட்டியது இந்துக்களல்ல;தியாகச் செம்மல்களான மிஷினரிகளே;

அவர்களையும் உங்கள் மார்க்கத்தினர் கொஞ்சமும் நன்றியுணர்வில்லாமல் காழ்ப்புணர்ச்சியுடன் “மிஷி நரிகள்” என்று வேண்டுமென்றே சூழ்ச்சிக்காரர்களைப் போலக் குறிப்பிடுகின்றனர்;

// வயதான பலர் புலால் உணவை உடல் நலம் கருதி விட்டு விடுகின்றனர் //

ஜீரண உறுப்புகளும் அரைவை இயந்தரமும் பழுதுபட்டபின் வேறு வழி?

// அதே நேரத்திலே புலால் உணவு உண்ணவே கூடாது என்று இந்துமதம் தடை போடவில்லை //

அப்ப ஏனய்யா, வாடகைக்கு வீடு தேடிச் சென்றால் சில இடங்களில் “ஒன்லி வெஜிடேரியன் (only vegetarian)” போர்டுகள் தொங்குகிறது?
இங்கே “அத்வேஷ்டா” செல்லுபடியாகாதா?

// உலகின் எல்லாப் பகுதிகளிலும் மக்கள் புலால் உணவு உண்பது போல இந்தியாவிலும் புலால் உண்கின்றனர் //

புலால் என்று நாகரீகமாகச் சொன்னாலும் நீங்கள் பசுவதை குறித்தே சொல்ல வருவதாகத் தோன்றுகிறது;

பசு மட்டுமல்ல,யாகத் தீயில் எரியும் குதிரையின் மாம்சத்தை அந்தணன் புசித்து சாராயம் போன்ற சோமபானத்தைக் குடித்தாலே யாகம் நிறைவேறும் என்பது ஐதீகம்;

இப்போது சொல்லுங்கள், சைவப் பிரியர்களான தமிழ் மன்னர்களை மாம்ச பக்ஷிணியாக்கியது யாரென்று..!

// அப்படி புலால் உணவுக்காக ஆட்டை வெட்டும்போது,அதை கடவுளுக்கு படைத்து விட்டு உண்ண‌ விரும்புகின்றனர் //

ஒன்றுக்கும் உதவாத சப்பைக்கட்டுக்கு சிங்காரம் சேர்க்க இத்தனை அலம்பலா? பலியிடும் நோக்கத்துடன் ஆட்டை வெட்டுவதற்கும் இறைச்சிக்காகவே வெட்டுவதற்கும் நிரம்ப வித்தியாசமுண்டு;

பலியிடும் கட்டளையினை யூதர் பெற்ற நோக்கமே இறைவனைக் குஷிப்படுத்துவதல்ல;இறைவன் மாம்சம் புசித்து இரத்தம் குடிக்கும் அரக்கனல்ல;அல்லது சிவனுமல்ல;

பலியாடு அல்லது எந்த உயிரும் துடிக்கும் போது அது மனிதனின் பிரதியாக நிற்கிறது;அப்போது தவறு செய்த மனிதன் அங்கே அதன் உயிர்த் துடிப்பைப் பார்த்து மனம் வருந்தி இனியும் அந்த தவறைச் செய்யக்கூடாது என்பதே பலியின் நோக்கம்;

அதற்கு நீண்டகாலத்துக்குப் பிறகு வந்ததே இறைச்சிக்காக ஆடு,மாடுகளை வெட்டுவதாகும்;

// அவரவர் தனக்குப் பிடித்த உணவை தனக்குப் பிரியமானவருடன் பகிர்ந்து கொள்வது போன்றதே இது //

இறைவன் கட்டளையிடாத ஒரு உணவை தானும் புசித்து அவருக்கும் ப்டைக்க வேண்டிய அவசியமென்ன?

இதுவே இந்து மார்க்கத்தின் சிறப்பு..!
தனியாகச் செய்தால் குற்றம்,சேர்ந்து செய்தால் ஐதீகம்..!

// இந்தியாவின் பல கோவிலகளில் பல வழிபாட்டு முறைகள் உள்ளன; பழனி,திருத்தணி உள்ளிட்ட எந்த முருகர் கோவிலிலும் ஆடு,மாடுகளைப் பலியிடுவது இல்லை; //

பழனி முருகன் கோவில் என்பது அறுபடைத் தளங்களில் ஒன்றல்ல என்று விஜ்ய் டிவி யின் “யாமிருக்க பயமேன்” தொடரில் வருகிறது;

இதன்படி இந்த தலமே இடைப்பட்ட காலத்தில் வேறு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது;

அதற்கு ஆதாரமாக சமணத் துறவியைப் போன்ற தோற்றத்தில் முருகன் நிறுத்தப்பட்டதையும் சொல்லுகிறார்கள்;

எப்படியிருப்பினும் இவையெல்லாமே கடந்த சுமார் 2000 வருடத்துக்குள் நிகழ்ந்தவையே;இதைக் கொண்டு இந்த தெய்வங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் தொன்மை வாய்ந்ததாகக் கொள்ளமுடியாது;

ஆரியர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொண்ட காரணத்தாலேயே -அதாவது இங்கே சைவம் வேரூன்றியிருந்த காரணத்தாலேயே -அதற்கு எதிராக எதையும் செய்து பிழைப்பைக் கெடுத்துக் கொள்ளாமல் ஒத்துப்போய்விட்டனர்;

// கிராமக் கோவிலகளில் ஆடு மாடுகளைப் பலியிடுகின்றனர்; இதில் பெரிய தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை; //

எனக்கும் அப்படித் தெரியவில்லை;ஆனால் அப்படி நேர்ந்து விட்டாலே சாபம் தீரும்,ஆத்தா மனங்குளிரும்,மழை பொழியும் என்று மக்கள் மனதை வக்கிரமாக்கியது யாருடைய சூழ்ச்சி..?

// இதில் ஆட்டைப் பலியிடும் பூசாரி,மக்களை மிரட்டுவதற்காக அப்படி செய்யவில்லை; //

மஞ்சத் தண்ணிய தெளித்து ஆடு தலையை சிலுப்பும் கணத்தில்
அதையே அது பலியாக சம்மதிப்பதாக எண்ணி ஒரே போடு போடும் சாதாரண பலியை நான் சொல்லவில்லை;

அதைவிடக் கொடூரமாக ஒரு ஆட்டை வெட்டி அந்த உயிர் துடித்து அடங்குவதற்குள்  – கொப்பளித்துப் பொங்கும் இரத்தத்தைக் குடிக்கும் மந்திரவாதியைக் குறித்தே கேட்கிறேன்;

அது இரத்தவெறியைத் தூண்டுகிறதா, இல்லை சிலுவையில் பரிதாபக் கோலத்தில் தொங்கும்இயேசுவானரின் தோற்றம் இரத்தவெறியைத் தூண்டுகிறதா என்பதே கேள்வி.

// எந்த ஒரு உயிரும் கொல்லப்படுவது,பரிதாபமான,உள்ளத்தை உருக்கும் செயலே; ஆனால் ஆடோ,கோழியோ அதைக் கொன்றுதான் சாப்பிடுகிறார்கள்; அதை இறைவனுக்கு பலி கொடுப்பதாக கோவிலிலே வெட்டுகிறார்கள்; பலி கொடுக்கும் பூசாரியும் சரி, அந்த நிகழ்ச்சயில் பங்க்கேடுப்பவரும் சரி, பிற மார்க்கத்தின் மீது,வெறுப்புக் கருத்துக்களைத் தூண்டவோ, பரப்பவோ இல்லை; எந்த ஒரு மனிதன் மீதும் வெறுப்புணர்ச்சியைத் தூண்டவும் இல்லை. //

‘காமாசோமா’வென்று எதையோ சொலவதென்பது இதுதான்;
ஒரு ஆடு பலியிடப்படுவதன் நோக்கம் என்ன? அதில் ‘அத்வேஷ்டா’ இல்லையா? இறைவன் மீதான‘அத்வேஷ்டா’ஆட்டின் மீதும் ஆட்டின் மீதான ‘அத்வேஷ்டா’அதனை உண்பதிலும் தனக்கு சூனியம் வைத்தவனை பழிவாங்கும் ‘அத்வேஷ்டா’ஆட்டின் மீதும் இறங்க பூஜாரியின் பாக்கெட்டை நிரப்புகிறது;

ஒரு தனி மனிதனின் சிந்தையிலோ வாழ்க்கையிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத இதுபோன்ற மூடநம்பிக்கைகளை ஒழிக்க அதன்மீதும் அந்த போலியான அமைப்பு மற்றும் பூஜா முறைகள் மீதும்‘அத்வேஷ்டா’ வந்தே ஆகவேண்டுமா..?

// சகோதரர் சில்சாம் கொல்லாமை தத்துவத்தை,அஹிம்சை தத்துவத்தை ஆதரிப்பதை நான் வரவேற்கிறேன்; சகோதரர் சில்சாம்,அவருடைய சுற்றத்தார் மற்றும் நண்பர்களிடம் கொல்லாமை தத்துவத்தை,அஹிம்சை வாழ்க்கை முறையை பரப்புவார் என்று நம்புவோம். //

இதுபோன்ற புதிய பொறுப்புகளைச் சுமக்கும் தோள்பலம் எனக்கில்லையே; நான் சாதாரண வழிப்போக்கன் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்;

இப்போதும் சொல்கிறேன்,கொல்லாமை என்பது உயிர்களை மட்டுமல்ல,என்னுடைய வேதம் சொல்லுகிறது,காண்கிற சகோதரனை வெறுப்பதும் கொலைக்கு சமானமே;அவனுக்கு தேவ அன்பைச் சொல்லி நல்வழிப்படுத்த முயன்றால் அது ‘அத்வேஷ்டா’ என்கிறீர்கள்;

சர்வ வல்ல இறைவனின் ‘அத்வேஷ்டா’ மானுடவதாரமெடுத்து வந்து பாவம் போக்க பலியானதானால் எனது ‘அத்வேஷ்டா’அந்த நற்செய்தியை பரப்புவதே;

சாராயம் விற்பவனும் தாயத்து விற்பவனும் பெண்ணடிமைத்தனவாதியும் ஊரை அடித்து உலையில் போடுபவனும் ‘அத்வேஷ்டா’குறித்துப் பேசமுடியாது;

// அதோடு அத்வேஷ்டா சிந்தனைகளுக்கு,வெறுப்பை நீக்கிய சமரச அமைதி சிந்தனைகளுக்கு வருவார் எனவும் நம்புவோம், அது இயேசு கிறிஸ்து எந்த ஒரு விட்டுக் கொடுக்கும் பாதையை சொன்னாரோ அந்தப் பாதைக்கு அவர் வருவதாக அமையும். //

முழுப்பூசணிக்காயை புளியோதரைப் பொட்டலத்தில் மறைப்பது போல இயேசுகிறிஸ்துவுக்கே புதுவிளக்கம் கொடுக்கிறார்,நண்பர்;

யாரிடம் எங்கே எதை இயேசுவானவர் விட்டுக் கொடுத்தார் என்பதை எங்களிடம் கேளுங்கள்; இயேசுவானவரின் மொத்தப் பணிக்காலமே 3.5 வருடம் மட்டுமே; அதாவது ஆயிரத்து சொச்சம் நாட்களே..!

அவர் வந்த பிரதான நோக்கம் மனுக்குல முக்திக்காக பலியாவதே;
இதில் எங்கே யாரிடம் அவர் சமரசம் செய்தார்?

நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல (இலங்கையின் “கருணா” போல..!) அவர் சமரசம் செய்திருந்தால் யூதர்களின் சுயாட்சி பிரதேசத்தின் தலைவராகவும் ரோம அரசாங்கத்தின் சர்வ மேன்மையையும் பெற்றவராகவும் வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்திருக்கமுடியும்;

ஆனால் அவர் தம்மை தாம் வெறுத்து அடிமையின் ரூபமெடுத்து பலியாக தேவ ஆட்டுக்குட்டியாகத் தம்மைத் தாழ்த்தினார் என்று வேதம் கூறுகிறது.

//மறுஜனனம் (ஜன்மம் அல்ல…) //

அடக்கருமமே! ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான். 

ரொம்ப புத்திசாலியாட்டும் பிரிச்சு வேற சொல்றாரு பாருங்க. பாவம் ஏமாளி மக்கள்!

//கருப்பனுக்கு பலியிட்டு ஆட்டின் கழுத்தை வெட்டி இரத்தத்தை உறிஞ்சி //

அய்யய்யே! நான் சொன்னது இந்த ரத்தம் பத்தி இல்லய்யா!
ஏசுவின் ரத்தம் பத்தி சொல்றேன். ஆட்டுமந்தை மாதிரி கூட்டமா மக்களை கூட்டி வெச்சு, வானத்தில் இருந்து ரத்தம் வழிகிறது, இதோ ஏசுவின் ரத்தம் வழிகிறது, இதோ வந்து விட்டது, உங்கள் மூஞ்சியில் விழுந்து விட்டது, துடைத்துக்கொள்ளுங்கள், இந்த ரத்தம் தான் உங்கள் பாவங்களைக் கழுவப்போகிறது என்று சொல்லி மக்களை ஒரு பீதியில் ஆழ்த்தி ரத்தம் பற்றி பயத்தை உண்டாக்கி மூலைச்சலவை செய்து வைத்திருக்கிறீர்களே அதை பற்றி சொல்கிறேன். புரிஞ்சிக்காத மாதிரியே எவ்வளவு தான் நடிப்பீங்களோ!

இதற்கு என்னுடைய பதில்:

ஹலோ மிஸ்டர் புத்திசாலி,
உங்க கோடாங்கி, துள்ள துடிக்க ஆட்டை வெட்டி, அதன் இரத்தத்தைக் குடிச்சா எதிரே இருப்போர் பாவ தோஷமனைத்தும் போகும் என நீர் நம்பினால் இயேசுவின் இரத்தத்தால் பாவம் நிவர்த்தியாகும் என்பதை நான் நம்பக்கூடாதோ..?

எங்க மூளைய சலவைய செஞ்சி சுத்தமா வெச்சுருக்கோம்,தேவைப்பட்டா நீரும் டிரை பண்ணிப்பாரும்…களிம்பு இருந்தா சுத்தம் பண்ணித்தானே ஆகணும்..?