Tag Archive | sin

மனிதனுக்காக மரணிக்கும் மிருகங்கள்..!


இது மாலை மலர் இதழில் வெளியான செய்தியாகும்.

மாற்று ஆபரேசன் மூலம் மிருக உறுப்புகளை மனித உடலில் பொருத்த திட்டம்; சீன விஞ்ஞானிகள் ஆய்வு

பெய்ஜிங், மார்ச். 26- பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.சீனாவில் உள்ள நாஜ்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதற் கான ஆய்வை மேற்கொண் டுள்ளனர்.முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.

அது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

http://www.maalaimalar.com/2011/03/26123621/transfer-operation-used-for-an.html

இந்த செய்தியைச் சொன்னதுமே எனது மனைவி சொன்னது, பிசாசை ஆண்டவர் பன்றிக்குள் அனுப்பினார், மனுஷன் அந்த பன்றியை மனுஷனுக்குள் வைக்கப்போறானா ‘ என்று அங்கலாய்த்துக் கொண்டார்..!

ஏற்கனவே பன்றியின் கொழுப்பிலிருந்து இனிப்புகள் மீது போடப்படும் சில்வர் ஃபாயில் தயாரிக்கப்படுவதாகவும் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவருக்கான இன்ஸுலின் கூட பன்றியின் கணையத்திலிருந்தே தயாரிக்கப்படுவதாகவும் சொல்லப்படும் நிலையில் தற்போது அதன் உடல் உறுப்புகளும் மனிதனுக்குப் பொருத்தப்படும் என்ற செய்தியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது; அப்படியானால் பன்றிக்கும் மனிதனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறது;  இந்து மக்கள் இதன்காரணமாகவே ஒரு மிருகத்தையும் விடாமல் அனைத்தின் ஆதரவையும் நாடி அவற்றை தெய்வமாக வழிபடுகிறார்கள் போலும். இனி, உன் தெய்வங்கள் மனிதனுக்காக என்ன செய்தது என்று யாரும் கேட்கமுடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது; அவை தன்னைத் தானே பலியாக்கி மனித ஜீவன்களைக் காப்பாற்றப்போகிறது; மேலும் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கூற்றும் இதனால் பொய்யாகப் போகிறது; ஏனெனில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால் குரங்குகளின் உடல் உறுப்புகளையல்லவா ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியிருப்பார்கள்? 

மனிதன் நீடித்த நாட்கள் வாழ என்னென்ன ஆராய்ச்சிகளையோ செய்கிறான்; ஆனால் நித்திய நித்தியமாக வாழ அவனுடைய ஜென்ம பாவங்களுக்காக ஒருவன் பிராயசித்தம் செய்யாவிட்டால் அவனுடைய சரீரத்திலுள்ள வியாதிகள் குணமடையா.ஆன்மாவில் நம்பிக்கை பெருகினால் மாத்திரமே வியாதி குணமாகும்;அது மாத்திரமல்ல, இந்த ஜீவனுக்குப் பிறகு வரும் ஜீவனுக்கு உறுதியளிக்கும் ஒரு நண்பரை தன் சொந்த இரட்சகராக ஒருவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

 • “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்;  அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” (நீதிமொழிகள். 28:13)
 • “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர்.6:23)
 • “…இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1.யோவான்.1:7)
 • “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால்,நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.” (1.யோவான்.1:9,10)
 • “சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” (1.தீமோத்தேயு.4:8)
Advertisements

Satan loves You..!


  கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு சாத்தானின் கடிதம்

  அனுப்புநர்:
  சாத்தான்
  அக்கினி வாசல்
  எரிநரகம் 666

  பெறுநர்
  விசுவாசி,
  மாயமாலக்கோட்டை
  சிற்றின்பசாலை
  பூலோகம்

  அன்பான மகனே, மகளே.,
  உனக்குள் என் ராஜ்யத்தை ஸ்தாபிப்பது மிகவும் கடினம் என்று எண்ணினேன்.ஆனால் என் வேலையை நீ மிக சுல‌பமாக்கினாய், அதிகாலையில் எழுந்தவுடன் முழ‌ங்காற்படியிட்டு ஜெபிக்கவேண்டிய நீ ஜெபிக்காமலேயே அன்றாட கடமைகளை செய்யத் துவங்கினாய்.முதலில் எனக்கு ஏற்பட்ட இந்த வெற்றி என்னுடைய பல வெற்றிகளுக்கு வித்திட்டதை எண்ணினால், எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது தெரியுமா

  வெரிகுட் கீப் இட் அப்..!

  சாப்பிடுவதற்கு முன் ந‌ன்றி ஜெபம், வேலைக்கு கிளம்புவதற்கு முன் பாதுகாப்பு ஜெபம்…இப்படி ஏதாவது செய்துவிடுவாயோ என பயந்திருந்தேன். ஆனால் நீயோ அடுத்தடுத்து செய்யவேண்டிய வேலைகளை நினைத்தபடி பிஸியாக இருந்தாய்.தேவனிடத்தில் ந‌ன்றியில்லாத உன் இருதய‌மும் எளிதில் ப‌த‌ற்ற‌ம‌டைகிற‌ குண‌மும் தான் உன்னிட‌த்தில் எனக்கு மிகவும் பிடிக்கும்!

  ஏய்! நீ தான் எனக்குக் கிடைத்த முத்தான சொத்து!

  பல ப‌ரிசுத்த ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்துக் கொண்டு,எத்தனையோ புத்தகங்களை வாசித்து ந‌ல்ல கருத்துகளை தெரிந்துகொண்டும் மாற்ற -மில்லாமல் நீ தொடருகிறாயே, அது தான் என்னை மிகவும் கவர்ந்த குணம்.நீ நரகத்துக்கு வந்த பிற‌கு நாம் இருவ‌ரும் சேர்ந்து வாழுவதை விட,பூமியில் சேர்ந்திருக்கிறோமே என்னை பூரிப்பாக்குகிற உண்மை இது. நான் இருக்கிற இடத்திலே உன்னை சேர்ப்பதற்கு நான் எடுக்கிற எல்லா நடவடிக்கைகளும் உன் விஷயத்தில் வெற்றியாய் அமைவதை நினைத்தால் என் இருதயம் இன்பத்தால் நிரம்பி வழிகிறது தெரியுமா?

  டிவியில் வருகிற தொடர் நாடகங்கள் பார்ப்பது, அவ்வப்போது சினிமா நிகழ்ச்சிகளை ரசிப்பது, மற்றவர்களைப் பற்றி தர‌க்குறைவான வார்த்தைகளை தாராளமாய் பேசுவது, உன் தலைமை அதிகாரியை மதிக்காமல் ந‌டப்பது போன்ற‌வை எல்லாம் என்னுடைய சிறப்பான ஆற்றலால் உனக்குள் நான் புகுத்திய காரியங்கள் என்பது மட்டும் என‌க்கு மகிழ்ச்சி அல்ல,இத்தனையும் செய்துங்கூட “கிறிஸ்தவன்” என்ற போர்வைக்குள் நீ மறைந்திருக்கிறாயே அதுதான் விசேஷம்!

  ஆனால் எனக்கு ஒரே வருத்தம் என்னன்னா…நீ உலக வாழ்க்கையை முடித்து என்னிடம் நிரந்தரமாய் வந்தவுடன் உன்னை சந்தோஷமாய் வைக்கமுடியாதது தான். நான் இருக்கிற இடமே அக்கினிக் கடல் தானே.அதனால் தான் உன்னை இப்பவே சிற்றின்ப சாலையில் வைத்து சந்தோஷப்படுத்துகிறேன்.கிடைக்கிற சான்ஸை விட்டுவிடாதே!

  அனுபவி நன்றாக அனுபவி..!

  மரணத்திற்கு பின்னிருக்கிற நித்திய பரலோக வாழ்வைக் குறித்து எடுத்துக் கூறி,யாராவது உன்னை என்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என முன்பு நான் பயந்தது உண்டு.ஆகவே தான் நீ என்னுடைய ஆள் என்று வெளியே பிரபலமாகாதபடிக்கு உன்னை வெளிப்படையான கிறிஸ்த‌வ‌ நடைமுறைக‌ளை‌ப் பின்ப‌ற்றச் செய்தேன்.

  பாவ‌ப் ப‌ழ‌க்க‌ங்களைத் தொட‌ர்ந்து பின்ப‌ற்றிய‌தால் நீ என்னிட‌ம் நிர‌ந்த‌ர‌மாய் வ‌ந்து சேருகிற‌ நாள் ச‌மீப‌மாகிவிட்ட‌து.நீ என்னிட‌ம் வ‌ந்துவிட்டால் பூமியில் என் ப‌க்க‌மிருந்து செய‌ல்ப‌ட‌ ஆள் தேவைப்ப‌டும்.ஆக‌வே இன்னும் நீண்ட‌ நாள் வாழ‌விருக்கிற‌ சிறுபிள்ளைக‌ளுக்குள்ளும் இளைஞ‌ர்க‌ளுக்குள்ளும் கெட்ட‌ சுபாவ‌ங்க‌ள் ப‌தியும்ப‌டி அவ‌ர்க‌ளுக்கு முன்பாக‌ கோப‌ப்ப‌டுகிறாய்,கீழ்த்த‌ர‌மான‌ வார்த்தைக‌ளைப் பேசுகிறாய்,ச‌ண்டையிடுகிறாய்,இன்னும் ப‌ல‌ தீய‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுகிறாய்.இப்ப‌டியெல்லாம் நீ செய்வ‌தால் அவ‌ர்க‌ளும் என் ப‌க்க‌ம் வ‌ந்துவிடுவார்க‌ள்.
  அதும‌ட்டும‌ல்ல‌ என்னிட‌ம் வ‌ருகிற‌ பிள்ளைக‌ள் த‌ங்க‌ள் இள ர‌த்தத்தின் வ‌லிமையால் மேலும் ப‌ல‌ரையும் என் ப‌ணியில் இணைத்து விடுவார்க‌ள்.உன்னைக் குறித்து என் எதிர்பார்ப்பு இதுதான்.

  ப்ளீஸ்…என‌க்காக‌ இதெல்லாம் செய்ய‌க்கூடாதா என்ன‌..?

  நான் எத்த‌னை முறை உன்னைக் காப்பாற்றியிருக்கிறேன்,நீ பொய் சொல்லி, திருடி மாட்டிக் கொள்ள‌ வேண்டிய‌ இட‌த்தில்,உண்மையாய் வாழுகிற‌ வேறொருவரை மாட்டிவிட்டு உன்னைத் தப்புவித்திருக்கிறேன் அல்லவா?அதையெல்லாம் நினைத்துப் பார்த்து என‌க்கு நீ க‌ட்டாய‌‌ம் இந்த‌ உத‌வியைச் செய்!என் ச‌ந்தோஷ‌த்தை பரிபூர‌ண‌மாக்கு.ந‌ர‌க‌த்தினை உன் போன்றோரால் நிர‌ப்புகிற‌ என் ப‌ணி ந‌லிவின்றி தொட‌ர‌ உன் த‌ய‌வை நாடுகிறேன்.

  தேங்க்யூ பை,பை,சீ,யூ..!

  இப்ப‌டிக்கு,
  ச‌ங்கார‌ப் ப‌ணியில்,
  சாத்தான்

  {நன்றி: PASTOR இறையன்பு ஜாண்}