Tag Archive | சாமி

நேத்து ராத்திரி யம்மா..!


நேற்றிரவு (09:10:2010) தூக்கம் பறிபோனது, துக்கம் வரவானது; காரணம் எங்கள் ஊரிலுள்ள பெருமாளுக்கு ஏதோ விசேஷமாம்; கடந்த மூன்று நாளாக அரற்றிக் கொண்டிருந்தார்கள்; நமக்கு அதில் ஆர்வமில்லாவிட்டாலும் கட்டாயப்படுத்துவது போல அதிகாலையிலிருந்து இரவு பத்து மணிக்கும் மேலாக ஊரை ஒலியினால் மாசுபடுத்தினர்;

எல்லாம் போக நேற்று ஒரு ஊர் பயணம் முடித்து திரும்பி சோர்வுடன் படுக்கைக்குச் செல்லவே இரவு 11:30 ஆனது; ஒலிபெருக்கி சத்தத்திலிருந்து தப்பிக்க கதவையும் சன்னல்களையும் அடைத்துவிட்டு காற்றுக்கு வழியில்லாமல் துன்பத்துடன் தூங்க முயற்சித்தபோது சில மணித் துளிகளில் “டமடம” வென அடித்துக் கொண்டும் பஜன் பாடிக் கொண்டும் சாமி ஊர்வலம் வந்தது;

போதாக்குறைக்கு பட்டாசு வெடி… அந்த மிகப் பெரிய சைஸ் பேண்டு (Big Band)கள் மூன்றும் பள்ளிகளில் ‘மார்ச் ஃபாஸ்டு’ க்கு அடிப்பது, அத்துடன் சாவுக்கு அடிக்கும் மேள வாத்தியமும் சேர நெஞ்சை படபடக்கச் செய்யும் இரைச்சலுடனும் பிணத்துக்கு முன்பாக ஆடும் அருவருப்பான கூத்து நடனத்துடனும் சாமி ஊர்வலம் வந்தது;

கூத்து நடனம் ஆடிய இளைஞர்களும் மற்றவரும் நல்ல போதையில் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது; இந்த ஊர்வலம் வருவதற்காகவே சில தினங்கட்கு முன்பு எங்கள் வீட்டு வாசலிலிருந்த நல்ல நிழல்தரும் மரத்தை வெட்டி வீழ்த்தியிருந்தனர்; இது அவர்கள் தேசமல்லவா, யாரையும் எதுவும் கேட்க முடியாது;நாங்களோ வாடகைக்கு குடித்தனம் இருப்பவர்கள்; ஏதாவது நியாயம் கேட்டாலும் வீட்டை காலி செய்யவைப்பர்; வேறு வீடும் தரமாட்டார்கள்;

ஒரு மாட்டு வண்டியில் சாமியை அலங்கரித்து வைத்து அதற்கு மின்வசதி தரும் மின்கலத்தையும் வண்டியுடன் இணைத்து மாட்டுக்கு பதிலாக மனிதர்கள் இழுத்துவந்தனர்; வண்டியிலோ ஒரு பூஜாரி ராஜா போல அமர்ந்துகொண்டு கொஞ்சமும் உணர்ச்சியற்ற நிலையில் இயந்திர கதியில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்;

பக்தர்கள் கொடுத்த பூஜை தட்டை சில நொடிகள் அந்த விக்கிரஹத்திடம் ஒரு காட்டு காட்டிவிட்டு பக்தர்களிடம் கொடுக்க, அவர்களும் இயந்திரத்தைப் போல பெற்றுக் கொண்டு திரும்பினர்;

ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கக்கூடிய மின்சாரம் மற்றும் கேபிள் தொலைபேசி சர்வீஸ் கம்பிகளில் உரசி, உயர்ந்ததும் மட்டமானதுமான அந்த காகித அட்டை அலங்காரம் கவிழ்ந்து சாமி தடுமாறி விழுந்துவிடுமோ ‘ வென இளைஞர்கள் அதற்கென ஒரு கம்பை தயாரித்து அதன்மூலம் சர்வீஸ் கம்பிகளை உயர்த்திபிடித்து சாமியின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர்;

சாமியின் அழகோ கண்கொள்ளா காட்சி…
‘ஒருவனுக்கு ஒருத்தி ‘ என குடும்பஸ்தர்கள் வாழும் தெருக்களில் நுழைந்த சாமியோ சைடுக்கு ஒன்றாக ரெண்டு குட்டிகளுடன் வந்தார்; போனவாரம் வந்து போன மிஸ்டர் கணபதி சிங்கிளாகத் தான் வந்தார்;

சாமி குட்டிகளை மட்டும் கட்டிக்கொள்ள நம்ம பக்தர்கள் அவருடைய பெண்சாதிகளுடன் அவரையும் சேர்த்து கட்டியிருந்தனர்; விழுந்துருவாரோ என்ற நல்ல எண்ணமோ அல்லது தனது ஜோடிகளுடன் ஓடிவிடுவாரோ என்ற கெட்ட எண்ணமோ தெரியவில்லை;

என்னைப் பொருத்தவரை அவர் மிஸ்டர் கிருஷ்ணனாக இருக்கவேண்டும்; ஆனால் அவரைக் குறித்து பெருமாள் என புகழ்ந்தனர்; ‘ லாஜிக் ‘ புரியவில்லை;

பெருமாளைப் பொறுத்தவரையில் அலமேலு அம்மாவுடன் இருப்பார்; அதுவும் ஏதோ கொடுக்கல் வாங்கல் தகராறில் கோவித்துக் கொண்டு திருப்பதி மேலேறி தவமிருப்பதாகவும் அவருடைய கடன் தீர்ந்தபிறகே வந்து குடித்தனம் பண்ணுவார் என்றும் ஐதீகமாம்; நம்முடைய ஏழை எளிய மக்களும் தங்கள் முடி உட்பட அனைத்தையும் ஆண்டாண்டு காலமாக தானமாக வழங்கியும் இன்னும் அவருக்கு திருப்தியாகவில்லை;

எல்லா சாமியும் ஆசீர்வதிக்கும் பாவனையில் போதும் என்பது போல வலக்கரத்தைக் காட்ட இவரோ இன்னும் வேண்டும் என்பது போல வலக்கரத்தையும் இடக்கரத்தை அள்ளி முடித்துக் கொண்டது போலவும் வைத்திருப்பார்;

அப்படியானால் எங்கள் தெருவுக்கு வந்தது பெருமாள் அல்ல; இத்தனை கலாட்டாக்கள் நடந்தும் சாமியோ சாமியாரோ மக்களுடைய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் சொல்லவில்லை; அவர் அருள் தருவதாகச் சொல்லுவதும் பக்தர்கள் வேண்டியது நடக்கும் என்று காத்திருப்பதும் சுயநலம் சார்ந்த பக்தியாகவே தோன்றுகிறது; ஏனெனில் ஒரு தெருவுக்கு சாமி வந்து போவதாலோ சாமியைத் தேடி பக்தன் சென்று வருவதாலோ ஒரு தனிப்பட்ட மனிதனுடைய வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டது போலத் தெரியவில்லை;

கோயிலில் விழாக்கோலம் ஒருபுறம், பக்தன் அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு மல்லாந்து கிடக்கும் அலங்கோலம் மறுபுறம்; அவன் பெண்டு பிள்ளைகள் அங்கே சாமியை விழுந்து வணங்கிக்கொண்டிருக்க இங்கே இவன் சாக்கடையில் விழுந்து எதையோ தேடிக்கொண்டிருக்கிறான்;

அந்த காலத்தில் கோயிலில் பரத்தையர் நடனமாடுவர்; இதனை பரதநாட்டியம் என்றும் கூறுவர்; இந்த நடனத்தால் வசீகரிக்கப்ப‌டும் ரிஷிகளும் மன்னர் பெருமக்களும் அன்றிரவு அவர்களோடு தங்களைப் பகிர்ந்துகொள்வர்;

இன்றோ ஒரு பாவமுமறியாத சிறுமிகளையும் வயதுக்கு வந்த இளங்குமரிகளையும் அதே கோவில் வாசலில் ஆடவிட்டு அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்;

வீட்டுக்கு ஒன்றாக ஆணாகவோ பெண்ணாகவோ பெற்று நம்முடைய எதிர்காலத்தில் நமக்குத் துணையாக பிள்ளைகளை வளர்த்து இதுபோன்ற காமாந்தகர்களுக்கு அவர்களை பலியாக்கும் ஆபத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது;

ஏனெனில் அங்கே இருக்கும் சாமிகளின் கதைகளும் புராணங்களும் வீரபராக்கிரமங்களும் அத்தனை பயங்கரமானது; இந்த காலத்தில் அவர்கள் இறங்கி வந்து நம்முடைய பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு போகாவிட்டாலும் அவர்களுடைய ஆவியை இளைஞர்கள் மனதில் புகுத்தி அவர்கள் மூலம் பெண் பிள்ளைகளைக் கெடுத்துவிடுகிறார்கள்; இன்னும் அடுத்தவன் மனைவியையும்கூட இந்த சாமிகள் விட்டு வைப்பதில்லையே;ஆனானப்பட்ட விஷ்ணு பகவான் உட்பட தனது பக்தர்களை ருசிபார்ப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்;

இதையெல்லாம் யோசித்து யோசித்து நேற்றிரவு தூக்கம் பறிபோனது; சாமி அங்கே வேஷத்தைக் கலைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்க பக்தர்களோ வழக்கம்போல தங்கள் அன்றாட பாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்; பொழுதுபோக்குக்கு எந்திரன் முதலான திரைப்படங்களும் தொலைக்காட்சி சீரியல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சமத்துவ சமதர்ம சமுதாய மறுமலர்ச்சிக்கான அற்புதமான தளமாக டாஸ்மாக் கடைகளும் இருக்கவே இருக்கிறது.

வாழும் பாரதம்… வளரும் தமிழகம்…!?

சுதா என்றொரு பெண்


இன்று காலையில் சுதாவின் போன்..!
கடந்த ஒரு வருடமாகக் காத்திருக்கும் அவளுக்கு இன்னும் மாப்பிள்ளை அமையவில்லை;

இதனால் சோர்ந்துபோன வீட்டார் “நீ சாமி தோஷத்திலிருக்கிறாய், மேல்மருத்தூருக்கு மாலை போட்டு, வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் வந்தால் தான் நல்லது நடக்கும்” என்று சொல்லிவிட்டார்கள்;

“நான் என்ன செய்யட்டும்;அவர்கள் சொல்வதுபோல எங்கள் ஊரில் சிலருக்கு நல்லது நடந்துள்ளதால் எனக்கு இரண்டு மனமாகவே இருக்கிறது” என்றாள்;

நான் என்ன சொல்வேன்,கடந்த ஐந்து வருடமாக முழு விசுவாசியாகவும் சிறு வயது முதலாக ஆண்டவரது அபிமானியாகவும் இருக்கும் சுதா, “அந்த விக்கிரக பேய் வணக்கம் எனக்கு ஒரு பொருட்டல்லவே; எனது வீட்டாருக்காக இதைச் செய்தால் என்ன? இல்லாவிட்டால் வீட்டில் பெரிய பிரச்சினையாகும்” என்கிறாள்;

நானோ,”இது தான் உனது விசுவாசத்துக்கான சோதனை; இதுபோன்ற சூழ்நிலையில் தான் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர்; ஆனாலும் உனது சூழ்நிலையில் என்ன செய்வாயோ தெரியவில்லை; உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்; நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று போனை வைத்துவிட்டேன்;

சிறிது நேரத்தில் மீண்டும் போன் செய்த சுதா சொன்னது,”நான் இந்த மாதம் ‘ஒரு தனி காரணம்’ சொல்லி சமாளித்துவிட்டேன்; அடுத்த மாதத்துக்குள் எதாவது அதிசயம் நடக்க பிரார்த்தனை செய்யுங்கள்”.