ஆகஸ்டு 10 கறுப்புதினம்..!

ஆகஸ்ட் 10 ஆகிய இதே நாளில் சரியாக அறுபது வருடத்துக்கு முன்பு அதாவது 1950 -ல் தலித் கிறித்தவர்களுக்கு மட்டும் உள்நோக்கத்தோடு தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் மறுக்கப்பட்டது;

அதற்கு இன்று வரையிலும் எந்த நியாயமான காரணத்தையும் யாரும் சொல்லி விடவில்லை; ஆனாலும் சமுதாய விடுதலைக்காக மதம் மாறும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டேயிருக்கிறது;

இதனைப் பொறுக்காத அடிப்படைவாதிகள் அவர்களை இன்னும் தரம் தாழ்த்தும் வண்ணமாக பணத்துக்கு மதம் மாறுவதாக வசைபாடுகிறார்கள்;

உண்மையிலேயே இந்தியா மதசார்பற்ற நாடாக இருந்தால் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளை மதசார்பில்லாமல் வழங்க என்ன தடை?

புத்த மதமும் சீக்கிய மதமும் விதிவிலக்காக சலுகை பெறும்போது கிறித்தவருக்கு மட்டும் அது ஏன் பொருந்தாது?

இந்நிலையில் இந்திய கிறித்தவர்களை சிரம் தாழ்ந்தும் பதம் பணிந்தும் வேண்டுவது யாதெனில் தாங்கள் சிறிது தியாகம் செய்து தங்கள் மார்க்க விடுதலையைப் பறைசாற்றுங்கள்;

அது எப்படி..?
அண்மையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததல்லவா, அதில் தங்கள் சாதியை எவ்வாறு குறிப்பிட்டீர்களோ அவ்வாறே தங்கள் மதத்தையும் குறிப்பிட்டு – தெளிவாக – நேரடியாக ‘நான் கிறித்தவ ஆதிதிராவிடன்’ என்று பதிக்கவேண்டும்;

இதனால் என்ன பலன் என்று கேட்கலாம், அதன் பிறகே நம்முடைய உண்மையான பெலத்தை அரசாங்கம் உணர்ந்து கொள்ளும்; நாமும் நம்முடைய சலுகைகளை உரக்கச் சொல்லிக் கேட்கலாம்;

அம்பேத்கர் சொன்னாராம், என்னை விட என் நாடு முக்கியம்,என் நாட்டை விட என் இலட்சியம் முக்கியம்,என் இலட்சியத்தைவிட எனது சமுதாயத்தின் விடுதலை முக்கியம்’ என்று!

ஆம், குறுகிய மத உணர்வுகளில் நாம் சிக்கிவிடாமல் இதுபோன்ற சமுதாயப் பிரச்சினைகளிலிருந்து அந்நியப் படாமல் ஏக சிந்தையுடன் இணைந்து போராடுவோம்;

வெற்றி நமதே..!

http://in.christiantoday.com/articles/dalit-christians-declare-black-day-on-aug-10/5548.htm

Advertisements

One thought on “ஆகஸ்டு 10 கறுப்புதினம்..!

  1. சாதிப்பிரிவினைகளுக்கு எதிராக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்; எனக்குத் தெரிந்த ஒரு வன்னிய இனப் பெண் மதம் மாறிய பிறகும் அவளது தாயாருக்கு அந்த உணர்வு இன்னும் இருப்பதால் அவளை பெண் கேட்டு வந்த மாப்பிள்ளை தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதையறிந்து (கை நனைத்த பிறகு.. ) பெண் தர மறுத்துவிட்டார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s