Tag Archive | church

உலகமயமாகும் திருச்சபை..!


அன்பான நண்பர்களே,

நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையை அடுத்த ஒரு ஊரில் இந்திய சுவிசேஷ திருச்சபையின் ஆலய பிரதிஷ்டை நடைபெற்றது. இந்த ஆல்யமானது மறுநிர்மாணம் செய்யப்பட்டதாகும். அதாவது ஏற்கனவே இருந்த ஆலயத்தை மேம்படுத்தி கட்டியிருக்கிறார்கள்.இதற்காக சபையார் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தைக் கூட தியாகமாகக் கொடுத்திருக்கிறார்கள். கிறிஸ்தவம் என்றாலே வெளிநாட்டு பணத்தில் நடைபெறுவது எனும் எண்ணம் இன்னும் நமது சமுதாயத்தில் இருக்க இதன் பின்னணியில் உள்ள வேதனைகளும் தவிப்புகளும் யாருக்கும் தெரிய நியாயமில்லை. கிராமத்திலோ நகரத்திலோ ஒரு  ஆலயம் கட்டப்படுவதற்கு அதன் தலைமை பீடமான பேராயமோ குருசேகரமோ பெரிய உதவிகள் எதுவும் செய்கிறதில்லை.ஆலயத்தின் உறுப்பினர்களான குடும்பங்களே அதை முன்னின்று செய்கிறார்கள். போதாக்குறைக்கு பேராயரை வரவேற்று பெருமைப்படுத்தும் செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டியதிருக்கிறது.

இந்நிலையில் இத்தனை தியாகத்துடனும் கடவுள் மீதான அன்புடனும் எல்லாவித இறையச்சத்துடனும் நடைபெறும் இக்காரியத்தில் ஆடம்பரங்களும் ஆர்ப்பாட்டங்களும் பொதுமக்களை முகம் சுளிக்கவைக்குமோ என்பது நம்முடைய எண்ணமாகும். ஒரு காரியத்தை குறைசொல்லுவதல்ல நம்முடைய நோக்கம் அந்த காரியம் இறைவனுடைய பார்வையில் ஏற்புடையதாக இருக்கிறதா என்பதே நம்முடைய கேள்வி.

பவுலடிகள் சொல்லுகிறார்,

    ரோமர் 12:2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

-என்பதாக.  எனவே கிறிஸ்துவுக்காக நிற்பதாகச் சொல்லிக்கொள்ளும் நாம் ஆர்ப்பாட்டங்களையும் கொண்டாட்டங்களையும் பதாகைகளையும் தவிர்த்துவிட்டு தியாகத்தையும் உண்மையையும் மையமாகக் கொண்டு இயங்கவேண்டும். ஏனெனில் நம்மை பார்க்கும் மக்கள் நம்மில் இயேசுவைப் பார்க்கவேண்டும் என்பதே நம்முடைய இரட்சகர் நமக்காக நியமித்துள்ள இலக்காகும். ஒருவேளை உலக மக்களுக்கு பட்டாசுகளும் ஒரு மனுஷனைப் போற்றித் துதிக்கும் பேனர்களும் வரவேற்புகளும் ரதங்களும் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அது நமக்கு தகுதியல்லவே,இதை எப்படி பேராயமும் குருசேகரமும் அனுமதிக்கிறது என்று புரியவில்லை.

பல இலட்சம் செலவில் அமைக்கப்படும் முகப்பு கோபுரத்துக்கும் மணிகூண்டுக்கும் செய்யப்படும் செலவில் இன்னொரு ஆலயத்தையே கட்டிவிடலாம்.அல்லது நாலைந்து ஏழை பிள்ளைகளுக்கு திருமணம் செய்யலாம்.அல்லது ஏழெட்டு ஏழை மாணவர்களைப் படிக்க வைக்கலாம். திருச்சபையானது இனியும் இதுபோன்ற காரியங்களில் இறைவனை முன்னிட்டு படைக்கப்படும் புனிதமான காணிக்கைகளை செலவிடாமல் எச்சரிக்கையுடனிருக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இறுதியாக ஒரு சிந்தனை, சுமார் 20 வருடத்துக்கு மேலாக குறிப்பிட்ட சபை ஒரு பகுதியில் இருக்கிறது.குருவானவர்,கமிட்டியார் மற்றும் விசுவாசிகள் உட்பட பலர் வருகிறார்கள்,பலர் போகிறார்கள்.ஆனாலும் அந்த சபையானது சமுதாயத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அந்த சபையில் பங்கேற்கும் குடும்பங்களின் சராசரி எண்ணிக்கை மாறவேயில்லை. இப்படியிருக்க எப்படி எதை முன்னிட்டு இத்தனை ஆர்ப்பாட்டம் செய்து விழா எடுக்க மனம் வருகிறது என்று புரியவில்லை. இயேசுவுக்காக இதையெல்லாம் செய்கிறோம் என்போமானால் நடைபெற்ற நிகழ்ச்சியில் எந்த இடத்தில் இயேசு மகிமைப்பட்டார் என்று நாம் யோசிக்கவேண்டும்.

இங்கே சொல்லப்பட்டிருப்பவையெல்லாம் ஒரு சாம்பிளுக்கு தான். திருச்ச்பையின் தற்கால நிலைமைக்கு இவையெல்லாம் ஒரு உதாரணம் மட்டுமே.  கிறிஸ்துவின் வருகைக்காக ஆயத்தமாவதாக சொல்லிக்கொள்ளும் நாம் இனியும் இதுபோன்ற காரியங்களில் நமது பெலனையும் நற்பொருளையும் செலவழிக்காமல் வேத வசனத்துக்கு அஞ்சி நடந்து திருச்சபை முன்னோடிகளின் மரபுகளை மீட்டெடுக்கவும் அதன்படி நடக்கவும் வேண்டும்.

This slideshow requires JavaScript.

சாலமோன் ராஜாவைவிட பிரம்மாண்டமான ஆலயத்தை சர்வ வல்ல தேவனுக்காகக் கட்ட ஒருவராலும் கூடாது. தேவனுடைய மகிமை இறங்கி தங்கியிருந்த அதுபோன்றதொரு ஆலயமும் வேறு இருந்ததில்லை.அந்த மேன்மைமிகு ஆலயமே தீக்கிரையாக்கப்பட்டு மண்மேடானதே. எனவே வேதமும் சொல்லுகிறது,

அப்போஸ்தலர் 7:48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.

அப்போஸ்தலர் 17:24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.

யோவான் 8:32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

Advertisements

தாய்மதம் திரும்பும் இந்துக்கள்..!


// திருநெல்வேலி:

பிற மதங்களில் இருந்து, இந்து மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி, நேற்று நெல்லையில் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நெல்லையில் நேற்று மதமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதமாறும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பார்வதி சேஷ மகாலில் நடந்தது. இதில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் கிறிஸ்தவர்கள். சுத்தி ஹோமம் நடத்தப்பட்டு, அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமிகள் அவர்களுக்கு வீட்டில் பூஜை செய்ய விளக்குகள் வழங்கி, ஆசிர்வதித்தார்.

இது குறித்து வி.எச்.பி.,மாநில கோபாலரத்தினம் கூறுகையில், “”இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, இந்து மக்கள் மட்டுமே கேட்டு அதன்படி நடக்கிறார்கள். இதனால், மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.

மதமாற்றத்திற்காக, ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் விதைக்கின்றன. “இந்தியாவில் அறுவடை’ என்ற பெயரில் முகாம் நடத்தி, மதமாற்றங்களை நடத்துகின்றனர். ஆனால், மற்ற மதங்களுக்கு செல்லும் மக்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அங்கேயும் ஆலய வழிபாட்டில் பேதம், இடுகாடு போன்றவற்றில் ஜாதிப் பிரச்னை நீடிக்கிறது.

எனவே, தாய் மதமான இந்து மதத்திற்கு பலரும் தாங்களாகவே விண்ணப்பித்து மாறுகிறார்கள். நாங்களும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா… அரசின் நலத் திட்டங்களுக்காக மாறுகிறார்களா… என, ஆலோசித்தே சான்றிதழ் வழங்குகிறோம், என்றார். நிகழ்ச்சியில் தர்மபிரசார் அமைப்பாளர் பெருமாள், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். //

http://www.dinamalar.com/district_detail.asp?id=172793

மேற்கண்ட தினமலர் பத்திரிகையின் விஷமமான செய்தியை வாசித்ததும் பயங்கரமான சிரிப்பு வந்தது;மீனவர்கள் கடலுக்குச் சென்று வலைவீசி மிகுந்த பிரயாசத்துடன் மீன்பிடிக்கிறார்கள்;அப்படி பிடிக்கப்பட்ட மீன்களிலிருந்து சிலது கரையேறும் முன்பே துள்ளி கடலில் வீழும்;அங்கே அவற்றை விழுங்க திமிங்கலங்கள் காத்திருக்கும்;அதுபோலவே மனித வாழ்க்கை என்பது உள்ளேயும் சரி, வெளியேயும் சரி துன்பங்கள் நிறைந்தது;அநித்தியமானது;இதில் எங்கே இருந்தால் என்ன‌?

ஏன் சிரிப்பு வந்தது என்றால் இந்த நாளிதழ் நல்ல தரமான நிருபர்களை உடையதானாலும் இந்த குறிப்பிட்ட செய்தியின் வாசகங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்,இதில் பக்கத்தை நிரப்ப எதையாவது எழுதவேண்டுமே..!

இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக இந்துக்களின் தொகை வேகமாக குறைந்து வருகிறதாம்;மேலும் மதமாற்றத்தின் காரணமாகவும் இந்துக்கள் தொகை குறைந்து வருகிறதாம்;மதம் மாறியவர்கள் இந்தியாவில் தானே இருக்கிறார்கள்? அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும்? இந்த தேசபக்தர்கள் இந்தியாவை சுரண்டி வெளிநாடுகளில் இலட்சம் கோடிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்களே,அதுவல்லவா இந்தியாவை பெலவீனப்படுத்தும்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வந்தபோது அதில் முக்கிய குறிப்பாக வைத்தது,பெண்களையும் குழந்தைகளையும் மதம் மாற்றக்கூடாது என்பதே;ஆனால் இங்கே 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதம் மாறினார்களா;இது கேலிக்கூத்தாக இல்லையா? குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங்கே போய் சொல்லுவது? எப்படியோ இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாகி விட்டால் இந்தியாவில் சாதிக்கொடுமைகளோ வரதட்சணை கொடுமைகளோ இலஞ்ச லாவண்யமோ வர்க்கக்கொடுமைகளோ இல்லாது முழு இந்தியாவும் சுபிக்ஷமாகிவிடும் என்று நம்புவோமாக‌.

மூத்த அப்போஸ்தலர் செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்..!


Senior Chennai Pentecost Leader Rev, P.S.Chelladurai F/O Rev. Sam P. Ch expired at 7.15 p.m. Sunday (5/12). He is 88 yrs.His Funeral service tomorrow 2.30 p.m.at AFT church, Purasavakkam. Burial at 4.30 p.m. at Kilpauk. www.revsam.org

Pls Fwd to all…Thank You..!

PSC4.png

Pastor P. S. Chelladurai – The founder of AFT Church and father of Rev. Sam P. Chelladurai, passed into glory on 05-12-2010 at 07:15pm in Chennai. The funeral service will be held at 02:30pm in AFT Church on Tuesday (07-12-2010). Burial will be in Kilpauk Cemetery at 04:30pm. The service will be webcast LIVE.

பெந்தெகொஸ்தே இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மூத்த அப்போஸ்தலருமான செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்; நேற்று மாலை 07:15 க்கு அவருடைய உயிர் பிரிந்தது; நாளை மாலை 04:30 மணிக்கு அவருடைய நல்லடக்கம் நடைபெறுவதாக அறிகிறோம்.

ஐயா அவர்கள் தனது  88 வது வயது வரையிலும் நல்ல நினைவாற்றலுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது;அவர்கள் தனது விசுவாசத்தைத் தூண்டும் போதனைகளால் அநேகரை எழுப்பியதுடன் தனது பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்தம் சந்ததியையும் கண்டு ஒரு முழுமையான வெற்றிகரமான கிறித்தவ ஜீவியத்தை நிறைவேற்றினார்.

அவர் தனது துணைவியாருடன் கொண்டிருந்த உத்தமமும் சமாதானமும் நிறைந்த‌ இல்வாழ்க்கை மிகவும் போற்றுதற்குரியது; இளந்தலைமுறையினர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியானது; பிரபல போதகர் சாம்.P.செல்லத்துரை அவர்கள் அன்னாரது மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்த்தருடைய வருகையில் நாம் அவரை சந்திப்போம் என்ற விசுவாசத்துடன் நம்முடைய சபையின் தலைவருக்கு நமது இறுதி மரியாதையினை செலுத்துகிறோம்;அவர்மூலமாக நாம் கற்றுக்கொண்ட நல்ல விசுவாச போதனைகளுக்காக ஆண்டவருக்கு துதி செலுத்துகிறோம்.

“தீப்பொறி”யான கேள்விகள்


“தீப்பொறி”யான கேள்விகள்

சிறுநெருப்பு பெரிய காட்டை கொளுத்திவிடும் என்பார்கள்; கிறித்து சபையின் எழுச்சிக்கு தீப்பொறியாக விளங்கிய மார்ட்டின் லூதர் அவர்களின் 95 கேள்விகளைக் குறித்த சிந்தனை எழுந்தது; அது சம்பந்தமான தகவல்களை இணையத்தில் தேடியபோது ஆங்கிலத்திலேயே அதிகம் இருந்தது; முக்கியமாக மார்ட்டின் லூதர் அவர்கள் விட்டர்ன்பெர்க் ஆலயத்தில் கதவில் ஒட்டியதாகச் சொல்லப்படும் 95 கேள்விகளின் விவரம் தமிழில் கிடைக்கவில்லை;

 

 

 

 

 

 

 

 

 

இன்றைக்கு எழுப்புதலைக் குறித்தும் வேதத்தின் முக்கியத்துவத்தைக் குறித்தும் அநேகர் எழும்பியிருக்கின்றனர்;  கிறித்தவ சபையின் இன்றைய எழுச்சிக்கும்  மறுமலர்ச்சிக்கும் காரணமான முதல்  “தீப்பொறி “ மார்ட்டின் லூதர் அவர்கள்தானே?

அவருடைய கேள்விகள் என்ன, அதன் பாதிப்புகள் என்ன, அதன் சாதக பாதகங்கள் என்ன என்பதையெல்லாம் சற்று ஆராய்ந்தால் என்ன‌..?

முதலில் இணையத்தில் கிடைத்த தொடுப்புகள்:

மார்ட்டின் லூதர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது பணிகளை விளக்கும் தளம்.

http://www.religionfacts.com/christianity/people/luther/bio.htm

அவரது வாழ்க்கை சம்பந்தமான‌ விக்கிபீடியா தகவல்.

http://en.wikipedia.org/wiki/Martin_Luther

தமிழ் விக்கிபீடியா

மார்ட்டின் லூதர் அவர்களது 95 கேள்விகள்:

http://www.mountainretreatorg.net/classics/95thesis.shtml

http://www.reformed.org/documents/index.html?mainframe=http://www.reformed.org/documents/95_theses.html

மார்ட்டின் லூதர் அவர்களது 95 கேள்விகளைக் குறித்த விக்கிபீடியாவின் தகவல்

http://en.wikipedia.org/wiki/The_Ninety-Five_Theses

(தொடரும்..)

ஆண்டவருடைய வீடு..!


இது ஆண்டவருடைய வீடு;

கொஞ்சகால முன்பு இங்கே இந்த ஆலயத்தைக் கட்டின‌ வேலையாட்கள் இருந்தனர்;  கட்டுமானப் பொருட்களும் இருந்தன;

வேலையாட்கள் கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர்; கட்டுமானப் பொருட்களும் பிரித்து எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன;

ஆனால் இங்கே கட்டப்பட்ட தூண்களும் உத்தரங்களும் வாசற் கதவும் சன்னலும் இங்கேயே சாட்சியாக இருக்கிறது;

அதுபோலவே நீங்கள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்கள்; தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறார்;

இந்த ஆலயத்தில் சிலர் தூண்களாகவும் வாசலாகவும் ஒவ்வொரு பணியை ஏற்றிருக்கிறீர்கள்;  அவரவர் பணியை அவரவர் எல்லையிலிருந்து தங்களாலியன்ற வண்ணம் செய்யவேண்டும்..!

அப்போது தான் தேவனுடைய நாமம் உங்கள் மூலம் மகிமைப்படும்..!

(24.01.2010 அன்று திருவள்ளூர் மேலானூர் திருச்சபையின் அருளுரையில் வழங்கியது…)