இரண்டில் ஒன்று…தீர்மானம் நன்று..!

நேற்று ஒரு நண்பர் தன்னுடன் ஒரு சகோதரரை அழைத்துக் கொண்டுவந்து அவருக்கு ஆலோசனை சொல்லி பிரார்த்திக்க வேண்டினார்; அவருடன் பேசியபோது எனது சிந்தையில் உதித்த சில கருத்துக்கள்:

ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்து -ஆனாலும் வேர்கொள்ளமுடியாமல் – நிரந்தர வேலையுமில்லாமல் – 2007- ம் வருடம் திருமணமாகி – ஆறுமாத ஆண் குழந்தையுடன் மனைவியை விட்டுப் பிரிந்த நிலையில்  -சில வாரங்கட்கு முன்பு சாலை விபத்தில் கையொடிந்து  -தங்க இடமில்லாமல் பரிதாப நிலையிலிருந்தவரிடம் நான் இப்படியாகப் பேசிக் கொண்டிருக்கிறேன்;

அவர்கள் இருவருக்கும் வந்ததும் உபசரிப்பாக ஆளுக்கொரு க்ளாஸ் தண்ணீர் கொடுத்தோம்;அதை ஒருவர் முழுவதும் குடித்துவிட மற்றவர் பாதியளவு மீதம் வைத்திருந்தார்; அதையே உதாரணமாக்கி நான் கேட்டேன்,இந்த இரண்டு க்ளாஸ்களில் எது சிறந்தது?

காலியாக இருக்கும் க்ளாஸா அல்லது ஏதோ கொஞ்சம் இருக்கும் க்ளாஸா?
எப்படியோ மிகச் சரியாகவே சொன்னார்,காலியாக இருக்கும் க்ளாஸ் தான் என்று;எப்படி என்று நான் விளக்கினேன்;

பாதியளவு தண்ணீர் இருக்கும் க்ளாஸில் இன்னும் கொஞ்சம் நிரப்பி பயன்படுத்தவும் முடியாது,இருக்கும் கொஞ்சம் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாமென்றாலும் முடியாது;ஏனெனில் அது இன்னொருவர் குடித்துவிட்டு வைத்ததும் மாசடைந்ததுமான தண்ணீராக இருக்கும்;எனவே என்ன செய்வோம்,அதை கொட்டிக் கவிழ்த்து  கழுவி விட்டு புதியதான தண்ணீரை நிரப்பி பரிமாறுவோம்;இப்படியே இதுவரை வாழ்ந்த உங்கள் வாழ்க்கை பயனற்றதாகவும் இனி செய்வோம் என்ற திகைப்புடனுமிருக்கும்;

ஆனால் ஒன்று செய்யலாம்,புதிய வாய்ப்புக்காக ஆவலுடன் ஆண்டவரை நம்பி காத்திருங்கள்;ஆண்டவர் புதியதொரு வாசலைத் திறப்பார்;அதுவரை உங்களுக்காக நீங்கள் உங்கள் பழைய அனுபவத்திலிருந்து திட்டமிடுவதை நிறுத்துங்கள்; நீங்கள் முழுவதும் குணமாகி சகஜநிலை திரும்பும் இந்த இடைபட்ட ஓய்வு காலத்தில்உங்களைப் பற்றிய நன்மதிப்புகளை வளர்ந்துக்கொள்ளுங்கள்; நல்ல நண்பர்களுடன் ஐக்கியம் கொள்ளுங்கள்; நல்ல ஆவிக்குரிய புத்தகங்களைப் படியுங்கள்;உங்கள் மீது நம்பிக்கை வளரும்படியான காரியங்களை யோசித்து அதை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் காரெக்டரை டெவலப் செய்யுங்கள்; உங்களுக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து நீங்கள் மீண்டு உயிருடனிருப்பதே ஆண்டவர் உங்களை நேசிக்கிறார் என்பதற்கு அடையாளமாகும்;

மனிதர் சற்று நம்பிக்கையுடனும் தெளிவுடனும் விடைபெற்றார்;என்ன என்னுடைய வழக்கமான போட்டோ எடுக்க மறந்துவிட்டேன்;விரைவில் அவரது போட்டோவை இங்கே பதிக்கிறேன்.

4 thoughts on “இரண்டில் ஒன்று…தீர்மானம் நன்று..!

 1. “புதிய வாய்ப்புக்காக ஆவலுடன் ஆண்டவரை நம்பி காத்திருங்கள்;ஆண்டவர் புதியதொரு வாசலைத் திறப்பார்;அதுவரை உங்களுக்காக நீங்கள் உங்கள் பழைய அனுபவத்திலிருந்து திட்டமிடுவதை நிறுத்துங்கள்; நீங்கள் முழுவதும் குணமாகி சகஜநிலை திரும்பும் இந்த இடைபட்ட ஓய்வு காலத்தில்உங்களைப் பற்றிய நன்மதிப்புகளை வளர்ந்துக்கொள்ளுங்கள்; நல்ல நண்பர்களுடன் ஐக்கியம் கொள்ளுங்கள்; நல்ல ஆவிக்குரிய புத்தகங்களைப் படியுங்கள்;உங்கள் மீது நம்பிக்கை வளரும்படியான காரியங்களை யோசித்து அதை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் காரெக்டரை டெவலப் செய்யுங்கள்; உங்களுக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து நீங்கள் மீண்டு உயிருடனிருப்பதே ஆண்டவர் உங்களை நேசிக்கிறார் என்பதற்கு அடையாளமாகும்;”

  மிகவும் நல்ல யோசனை. ஆனால் உங்களிடம் ஆலோசனைக்கு வருகிறவர்கள் புகைப்படம் எடுப்பது தவறல்ல, அதைப் பொதுவில் பதிப்பது அவர்களது அந்தரங்கத்தில் நுழைவதற்குச் சமம் என்று கருதுகிறேன். மேலும் ஊழியத்தில் சில காரியங்களில் நாம் இரகசியத்தைக் காக்க வேண்டும்.

 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே; தங்கள் யோசனையினை நான் எனது கொள்கையாகவே வைத்திருக்கிறேன்; எனது நண்பர்களுக்குத் தெரியாமல் நான் புகைப்படம் எடுப்பதோ அதனை வெளியிடுவதோ இல்லை;

  ஆரம்பத்தில் ஆர்வக் கோளாறின் காரணமாக ஒரு பிரபல ஊழியரின் செய்தியை பதிவுசெய்து யூட்யூப் தளத்தில் பதித்துவிட்டேன்; பிறகு அவர் வருத்தப்பட்டதால் அதனை நீக்கிவிட்டேன்; அதன்பிறகு சர்ச்சைக்குரிய வண்ணத்தில் எதையும் பதிக்கிறதில்லை; தற்போதும் தாங்கள் குறிப்பிட்டு ஏதேனும் சொன்னால் அதனைப் பரிசீலிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.

  பின்குறிப்பு: நாம் சந்தித்த புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது…ச்சும்மா சொல்லிவைக்கிறேன்.. .:)

 3. பின்குறிப்பு: நாம் சந்தித்த புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது…ச்சும்மா சொல்லிவைக்கிறேன்.. .:)

  பார்த்தேன். என் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் உங்களிடம் இருப்பதுதான் ஆபத்து. வம்பை விலை கொடுத்து வாங்காதீங்கோ…….. பிறகு ஒண்ணா களி தின்ன வேண்டியது வரும். பரவா இல்லையா!!!!!!!! (நானும் ச்சும்மா சொல்லி வைக்கிறேன்.. பின்னாடி நீங்க புலம்பக் கூடாதில்லியோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s