மதமாற்றம் செய்யப்பட்ட சிறுவன் ?!


லண்டன் மிஷனெரி சங்கத்தை சேர்ந்த ஆங்கிலேய மிஷனெரி ஒருவர் கொடைக்கானலில் தங்கியிருந்து ஊழியம் செய்து வந்தார். இவர் ஒரு முறை பிரயாணமாக தன் குதிரையில் வத்தலகுண்டு வந்திருந்தார். தன் வேலைகளை முடித்துவிட்டு திரும்புமுன் வத்தலக்குண்டில் ஒரு உணவகத்தில் சாப்பிட்ட பின்னர், இலையை போட்டுவிட்டு கையைக் கழுவும்படி சென்றார். அப்பொழுது அவர் சாப்பிட்டு விட்டு போட்ட இலையில் மீதியிருக்கும் உணவு துணிக்கைகளை ஒரு பையன் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இதைக் கண்ட மிஷனெரி உடனடியாக அப் பையனுடைய இரண்டு கைகளையும் தடுத்து அந்த உணவகத்தில் சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். பின்பு அந்தப் பையனைப் பார்த்து, ‘தம்பி உன் வீடு எங்குள்ளது? உன் பெற்றோர் என்ன செய்கிறார்கள்?’ எனக் கேட்டார். ‘எனக்கு யாருமே இல்லை ஐயா, வீடும் எனக்கு கிடையாது’ என அப் பையன் கூறினான். அதைக் கேட்ட மிஷனெரி ‘என்னுடன் வருகிறாயா? என்னுடன் தங்கியிருக்க உனக்கு விருப்பமா?’ எனக் கேட்டவுடன் அப் பையனும் அதற்கு இசைந்து அவருடன் சென்று கொடைக்கானலில் தங்கினான். சில வருடங்கள் கடந்தோடின. அந்த சிறு பையன் வாலிபனாகி விட்டான். அதன் மத்தியில் அந்த மிஷனெரிக்கு பணியிட மாறுதலாக திரும்ப லண்டன் வரும்படி அழைப்பு வந்தது. லண்டன் கிளம்ப ஆயத்தமான மிஷனெரி தான் பராமரித்து வந்த அந்த வாலிபனிடம், ‘தம்பி நான் நீண்ட தூரம் பயணம் போகிறேன். இனிமேல் நீயும் நானும் சந்திப்போம் என்பது மிகவும் அரிது. நான் போனபின்பு நீ என்ன செய்யப் போகிறாய்? உன் எதிர்கால திட்டம் என்ன?’ எனக் கேட்டார். கண்களில் கண்ணீர் துளிகள் நிரம்ப அவ் வாலிபன் தன் சட்டைப்பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துத் தான் எழுதிய பின்வரும் பாடலை பாடினாராம்,

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே

இப் பாடலைப் பாடி பின்பு மிஷனெரியைப் பார்த்து ‘என்னை மீட்டு எனக்கு புது வாழ்வைக் கொடுத்த இயேசுவுக்கே என் எதிர்காலம்’ எனக் கூறினாராம்.

**

அவர் வேறு யாருமல்ல, Rev. வே. சந்தியாகு ஐயர் அவர்களே.

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்த மாக்குவோம்,
வரவேணும் பரனாவியே,
தேவ லோகமதில்,
விந்தைக் கிறிஸ்தேசு ராஜா,
தந்தேன் என்னை இயேசுவே

முதலிய பிரபலமான கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.”பரலோகத்தை இந்தியர் நிரப்புவார் துதியுங்கள்” என்ற எமில் அண்ணனின் மிஷனரி சிந்தனைப் பாடல்களுக்கெல்லாம் முன்னோடியானவர் சந்தியாகு ஐயர் அவர்கள்.” கங்கா நதி துவக்கி கன்னியாகுமரி வரை எங்குமே இயேசுராஜா ஆளவே, – அவர்சிங்காரக் கொடி மேலிலங்கக் குடிகளெல்லாம் மங்கா சந்தோஷமுற்று வாழவேஎன்ற பால் ( இயேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்க) நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே அவர் இயற்றிய கீர்த்தனையாகும்.

This entry was posted on December 25, 2021, in Uncategorized. Leave a comment

எலியும் கிலியும்


எலிதந்தபரிசு…


முன்னொரு காலத்தில் அவந்தி நாட்டில் ஒரு வயசான தாத்தாவும் பாட்டியும் வசிச்சு வந்தாங்க. தாத்தா ஓர் விறகு வெட்டி. தினமும் காட்டிற்கு போய் விறகு வெட்டி விற்று அதில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றிவந்தார். தாத்தா கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் சிறப்பா குடும்பம் நடத்துவாங்க பாட்டி.
அன்று காலையில் பாட்டி பொரி அரிசி மாவு உருண்டை ஒன்றை பிடித்து தர அதை எடுத்துக் கொண்டு காட்டிற்கு விறகு வெட்ட புறப்பட்டார் தாத்தா.

தாத்தா பச்சை மரங்களை வெட்ட மாட்டார். உலர்ந்து போன பட்டுப்போன மரங்களைத்தான் வெட்டுவார். அப்படி ஒரு பட்டுப்போன மரத்தினை கண்டுபிடிக்க நேரம் ஆகிவிட்டது. கொண்டு வந்த உணவு மூட்டையை ஓர் மரத்தின் அடியில் வைத்துவிட்டு மரத்தினை வெட்ட ஆரம்பித்தார். தேவையான அளவு வெட்டி முடித்ததும் அதை சுமையாக கட்டி வைத்தார். நண்பகல் உச்சி வெயில் மண்டையை கொளுத்தவும் அருகில் இருந்த ஓடையில் முகம் கழுவி விட்டு சாப்பிடலாம் என்று முகம் கழுவிக்கொண்டு தான் உணவினை வைத்த மரத்தடிக்கு வந்தார்.

ஐயோ! பாவம்! அவரது உணவு மூட்டையைக் காணவில்லை! அந்த மரத்தின் அடியில் ஓர் எலிப்பொந்து இருந்தது. அதனுள் வசிக்கும் எலிகள் பொரி அரிசி வாசம் மூக்கைத் துளைக்கவும் மூட்டையைத் தூக்கிச்சென்றுவிட்டன. அதில் இருந்த மாவு முழுவதையும் தின்றும் தீர்த்துவிட்டன. பொந்து வாசலில் தன்னுடைய துணி தென்படுவதை பார்த்து அதை இழுத்துப் பார்த்தார் தாத்தா. துணி முதலில் வரவில்லை. பின்னர் சிறிது சிறிதாக வெளியே வர துணியை கவ்வியபடி ஓர் சுண்டெலி வெளியே வந்து நின்றது.

அது, தாத்தா! சுவையான உணவை எங்களுக்குத் தந்தீர்! மிக்க நன்றி என்று சொன்னது. எலி பேசுவதை ஆச்சர்யமுடன் பார்த்த தாத்தா, எலியே! வயிறு நிரம்ப உண்டீர்களா? உங்களுக்கு உணவு போதுமானதாக இருந்ததா? என்று வினவினார் தாத்தா. தன்னுடைய உணவை இவர்கள் உண்டுவிட்டார்களே! என்று கொஞ்சம் கூட வருத்தப்படாமல் தாத்தா தன்னை விசாரிப்பதை கேட்டு எலி நெஞ்சுருகிப் போனது. “தாத்தா! உங்கள் உணவை அனுமதியில்லாமல் எடுத்துச்சென்று சாப்பிட்டுவிட்டோம்!” நீங்கள் அதற்காக கோபப்படுவீர்கள் என்று பார்த்தால் எங்களுக்கு உணவு போதுமா? என்று விசாரிக்கிறீர்களே! உங்கள் உயர்ந்த மனசு யாருக்கும் வராது. எங்களுடைய மாளிகைக்கு வந்து சற்று இளைப்பாறிவிட்டு போகலாமே! என்று கூப்பிட்டது சுண்டெலி.

உங்கள் மாளிகைக்குள் நான் எப்படி நுழைய முடியும்? சிறிய வாயிலில் என்னால் நுழைய முடியாதே! என்றார் தாத்தா. “ நான் கூட்டிச் செல்கிறேன்!” என்ற எலி அவர் மீது தாவி அவரது காதில் ஏதோ கூறியது. மறு நிமிடம் எலி அளவு சிறிய உருவமாக தாத்தா மாறிப் போனார். எலியுடன் அந்த பொந்தில் நுழைந்தார் தாத்தா. அந்த மாளிகையில் அவருக்கு தடபுடலான வரவேற்பும் விருந்தும் பறிமாறப்பட்டன. முடிவில் எலிகள் அனைத்தும் சுமக்க மாட்டாமல் ஒரு பெரிய மூட்டையைத் தூக்கி வந்தன. அதை தாத்தாவிடம் கொடுத்து, உமது இரக்க உணர்விற்கு எங்களது அன்புப் பரிசு! என்று சொன்னன.

தாத்தா பையை பிரித்து பார்த்தார். பை நிறைய் தங்க காசுகள் இருந்தன. இவ்வளவு காசுகள் எனக்கு எதற்கு? ஒன்று போதுமே? என்றார் தாத்தா. அப்படியா போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. இதோ இந்த பையில் அந்த ஒற்றைநாணயத்தை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் செலவழித்ததும் மீண்டும் ஓர் தங்க நாணயம் தோன்றும். நீங்களும் பாட்டியும் சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லி வழி அனுப்பிய எலி தாத்தாவை பொந்து வாயிலில் கொண்டு வந்து விட்டு பழைய படி பெரிய உருவமாக காதில் மந்திரம் சொல்லி மாற்றி விட்டது.

தாத்தா அந்த தங்க நாணயப் பையோடு வீட்டிற்கு சென்றார். அன்று நீண்ட நேரம் கழித்து தாத்தா விறகு கட்டுடன் ஒரு புதிய பையையும் எடுத்து வருவதைப் பார்த்த பக்கத்து வீட்டுக் காரன் தாத்தா என்ன சொல்லப் போகிறார் என்று மறைந்திருந்து ஒட்டுக் கேட்டான்.
பாட்டியிடம் நடந்ததை எல்லாம் சொன்னார் தாத்தா! அதை ஒன்றுவிடாமல் கேட்டான் பக்கத்துவீட்டுக்காரன். அட கிழவனுக்கு வந்த வாழ்வைப் பார்! ஒரு மூட்டை தங்க நாணயத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டானே! நாம் போய் கொண்டு வந்து விடவேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டான்.

மறுநாள் தாத்தாவிடம், தாத்தா! காய்ந்த விறகே கிடைக்க மாட்டேன் என்கிறது. நீங்கள் எங்கிருந்து விறகு வெட்டி வந்தீர்கள்! அங்கு விறகு கிடைத்தால் போய் வெட்டி எடுத்து வந்து விடுவேன்” என்று விசாரித்தான். தாத்தாவும் தான் விறகு வெட்டிய இடத்தை அடையாளமாக சொல்லவும் அவன் கையில் ஒரு கோடரியும் கொஞ்சம் பொரி அரிசியும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். எப்படியோ காட்டில் அலைந்து திரிந்து தாத்தா சொன்ன மரத்தை கண்டு பிடித்து விட்டான். விறகு வெட்டாமல் தான் கொண்டு வந்த பொரி அரிசி உருண்டையை பொந்தினுள் வீசினான். பின்னர் மரத்தினடியில் படுத்து உறங்கினான்.

மாலை ஆகிப் போனது. விழித்து எழுந்தவன் எலி ஏதும் வராது போகவே கோபம் அடைந்தான். ஏய் எலிகளே! மரியாதையாக வெளியே வாருங்கள்! என் பொரிமாவுக்கு தங்கம் தாருங்கள் என்று கத்தினான். அப்போது சுண்டெலி ஒன்று கோபமாக வெளியே வந்தது. நீதான் பொரிமாவை உள்ளே கொட்டியவனா? அது ஒன்றும் தாத்தா கொண்டுவந்தது போல சுவையாக இல்லை! போனால் போகட்டும் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது.

எனக்கு நிறைய தங்கம் வேண்டும்!
அவ்வளவுதானே! சரி வா! எலி அவன் காதில் மந்திரம் சொல்ல சிறு உருவம் அடைந்தான். பொந்தினுள் நுழைந்தான். அங்கே பொந்து முழுக்க தங்க நாணயங்கள் சிதறிக் கிடந்தன. எல்லாவற்றையும் பொறுக்கி பைகளில் போட்டுக் கொண்டான்.

போதுமா? உணவு சாப்பிடுகிறாயா? கேட்டது சுண்டெலி.
இந்த பொந்து முழுவதும் உள்ள நாணயங்கள் அனைத்தும் வேண்டும் என்று மனதிற்குள் நினைத்த அவன் எலிகளே! இந்த மாளிகை முழுதும் உள்ள பொன் நாணயங்கள் எனக்கே! இதோ இந்த மருந்தை அடிக்கப் போகிறேன்! நீங்கள் அழிந்து போவீர்கள்! அப்புறம் எல்லாம் எனக்கே! எனக்கே! என்று கையோடு கொண்டு சென்றிருந்த ஒரு மருந்தை தூவினான். அதன் நெடி அங்கே பரவ எலிகள் மாயமாக மறையத் துவங்கின. எலிகள் மறையவும் அங்கே இருந்த தங்க நாணயங்களும் காணமல் போயின. பொந்தின் வாயில் அடைத்துக் கொண்டது.

விஷ மருந்தின் நெடி அவனையும் மயக்கத்தில் ஆழ்த்தியது. அவன் விழித்த போது பொந்தில் யாரும் இல்லை! நாணயங்கள் காணாமல் போயிருந்தன. இருள் சூழ்ந்திருக்க வெளியே வர வழி தெரியாது தவித்து போனான் ஆத்திரக் கார பக்கத்து வீட்டுக்காரன். எலிகளே! என்னை மன்னித்துவிடுங்கள்! என்னை பழைய படி வெளியே கொண்டு சென்று விடுங்கள்! எனக்கு நாணயங்கள் வேண்டாம்! என்னை வெளியே அனுப்புங்கள் என்று கத்தினான். ஆனால் அவன் குரலைக் கேட்க அங்கே யாரும் இல்லை.

அந்த பொறாமை பிடித்த பேராசை பிடித்த எலியாக மாறிப் போன மனிதன் தான் உருவத்தில் பெரிய பெருச்சாளியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எவ்வளவு உணவு கிடைத்தும் திருப்தி இல்லாமல் வளைகளை தோண்டிக்கொண்டிருக்கும் பெருச்சாளிகளை பார்த்து இருக்கிறீர்களா குழந்தைகளே! அதுதான் இந்த மனிதன்.

என்_அன்புக்குரியவர்களே,

நமக்கு இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இக்கதையின் கருத்து.

நமக்கு அன்றாடம் தேவையானதை தேவன் நமக்குதந்து கொண்டிருக்கிறார். ஒருவேளை அவசர தேவை ஏதாகிலும் ஏற்படுமாயின் அதற்கும் தேவையானதை நமது கடின உழைப்பின் முகாந்திரம் நமக்கு கட்டளையிடுகிறார். தேவை அதிகமாகிறபோது நாம் அந்த தேவையை ஈடுகட்ட முயன்று தேவ பக்தியற்றவர்களாகி உலகத்தை நாடி ஓடுகிறோம்.

வேதத்தில் எலியா நாகமான் கொண்டு வந்த காணிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் அவனை அனுப்பி விட்டான். ஆனால் எலியாவின் ஊழியக்காரனோ நாகமானை தொடர்ந்து போய் கொஞ்சம் காணிக்கையை மட்டும் வாங்கி வருகிறான். சிந்தித்து பாருங்கள் எலியாவை தேவன் போஷிக்கும்போது அவன் ஊழியக்காரனை போஷியாமல் இருப்பாரோ??. போஷித்தார் ஆனால் அழிந்து போகின்ற உலக பொருட்களை அதுவும் ராஜாக்கள் உபயோகிக்கின்ற பொருட்கள் கிடைத்தால் வேண்டாமென்று விடுவார்களோ??. அவன் விடவில்லை ஆகவேதான் நாகமானின் குஷ்டமும் அவனை பிடித்துக்கொண்டது.

இக்கதையில் பக்கத்து வீட்டுக்காரன் அளவுக்கு மீறி ஆசைப்பட்டு தனக்கு இருந்த அந்த நல்ல வாழ்க்கையை நஷ்டப்படுத்திக்கொண்டான்.

நமக்கு தேவ பக்தி மிகுந்து காணப்படும்போது நமக்கு இப்போது இருக்கின்றவை போதும் என்ற மனப்பான்மை ஏற்படும் அவ்வாறு போதுமென்று வாழும் போது நம் வேண்டாம் வேண்டாம் என்கிற அளவிற்கு ஆசீர்வாதங்களை கட்டளையிடுவார். எனவே போதுமென்கிற மனதோடு வாழ்வோம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்…

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

But godliness with contentment is great gain.
( 1 தீமோத்தேயு 1 Timothy 6:6)

This entry was posted on December 23, 2021, in Uncategorized. Leave a comment

பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்!


பொறுமையிருந்தால் மனிதன் ஆகலாம் By R.ஸ்டான்லி,
என்ற புத்தகத்தில் எனக்கு பிடித்த வரிகள்

“திரும்பவும் வாழ்க்கையைத் துவங்க வாய்ப்பளிக்கப்பட்டால் அதில் என்ன செய்வீர்கள்?” என்று பண்டிதர் பில்லி கிரஹாமிடம் கேட்கப்பட்டபோது, “பிரசங்கிப்பதைக் குறைத்துப் படிப்பதைக் கூட்டுவேன் “ என்றாராம்!

கேட்பதும் கிடையாது,கற்பதும் கிடையாது ,எனவேதான் பிரசங்கிமார் தங்கள் ஆன்மீகத்தில் வளருவதில்லை.கேட்கவும் கற்கவும் பொறுமை இன்றியமையாதது.

பிரசங்க ஆயத்தத்திற்காய்க் கடவுளிடம் அமைதியாய் உட்காராவிட்டால், தகவல்களும் கற்பனைகளும்தான் உங்களை ஆட்கொள்ளுமே தவிர இறைத்தூண்டல்கள் உங்களுக்கு இல்லாமற்போகும்.

ஜான் நியுமேன் என்பவர் சரியாகச் சொன்னார் “ஏதாவதொன்றைச் சொல்லவேண்டும் என்றிருப்பவன் கள்ளபிரசங்கி; சொல்வதற்கு ஏதாவதொன்று வைத்திருப்பவன் உண்மைப் பிரசங்கி !”

தனது பிரசங்கத்தை அகலப்படுத்தவும் ஆழப்படுத்தவும் முடியாத பிரசங்கி பொதுவாக அதை நீளப்படுத்துவான்.

கடவுளுக்கு முன் உட்கார்ந்து அவரிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ள முடியாத அளவு நமக்கு அலுவல் மிகுந்துவிட்டால்,அவர் நம்மைக் கடினமான சூழல்களுக்குள் எடுத்துச்சென்று கட்டாயமாக நமது வேகத்தைக் குறைக்கக்ச் செய்வார்.

“புறப்பட்டுப்போங்கள் என்பதைக் குறித்து ஏராளம் பேசப்படுகிறது;காத்திருங்கள் என்பதை அதிகம் வலியுறுத்துவதில்லை” என்று A.W. டோசர் கணித்தார். 18 ஆம் நூற்றாண்டின் ஸ்காட்லாந்து பிரசங்கியார் ஆன்ட்ரு போனர் என்பவரின் கவலையும் இதுவே. அவர் தனது காலத்திலிருந்த ஊழியருக்குக் கொடுத்த எச்சரிப்பு “ஏராளமான ஊழியக்காரியங்களில் தலையிட்டுவிட்டு,கடவுளோடு அமர்ந்து நேரம் செலவழிக்க முடியாமல் போவதே ஊழியத்தில் ஆபத்துக்களிலெல்லாம் ஆபத்து !” ஆயத்தப்படுத்தப்பட்ட செய்தியைவிட ஆயத்தப்படுத்தப்பட்ட செய்தியாளரே முக்கியம்.

தெய்வீகப் பொறுமையைக் கற்றுக்கொண்டு அப்பியாசிக்காவிடில் ஜெப ஆவியைப் பெற்றுக்கொள்ளமுடியாது.

சபை மேய்ப்பர்களுக்கக்
கழுதையின் பொறுமையும்,
ஆட்டுக்குட்டியின் சாந்தமும்,
காண்டாமிருகத்தின் தோலும்,
தூக்கணாங்குருவியின் உழைப்பும்,
எருதின் பலம்மும்
வேண்டும் என்று ஒருவர் சொன்னார்.

முதிர்ச்சியற்ற ஊழியர் பலரால் நமது பிரசங்கப்பீடங்கள் மட்டரகமாகியுள்ளன. வளர்ச்சிக்கு பொறுமை அவசியம் .

( பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்! R.ஸ்டான்லி)

புத்தகத்தில் வாசித்ததில், என்னை பாதித்ததில் சில வரிகள்.

This entry was posted on December 15, 2021, in Uncategorized. Leave a comment

மதன் என்ற பெயரால் இருவேறு பரபரப்பு செய்தி..!


இங்கே பகிரப்படும் கதை உள்ளபடியே நாட்டு நடப்பை பார்க்கையில் #ஆசிரியர் / மற்றும் #பப்ஜி #மதன் ஆகியோரின் மனைவியர் சந்தித்த சந்திக்கும் அவமானத்தை யோசிக்கையில் இந்த கதை ஆண்களுக்கே பொருந்தும். பெண்கள் பொதுவாகவே சுயக் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். ஆலாய் பறந்து ஆவிபோய் விழுவோர் ஆண்டகை ஆண்களே எனலாம்.

**ஆனாலும் பகிர்ந்து வைக்கிறேன்..

_மனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு கணவரின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை…!!!__தன் மனைவியை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் கணவனிடம் கேட்டாள்… ஏங்க என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்…??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று…__ஆனால் அதை கணவன் சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்… இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்…__ஒரு நாள் மனைவி தன் கணவனிடம் வந்து கேட்டாள்.. ஏங்க நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்…__பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்… அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் கணவன் கேட்டார்… பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது…. ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்…__மனைவி பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் கணவன் அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்…__அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்… பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது…__கணவன் சொன்னார்.. .. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை… நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது…__இதேபோலத்தான் உன் கணவனாகிய நானும் ஒரு நூல்தான்… நீதான் அந்த பட்டம்… நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்… உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்…__இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை… நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மனைவி தன்கணவனை கட்டி அணைத்துக் கொண்டாள்…!!!__ஆம் அன்பான மனைவிகளே… உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது…__எனவே கணவருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்…!!!__கணவனின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மனைவி, குடும்ப வாழ்வு இனிமையாக அமையும்……..

(படித்ததில் பிடித்தது…)

This entry was posted on November 24, 2021, in Uncategorized. Leave a comment

தமிழ்- உலகின் தாய்மொழி ?


✍இன்று படித்து மெய் சிலிர்த்த பதிவு இது 👏

உலகின் முதல் மொழி தமிழ்!ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ!!!
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி எடுத்துகாட்டுகள் :
Cry – ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay – களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare – ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture – கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
,

ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” – ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

தமிழ் உலக மொழிக்கெல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் )
~
600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )
கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் “கொ ” வரும் இடத்தில் ” K ” ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
” பொத்தல் ” ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , நாடு; கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
2015 ஆய்வுகளின் படி :
( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றா
ர்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (ஐரோப்பிய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
(“நிறைமொழி” மாந்தர் ஆணையில் கிளர்ந்த “மறைமொழி” தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
நிறைமொழி – தமிழ்
மறைமொழி – சமஸ்கிரதம்

 • சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
 • இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
  சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
  சம = சமைத்தல் = செய்
  கிரதம் = பாஷை = மொழி .
  இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
  இயற் = இயற்கை
  கிரதம் = மொழி
  சீனர்களின் மண்டரின் மொழி மற்றும் யூதர்களின் ஹிபுரு’வின் தாய்மொழி அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
  கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
  அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
  அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
  தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் , மேலும்1000 Km க்கு தூரத்திற்கு ஒரே மொழி நிச்சயம் சற்று வேறுபடும்!
  ” ழ ” உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
  1500 வருடங்களுக்கு முன் தெலுங்கு என்ற ஒரு தனி மொழி இல்லை!
  தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெலுங்கு.
  ‘தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே” என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.
  1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
  தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.
  700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
  தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
  அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
  தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
  கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான்.
  மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் “கட்டு மரம்” தான்.
  தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
  இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் “தோரா” (கி.மு 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
  ,,,,
  ஆனால் நம் தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
  கி.மு 1000 ஆண்டுகள் – திருக்குறள்
  கி.மு 2000 ஆண்டுகள் – தொல்காப்பியம்
  கி. மு 3000 ஆண்டுகள் திருமந்திரம்
  கி.மு 5000 பரிபாடல்;
  கி.மு 7000 அகத்தியம் போன்ற நூல்கள் உள்ளன. மேலும் பழமையான நூல்கள் கடல் கோளாலும், சூழ்ச்சிகளாலும் அழிந்து விட்டன…

  இத்தகைய தமிழின் சிறப்புகளை
  பகிருவதற்கு தயங்க வேண்டாம்,,, என் உயிர் மூச்சு என் தமிழ் வாழ்க!!!🙏🤝
This entry was posted on November 10, 2021, in Uncategorized. Leave a comment

யார் இந்த பெஸ்கி ?


தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர் #வீரமாமுனிவர் பிறந்த தினம் – நவம்பர் 8:

இத்தாலியில் பிறந்த வர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.

மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார்.

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.

இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.

அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.

தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.

உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.

இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.

தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில் மறைந்தார்.

திருநெல்வேலி தொல்லியல் கழகம்

This entry was posted on November 8, 2021, in Uncategorized. Leave a comment

முதலூர் முதல்வர்


**வாசிக்க.. யோசிக்க. 💥

சின்னமுத்து என்ற தாவீது சுந்தரானந்தம். (1772-1806)

முதல் கிறிஸ்தவ குடியிருப்பாம் எமது #முதலூர் உருவாக்கியவர்.

தென்மாவட்டத்தின் முதல் #இரத்தசாட்சி.

சாத்தான்குளம் அருகே #காலங்குடி
என்ற சிற்றுரில் பிறந்து,#விஜயராமபுரம் என்ற ஊரில் வளர்ந்தவர்.

இந்து சமயத்தில் தீவிரமாக இருந்த எம் (நாடார்) இனமக்களுக்கு, மெய் தெய்வமாம் இயேசுவின் அன்பை உணரச் செய்த எம் இனத்தவர்.

கிறிஸ்தவர்களாக மாறிய எம் இனமக்களை ஒன்று சேர்த்து,முதல் கிறிஸ்தவ கிராமம் முதலூரை உருவாக்கியர்.

ஆரம்ப காலத்தில் பனைஓலையால் அமைக்கப்பட்ட எம் தேவாலயத்தை இரண்டு முறை தீ வைத்து எரித்தனர் எதிர்பாளர்கள். ஆனால் ஒரே நாளில்  1000 பேர் இயேசு கிறிஸ்துவை தம் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். இதை பொறுக்க முடியாத எதிர்பாளர்கள் ஓலை குடிசைகளாக இருந்த எமது ஊரையும் மறைமுகமாக அடிக்கடி தீ வைத்து எரித்தனர். இதையெல்லாம் பார்த்த தாவீது சுந்தரானந்தம், எமது ஊரையும் ஆலயத்தையும் பாதுகாக்க, எமது ஊர் இளைஞர்களுக்கு சிலம்பாட்டம் என்ற வீர விளையாட்டை கற்றுக் கொடுத்து, #தடிகம்புசேனை(சிலம்பாட்டம்) உறுவாக்கியவர்.

எமது ஊர் மக்களுக்கு கடவுள் பக்தியுடன் கூடவே வீரத்தையும் கற்றுக் கொடுத்தது சிறப்பு அம்சம்.

நேருக்கு நேர் தாக்க முடியாத நயவஞ்சகர்கள் சாப்பாட்டில் விஷம் வைத்து, 1806 ம் அவரைக் கொன்றனர். தமது 34 வயதில் தென் மாவட்டத்தின் முதல் இரத்த சாட்சியாக மரித்தார். இல்லை இல்லை விதைக்கப் பட்டார்.

This entry was posted on November 8, 2021, in Uncategorized. Leave a comment

சிலுவைப் போர் நடத்தியவர்கள் கிறிஸ்தவர்களா ?


May be an image of 1 person and text that says "அட அசப்பிலே நம்ம மோடி மாதிரியே இருக்காரே இவர்!!!"

#சிலுவைப்_போர் என்பது கிறிஸ்தவத்தின் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டாகும். அது சரியா ? சிலுவைப் போர் யாருக்கு எதிராக நடத்தப்பட்டது ? அதை நடத்திய #சாம்ராஜ்யம் கிறிஸ்தவ சாம்ராஜ்யமா என்பதையும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து நண்பர்கள் ஆய்ந்தறிய வேண்டும். எந்தவொரு காரியத்தையும் விருப்பு வெறுப்பின்றி ஆய்வுசெய்தால் தான் உண்மையை நோக்கி நாம் பயணிக்க முடியும். அதுவே நம் இலக்காக இருந்தால் அந்த மெய்ப் பொருளே நம்மை எதிர்கொண்டு வந்து தழுவிக் கொள்ளும்.

சிலுவைப் போரானது ரோம அரசின் அஸ்தமனக் காலத்தில் முகமதியருக்கு எதிராக நடந்தது. அது நாடுபிடிக்க நடந்த போர் அல்ல, தன் நிலைகளைக் காத்துக் கொள்ளவே நடந்த இறுதிப் போராகும். அதன் உச்சத்தில் அழகு சொட்டும் கத்தோலிக்க பேராயங்கள் மினார்கள் கட்டி மசூதிகளாக மாறின. அத்தகைய போரில் தான் யூதர்களின் பெருமைமிக்க கோவிலான எருசலேம் தேவாலயம் தரைமட்டமாக்கப்பட்டு அங்கும் மசூதி எழுப்பப்பட்டது.இஸ்லாமியரின் யுத்தமுறையே வித்தியாசமானதாகும். அவர்கள் தருமத்துக்குக் கட்டுப்பட்டு எந்த யுத்தத்தையும் செய்ததில்லை என்பதையே வரலாற்றின் பக்கங்களிலிருந்து அறிகிறோம்.

அண்மைய உதாரணத்திற்கு #ஆப்கன்#தாலிபன்கள் போதும். அவ்வாறே இங்கும் மொகலாயர் காலத்தில் இருந்த இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகளாய் மாறியதாக சொல்லுகிறார்கள். எனவே தான் தங்கள் வாய்ப்பில் மசூதியை இடித்துவிட்டு அங்கே தங்கள் கோவிலைக் கட்டும்படியாகிறது.இப்படி உலகமுழுவதும் எத்தனையோ யுத்தங்கள் நடைபெற்றாலும் ஒன்றையும் கிறிஸ்தவர்கள் அதிகாரப்பூர்வமாக முன்னின்று நடத்தியதில்லை. அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு உலகநாடும் கிறிஸ்தவ நாடாக இருக்கவில்லை. அதன் அரசமைப்பு சட்டத்தைப் பார்த்தாலே அது தெரிந்துவிடும். ஒரு நாடு கிறிஸ்தவ நாடாக இருந்தால் அங்கே இந்து கோவில் கட்டமுடியுமா ? சவூதியில் இந்து கோவில் கட்ட விடுவார்களா ?

இந்தியாவோ மதசார்பற்ற தேசமென்று அதன் அரசமைப்பு சட்டத்திலேயே தெள்ளத் தெளிவாகவே உள்ளது. ஒரு காலத்தில் கிறிஸ்தவ நாடாகக் கருதப்பட்ட இங்கிலாந்து தேசத்தில் இன்றைக்கு சரிபாதி இஸ்லாமியர் வாழுகிறார்கள்.மனிதன் காலத்திற்கு ஏற்ப தனது தனிப்பட்ட மத நம்பிக்கைகளை அமைத்துக் கொள்ளுகிறான். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில் இறை மறுப்பு பெரிதாகப் பேசப்பட்ட நிலையில் நெற்றிக்கு இடுவதையே அவமானமாகக் கருதினார்கள்.

இன்று நிலைமை வேறு.அவ்வாறே யூதர்களும் தங்கள் புனித நகரத்தை இழந்தபோது இஸ்லாத்தை கத்திமுனையில் ஏற்று அவர்கள் ஆதரவுடன் தான் யூத ஆலயம் இடிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டப்பட்டது. எதிர்த்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். தாங்கள் இழந்த முந்தைய நிலைக்காகவே இன்றைக்கும் பாலஸ்தீனத்தில் போர் நடக்கிறது. பாலஸ்தீனத்தில் தற்போது உள்ளவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்ல, அவர்கள் குடியேற்றப்பட்டவர்களே என்கிறது வரலாறு.அப்படியிருக்க இந்தியக் கிறிஸ்தவர்களை அந்நியர்களாகவும் கிறிஸ்தவம் கத்தி முனையில் மதம் பரப்பியதாகவும் #சங்கிகள் #காவிகள் இணைந்த ஒரு கும்பல் கூலிக்கு மாரடித்து சமூக வலைதளப் பக்கங்களில் #ஹிந்துதர்மம் காப்போம், நம்மை அழிப்போரை அழிப்போம் என #வன்முறை’யைத் தூண்டி #மதவெறி’யைப் பரப்புதல் நியாயமா என்பதனை நடுநிலை உணர்வுள்ளவர்கள் சிந்திக்கவேண்டும்.

ஆடுற கூத்திலே சைடுல ஒரு தனி கச்சேரி போல இந்த #சனியன்_சீமான் வேறு #தாய்மதம் திரும்ப அழைக்கிறான். பிறகு தான் அப்படி யாரையும் அழைக்கவே இல்லை என்று அப்பட்டமாக பொய் சொல்லுகிறான். ஒரு இயக்கத்தின் தலைவர் என்றால் எண்ணத்திலும் பேச்சிலும் சுத்தம் இருக்கணும். வார்த்தை சுத்தமில்லாவிட்டால் மக்கள் ஏற்கமாட்டார்கள், தூக்கியெறிவார்கள்.தமிழர்கள் இந்துக்கள் அல்ல, என்று சொன்னவர் இயற்கை வழிபாட்டை சேர்ந்த அவர்களை மீண்டும் ஆரிய மாயைக்கு அனுப்ப அங்கிருந்து வந்துவிடுங்கள் என்கிறாரே, அவர்கள் ஏற்கனவே அங்குதானே இருக்கிறார்கள், எங்கிருந்து எங்கே வரவேண்டும் ? தசாவதாரம் தான் தமிழர் மதமா என்ன ? தமிழர் சமயம் என்பது என்ன ? சமயம் என்பதே சமைத்தல் அல்லது உருவாக்குதல் என்பது பொருளாயிருக்க இறைவனுக்காக மனிதன் ஒரு மதத்தை சமைத்து அதில் இறைவனை செய்து வைத்து வணங்கமுடியுமா என்ன ? போதாக்குறைக்கு கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர் சமயமல்ல என்பது ஒரு சமாளிப்பு. அப்படியானால் என்ன அர்த்தம், தமிழர் சமயமல்லாதவற்றை ஏற்றவர்கள் தமிழர்கள் அல்ல என்பது தானே ? இதுகூடவா நமக்கு புரியாது.

இப்படி போகிறது இக்காலத்து #அரசியல். நாம் நம்பி ஏற்றுக்கொண்ட அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான போர் என்பதே அவசியமில்லை. ஏனெனில் #இயேசுவானவர் கடவுள் சகலவித சக்தியையும் பெற்று வலம்வந்தபோதே அதையெல்லாம் விட்டுவிட்டு பாவப் பரிகார பலியானார். அவரே தம்மை ஒப்புக்கொடுக்காமல் யாரும் அவரைப் பிடித்திருக்கவோ அடித்திருக்கவோ கொன்றிருக்கவோ முடியாது என்பது தான் உண்மையாகும். அவருடைய கோர மரணத்தையும் பரியாசம்பண்ணி மூன்று ஆணியைப் பிடுங்க முடியாதவன் நம்மை காப்பாற்றுவானா என்று எகத்தாளம் செய்கின்றனர், மத அடிப்படைவாதிகள். இவர்கள் என்ன, அப்போதே அவர் அருகிலிருந்த ரோம போர்ச் சேவகர்கள் அவரை இதேபோல் எள்ளி நகையாடினார்கள்.

ஆனாலும் அவர் சிலுவையில் தொங்கிய நிலையிலேயே தம்மை தேவக் குமாரன் என்பதை நிரூபித்தார். மட்டுமல்லாது சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட அவருடைய உடல் யூத முறைப்படி அடக்கம் செய்யப்பட்டு அரசாங்க முத்திரையிட்டு ரோமப் போர்சேவகர்களால் காவல் வைக்கப்பட்டது. ஆனாலும் அவர் தாம் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து தம் சீடருக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.

**எனவே மனுக்குலத்தின் முன் இருக்கக்கூடிய கடைசி வாய்ப்பான இயேசுவின் மார்க்கத்தில் அமைந்தால் மட்டுமே ஒருவர் நீடுவாழ்வெனும் புனித வாழ்வில் புகமுடியும் என்பதனை உணர்ந்து அதை ஏற்காவிட்டாலும் பழிக்காதிருந்தால் ஒருவேளை ஏதோ ஒரு சூழலில் அந்த குருநாதரின் கடாட்சமும் தீட்சையும் ஒருவருக்குக் கிடைக்கும் என்பதையே நாம் மனதில் நிறுத்தவேண்டும்.

This entry was posted on November 6, 2021, in Uncategorized. Leave a comment

தமிழ் கிறிஸ்தவ உலகின் மதிப்புமிக்க எழுத்தாளர் ஆர் எஸ் ஜேக்கப் அவர்கள் ரேனியஸ் ஐயர் பற்றி எழுதிய கட்டுரை


இரேனியஸ் வாழ்வும் எழுத்தும்

ஆர். எஸ். ஜேக்கப்

அருள் தொண்டர் சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் இரேனியஸ் சென்னைக்கும், நெல்லைக்கும் கிடைத்த அருட்கொடை.. திருச்சபை மக்கள் அவரை இரேனியஸ் என்றே அன்புடன் அழைக்கிறார்கள். திருமறையாளர்கள் “திருநெல்வேலி அப்போஸ்தலன் ரேனியஸ்” என்று கூறுகிறார்கள். அப்போஸ்தலன் என்றால் தூதுவன் என்று பொருள். தூதுவனுக்கான அனைத்து இலக்கணங்களையும் ஒருங்கே அமையப் பெற்றவர் ரேனியஸ். அவரது வாழ்வும், எழுத்தும் என்பன தொண்டும், தியாகமும் தூய்மையுமே. ஒன்றையொன்று பிரிக்க முடியாதபடி அவரது வாழ்வும் எழுத்தும் இரண்டறக் கலந்துள்ளன.
அன்னாரின் இருபத்தி நான்கு ஆண்டுகளின் வாழ்வை எண்ணுங்கால் ரேனியஸ் அடிகளாரின் தனி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை , குருத்துவப் பணி, ஆன்மீக ஆதாயப்பணி, அருளுரைப்பணி, சபைகளைக் கட்டுதல்,, சபை மேய்ப்புக் கண்காணிப்புகள், நிறுவனங்களை நிறுவுதல், அவைகளைத் திறம்பட நடத்தல், ஊழியர்களைத் தேர்ந்தெடுத்துப்பயிற்சி தருதல், தினமும் தெருப்பிரசங்கங்கள் செய்தல், இடையறாது நூற்களை எழுதுதல், அறிவு நூற்களை எளிய நடையில் கொடுத்தல், கடைசி வினாடிவரை வேதாகம மொழிபெயர்ப்பு இவ்விதமாகப் பல முனைகளில் அவரது ஊழியம் விரிந்து பரந்து வியாபித்துள்ளது. இவரது வாழ்வும் எழுத்தும் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவை.
மானுட நேயத்திற்கு விரோதமான செயல்கள், கொத்தடிமைத்தனங்கள், சாதியக் கொடுமைகள், ஏழைகளின் உழைப்பைச் சுரண்டுதல், மூடபக்தி இவைகளைக் காணுந்தோறும் கொதித்து எழுந்தார். அவர் உருவாக்கிய ஆலயங்கள், பள்ளிகள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப்பாதுகாப்புக்கான கூடங்களாக அமைந்திருந்தன. தமிழ் மக்களுக்கு அறிவு உண்டாகும்படி அவர் படைத்த நூல்கள் அனைத்தும் அவரது ஆழமான எழுத்தாண்மைக்குச் சான்று பகர்வதாக உள்ளன.
அவரைப் பற்றிய செய்திகள் வெகுகாலம் மக்களுக்குத் தெரியாமலே ஆங்கில அறிக்கைகளுக்குள்ளே அடங்கிக் கிடந்தன. நெல்லைத் திருமண்டில வரலாற்றறிஞர் அருட்திரு. டி. ஏ. கிறிஸ்துதாஸ் ஐயர் அவர்கள் முப்பது ஆண்டுகள் அரும்பாடுபட்டுச் சேகரித்துப் பதிப்பித்த நூல் “நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ்” என்பதாகும். அவரது ஐந்நூறு பக்க நூலினை நான் ஐம்பது பக்கமாக 1993-ல் சுருக்கி எழுதி வெளியிட்டு இருந்தேன். இக்கட்டுரைக்கு ஆதாரம் அவ்விரு நூற்களுமே
இரேனியசின் வாழ்வும், எழுத்தும் முப்பரிமாணங்களைக் கொண்டவை. ஊழிய உழைப்பு, எழுதிய நூற்கள், அவரது அன்றாட நாட்குறிப்புகள் ஆகியவையே அவை. பிறப்பும் தமிழ்நாட்டுக்கு வருகையும் 1790-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி இன்றைய ஜெர்மனியில் பிரஸ்ய நேரியன் வெல்டர் என்ற ஊரில் பிறந்தவர் இரேனியஸ். தனது ஏழாம் வயதில், இராணுவத்தில் பணிபுரிந்த தந்தையை இழந்தார். இவரது உடன் பிறந்தவர் ஐவர். விதவையானதாயின் வளர்ப்பு அவரை மனித நேயம் மிக்கவராக்கிற்று. 1811-ல் மறைபரப்பும் திருப்பணியில் சேர உறுதி கொண்டு பெர்லின் நகரில் 15 மாதங்கள் இறையியல் பயிற்சி பெற்றார். 1812-. இல் சுவிசேலூத்தரன் திருச்சபையில் குருத்துவப்பட்டம் பெற்றார்.
1814-ல் சென்னை வந்து சேர்ந்த இரேனியஸ் அடிகளார் தரங்கம்பாடியில் ஐந்து மாதகாலம் ஊழியப் பயிற்சியும் தமிழ்மொழிய பயிற்சியும் பெற்றார் தொடக்ககாலப் பணி 1814 – இல் சென்னை வந்த இரேனியஸ் ஜார்ஜ் டவுணில் ஒரு வாடகை வீட்டில் தங்கிதம் இறைப்பணியை ஆரம்பித்தார். அவர் குடியிருந்த வீட்டு வளாகத்தில் வழிபடு தெய்வங்கள் சிலை வடிவிலிருந்தன. அங்கு வந்த மக்களிடம் அன்போடு பழகினார். சிறு உரையாடல்களைக் கனிவோடு அவர்களுடன் நிகழ்த்தினார்.
1814 ஏப்ரல் 12 முதல் ஒரு சிறுஜெபக்கூட்டம் அவ்வீட்டில் உருவானது. அங்கு 46 பேர் வருகை தந்தனர். ஏப்ரல் 28 ஞாயிறு அன்று முதல் ஆராதனை நடந்தது. அதுவே ஞாயிறுப் பள்ளியாகவும் பயன்பட்டது. ரேனியஸ் முதலில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தால் அதுவே பள்ளியாகவும், ஆராதனைத் தலமாகவும், ஓய்வுநாள் வகுப்பாகவும் சமூகக்கூடமாகவும் விளங்கும். இதுவே. அவரது வழக்கமாக இருந்தது.. வேலை இல்லாத நாட்களில் சோம்பிக்கிடத்தல், சாதி வேறுபாடுகள் ஆகிய பண்புகளைத் தாம் அறிந்த தமிழ் மக்களிடம் அவா பெருங்குறைகளாகக் கண்டுணர்ந்தார். களைய வேண்டிய பண்புகளாக அவரால் முதலில் அடையாளம் காணப்பட்டவை இந்த இரண்டும்தான். திருச்சபை மக்களிடம் இவைகளைக்களைந்து எறிய அவர் எண்ணினா, வேலை இல்லாத நாட்களில் பிற சிறிய தொழில்களைச் செய்யுமாறு தம்மை நாடிய மக்களுக்கு அவர் உபதேசித்தார்.
சென்னை நகரில் வசித்து வந்த ஒரு பக்தி உள்ள டச்சுக் குடும்பத்தைச் சேர்ந்த அனி’ என்ற பெண்ணைத்தம் இருபத்தைந்தாம் வயதில் (மார்ச் ஏ ஆர் நாளில்) அவர் திருமணம் செய்து கொண்டார்.
சிறு சிறு துண்டு அறிக்கைகளின் வழியாக மக்களிடம் சமூக, சமயச் செய்திகளைக் கொண்டு செல்லமுடியும் என்பதை முதலில் தமிழர்க்கு அறிமுகப்படுத்தியவர் இரேனியஸ் அடிகளாரே. இந்த எண்ணத்தைச் செயலாக்க Madras Tract Society என்ற அமைப்பினை 1878 இல் அவர் நிறுவினார். (பின் வந்த ஒரு நூற்றாண்டுக்காலத்தில் இம்முறை தமிழ நாட்டுச் சமூக, சமய, அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு இடத்தினைப் பெற்றது என்றால் மிகையாகாது) தாம் எழுதிய துண்டறிக்கைகளை எழுத்தறிவில்லாத மக்களிடம் படித்துக் காட்ட கிறிஸ்தியான் என்ற ஒருவாசகரையும் (Reader) நியமித்தார்.
இரேனியசிடம் முதன் முதலாகத் திருமுழுக்குப் பெற வந்தவர் இரு மனைவிகளை உடையவர். ஒரு மனைவியை நீக்கிவிட்டு ஒழுக்கமாக வாழவேண்டும் என்று வந்தவரிடம் அவர் கண்டித்துரைத்தார். வந்தவர் ஓடிவிட்டார். அடுத்து கிறிஸ்தவராக ஆசை கொண்டு வந்தவர் மிகுந்த சுயநலக்காரர். அதற்கு ” இங்கு இடமில்லை ” என்று கூறி அவரை அனுப்பி விட்டார். இப்படிப் பல நிகழ்வுகள். இரேனியஸ் தம் சமயப்பணியில் மிகவும் சோர்வுற்றார் எனினும் உண்மையானவர்களும் இருந்தார்கள். இறுதியில் அவருடன் ஐந்து குடும்பங்கள் மட்டுமே நிலைத்து நின்றன. சென்னையில் முதல் கிறித்தவர்கள் இவர்களே. எனினும், இரேனியஸின் நற்பண்புகளில் சபை நாடோறும் வளர்ந்தது. தெலுங்கர், ரோமானியர், தமிழர் எனப்பலமொழியினரும் அவரை விரும்பி நாடி வந்தனர்.
ஜார்ஜ் டவுணில் 1819ஜீன் 30ல்ஓர் ஆலயம் கட்ட அவர் கால்கோள் நாட்டினார். அன்று காஞ்சிபுரம் சென்றார். அங்குவரதராஜப்பெருமாள் கோயில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. பலர் தீவிர பக்தியின் காரணமாகத்தங்கள் உடலை வருத்தி வழிபடுவது கண்டு அவர் நெஞ்சம் குமுறினார். காஞ்சிபுரத்தில் சில பிராமணர்கள் வந்து இரேனியசிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவ்வூரில் ஒரு ஆங்கில – தமிழ்ப் பள்ளியை நிறுவினார் என்று அவரது வாழ்க்கைக்குறிப்பிலிருந்து தெரிய வருகிறது.
இரேனியசின் பெருமுயற்சியால் 1817 நவம்பர் 5 ஆம் நாளில் சென்னையில் ஒரு வேதாகமச் சங்கம் நிறுவப்பட்டது. அப்போது நடைமுறையில் இருந்த பெப்ரிஷியஸ் மொழி பெயர்ப்பான தமிழ் ‘வேதாகமம் மக்கள் பேசும், புரியும் மொழியில் இல்லாததினால் 1815 நவம்பர் 15 ஆம் நாள் முதல் அதன் திருத்தப்பணியை ஆரம்பித்த இரேனியஸ் தம் இறுதி மூச்சுவரை அப்பணியைச் செய்து வந்தார். உதவிக்கு ஒரு தமிழாசிரியரை எப்போதும் உடன்வைத்து இருந்தார்.
போராட்ட வாழ்வு
1815 மே மாதம் சென்னையில் முதல் பள்ளியை நிறுவினார். பின்பு பள்ளிகள் பெருகத் தொடங்கின. கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. சென்னையில் ‘செமினரி’ ஒன்றை ஆரம்பித்தார். ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளி என்று இந்நாளில் உள்ளவைகளே அன்று ‘செமினரி’ எனப்பட்டன. தமிழைத் தரத்துடன் சிறந்த முறையில் கற்றுக் கொடுக்க தமிழ் இலக்கண நூல் ஒன்றினை மிக எளிய முறையில் எழுதினார். பாடநூல்கள் சிலவும் தமிழில் எழுதி வெளியிட்டார். ஆற்காடு, சிற்றூர், வேலூர் என்று பல ஊர்களுக்கும் அலைந்தார். சமண மதத் தலைவர்களயும் சந்தித்தார். இவ்வரிய பணிகளுக்கு மத்தியில் பழைய, புதிய ஏற்பாட்டு வரலாறுகளையும், கிறித்தவ சித்தாந்தத்தையும் வினாவிடையாக எழுதினார்.
“தமிழருக்கு ஒரு நிருபம்” என்று ஒரு சிறு நூலை வெளியிட்டார். அது தமிழ் மக்களை விழித்தெழச்செய்யும் அற்புத நூலாகும். ஆங்கிலத துண்டு அறிக்கைகளை அவ்வப்போது தமிழாக்கம் செய்து இலவசமாக விநியோகித்தார். அக்காலத்திய இறுக்கமான தமிழ் உரைநடை எளிமைப்படுத்தப்பட வேண்டும். என்ற உணர்வினைத் தமிழ் அறிஞர்களின் மனத்தில் உருவாக்கிய அரிய முயற்சி இதுவாகும்.
ஆதியாகமம் என்ற விவிலியத்தின் முதல் நூலை எளிய தமிழில் மொழிபெயர்ப்பு செய்து முடித்தார். அச்சு இயந்திர வசதிக போதுமானபடி இல்லாத காலம். எனவேதம்கையாலேயே எழுதிப்பல படிகளை எடுத்தார்.
“மனந்திரும்பு, கடவுளை அறிந்து கொள்” என்ற இரேனியஸில் போதனை அன்றைய மக்களுக்குப் புதுமையாக இருந்தது. சித்தாமது என்ற ஊருக்குள் அவர் செல்லும்போது இடி மின்னலுடன் பலத்தம பெய்தது. “வெள்ளைக்காரன் வீட்டுக்குள் வந்தால் தீட்டு” என்ற எண்ணிய மக்கள் அவரை வீட்டுக்குள் அழைக்கவில்லை. அவர் இரக்கம் கொண்ட ஒருசிலர் நள்ளிரவில் பாய்களைப் பல்லக்கின் மது போட்டு அவர் தலைநனையாதபடி செய்தனர்.
1818 செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கப்பெற்ற “சென்னை துண்டு பிரசாரக் கழகம்” என்ற நிறுவனத்தை லண்டன் கழகத்தும் இணைத்தார். வாசிப்புப் பழக்கம் பரவலானது.
1818 அக்டோபரில், சென்னையில் பயங்கர காலரா நோய் பரவி பலர் மாண்டனர்; பலர் ஊரைவிட்டு ஓடினர். இரேன் முதலுதவியைத் தைரியத்துடன் செய்தார். பல உயிர்களை காப்பாற்றினார். காலரா நோய்த்தடுப்பு பற்றி ஒரு துண்டறிக்கைாம் அச்சிட்டு மக்களுக்கு விநியோகித்தார். வாசகர்களை அனுப்பி படித்து காட்டவும் செய்தார்.

இரேனியஸ் லுத்தரன் முறைப்படி அருட்பொழிவு பெற்ற காலத்தில் சென்னை சி.எம்.எஸ் சங்கத்திற்கும் லண்டன் சங்கத்திற்கும் கருத்துவேறுபாடு எழுந்தது. ரேனியஸால் ஆங்கிலிக்கன் முறைமைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை . விளைவாக இரேனியஸ் திருநெல்வேலிக்கு மாற்றப்பட ரனியஸ்மிகுந்த வேதனைக்குள்ளானார். ஆயினும் அது,”இறைச்சி என்று கருதி பணியினைத் தொடர் “இறைச்சித்தம்” அவரது சென்னை ஊழியம் அரைகுறையில் நின்றது. சாதி பேதத்தை அறவே ஒழிக்க முயன்றதும் அவரது இட மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். இரேனியஸின் வாழ்வு போராட்டமாகவும் அவரது எழுத்து புதுமையாகவும் இருந்தன.
நெல்லைக்கு நல்ல காலம்
1820 ஜீன் 2 ஆம் நாள் ரேனியஸ் குடும்பத்தாரோடு புறப்பட்டு திருச்சி, மதுரை முதலிய இடங்களில் தங்கித் தங்கி முப்பத்தைந்து நாட்களுக்குப் பிறகு ஜீலை 7 ஆம் நாள் பாளையங்கோட்டை வந்து சேர்ந்தார். இரேனியஸிற்கு நெல்லை நகரத்தில் வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை. “வெள்ளைப்பரங்கிக்கு ஏது வீடு” என்று மறுத்தனர். இறுதியாக இவரது முன்னோடியாக நெல்லையில் பணிசெய்த ஹாப்ஸ் ஐயர் தம் பங்களாவை விலைக்குக் கொடுத்தார். ஏறத்தாழ நாற்புறமும் ஆயிரம் மீட்டர் நீளமுள்ள கோட்டை மதில்களைக் கொண்ட பாளை நகர் ஊழியத்தை இரேனியஸிடம் ஹாப்ஸ் ஐயர் ஒப்புவித்தார். இது 1820 ஆம் ஆண்டின் நிகழ்வாகும். இரேனியஸ் 1822ல் நெல்லை வண்ணார்பேட்டையில் முதல் பள்ளியைத் தொடங்கினார். ஆசிரியர் சங்கரலிங்கம். ஆண்டுக்கு சம்பளம் ரூபாய். 14, மாணவர்கள் 17 பேர்.
திருநெல்வேலி, மேலப்பாளையம், குறிச்சி, தச்சநல்லூர் என்று பள்ளிகளும் சபைகளும் ஆலயங்களும் பெருகத் தொடங்கின. பாளையங்கோட்டையில் நிறுவிய செமினரி பள்ளியில் சாதி வேறுபாடு கடுமையாகத் தலை தூக்கிய போது இரேனியஸ் பள்ளியை மூடினார். சாதி வெறியை வேரோடு ஒழிப்பதில் இரேனியஸ் உறுதியாய் இருந்தார். செமினரியில், ஆங்கிலம், தமிழ், கணக்கு, விவிலியம் ஆகியவை கற்றுத் தரப்பட்டன. அதுவே இன்றைய பிஷப்சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி ஆகும். 1823 இல் பெண்களுக்கு அவர் ஒரு செமினரியைத் துவக்கினார். பல ஊர்களில் இருந்தும் தெரிந்தெடுத்த 39 பேர் அப்பள்ளியில் பயின்றனர். இரேனியஸின் துணைவியார் அனி அம்மாள் அப்பள்ளியின் தலைவி. அனைத்துப் பாடங்களையும் போதித்தார்கள். அதுவே இன்றைய மேரி சார்ஜென்ட் மேல்நிலைப்பள்ளி. இந்தியாவிலேயே பெண்களுக்கென விடுதியோடு கூடிய தனிப்பள்ளி முதலில் நாகர்கோவிலும் இரண்டாவது பாளையங்கோட்டையிலும் தான் தொடங்கப்பட்டன.
இரேனியஸ் கால நெல்லை மாவட்டம் என்பது இராமநாதபுரம் மாவட்டத்தையும் உள்ளடக்கியது. இரேனியஸ் பயணத்தில் சற்றும் சலியாது உற்சாகமாகப் பணியாற்றினார். கிராமம் கிராமமாக, ஊர் ஊராகச்சென்றார். அவர் காலடிபடாத இடம் இல்லை எனலாம். மக்கள் கூட்டம் கூட்டமாகக்கிறித்தவம் தழுவினர். நெல்லை நகரத்தில் குற்றாலம் சாலையில் உள்ள ஒரு ஜெபக் கூடத்தில் உயர் சாதி மக்கள் பலர் வந்து இரேனியஸிடம் கேள்விகள் கேட்டனர். தர்க்கம் செய்தனர். உரையாடல்கள் நிகழ்த்தினர்.
இரேனியஸ் எழுதி வெளியிட்ட ஞானோபதேச வினாவிடையை பரவலாக மக்கள் படித்தனர். நெல்லைக்கும், நாகர்கோவிலுக்கும் சேர்த்து ஒரு துண்டுப்பிரசுர சங்கத்தை அவர் நிறுவினர். அச்சு அடிக்கும் தாள் லண்டனில் இருந்து தருவிக்கப்பட்டது. துண்டுப் பிரதிகளின் வாசகங்களைச் சந்தி பிரித்து எளிமையாக்கிக்கொடுத்திருந்தார். இதனால் பாமர மக்களின் படிப்பறிவு வளர்ந்தது. வசன நடையும், ஓர் இலக்கிய உருவம் கொண்டது. இரேனியஸின் துண்டுப்பிரதிகள் குமரி முதல் சென்னை வரை சென்றன.
இரேனியஸ் நெல்லை வந்தபிறகும் 14 ஆண்டுகள் தொடர்ந்து திருநெல்வேலியிலிருந்த திருப்பாற்கடல்நாதன் என்பாரிடம் தமிழ் பயின்றார். கடைசிவரை தமிழைக் கற்றுக் கொண்டே இருந்தார். திருப்பாற்கடல் நாதருக்கு ஆங்கிலம் அறவே தெரியாததால் இதனைத் தனது நாட்குறிப்பில் இப்படி எழுதுகிறார்.
“திருப்பாற்கடல் நாதனுக்கு ஆங்கிலம் அறவே தெரியாதது நமக்கு மிகவும் சாதகமாக இருந்தது எப்படியெனில் தமிழைத் தமிழ் மரபிலேயே கிரகித்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்று எழுதினார். (திருமதி.சரோஜினி பாக்கியமுத்து எழுதிய விவிலியமும் தமிழும் பக்கம் 103)
இரேனியஸ் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இரேனியஸின் நாட்குறிப்புகள் அனைத்தும் அவரின் சமூகப்பணியின் மேம்பாட்டுக்குறிப்புகளாகவே உள்ளன. இவை தனித்து ஆராயத்தக்கன.
1823,24,25 ஆம் ஆண்டுகளில், ஒடுக்கப்பட்ட அடிமைப்பட்டமக்கள் நெல்லைப்பகுதியில் கூட்டம் கூட்டமாகக்கிறித்தவம் தழுவினர். இதனைக் கிறித்தவ வரலாற்று ஆசிரியர்கள் வெகுஜன இயக்கம் என்கின்றனர். பனைஏறிய மக்கள் பனைஏடுகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தனர். நெல்லையில் நடந்த இந்த விழிப்புணர்வு இயக்கம் உலக வரலாற்றில் இதுவரை கண்டிராதது என்று கூறப்படுகிறது. சபைகள் பெருகப் பெருக துன்பங்களும் பெருகின. பிரச்சனைகள் நிறைந்தன. அது குறித்து இரேனியஸ் தம் நாட்குறிப்பில் இப்படி எழுதுகிறார்:
“சாத்தான் சீறுகிறான், ஆனால் அவன் தோல்வி அடைவான். கர்த்தர் வாசலைத் திறப்பாரானால் யார் அதை மூடுவான்?”. இவ்விதமாக அவரது நாட்குறிப்புகளும், ஆவணக் குறிப்புகளும் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவை ஒரு தனி ஆய்வுப் பகுதியாகும்.
அருள் ஏராளம்
இரேனியஸ் தம் விரிவான கல்வித் திட்டங்களுக பாளையங்கோட்டையில் போதிய இடம் கிடைக்காமல் திணறின் அதனை அறிந்தவெங்கு முதலியார் திருநெல்வேலி – பாளையங்கோட்டை நெடுஞ்சாலைக்கு வடக்கில் இருந்த கட்டிடங்களோடு கூடிய பெரும் வயல்வெளியை 750 ரூபாய்க்கு விலைக்குக்கொடுத்தார். அன்று இது மிகக் குறைந்த விலையே. 5 குதிரைகள் கட்டும் லாயமும், குளிக்கும் அறைகளோடு கூடிய சிறு குளமும் அங்கு இருந்தன.
பெருமகிழ்ச்சி அடைந்த இரேனியஸ் கடவுளுக்குத் தம் நன்றிப் பெருக்கை ஏறெடுத்தார். அக்காலத்தில் பெரும் புகழ் பெற்ற சுலோச்சன முதலியாரும் இரேனியஸின் நண்பராய் இருந்தார். அவர் மிஷனரிகளிடம் கல்வி கற்றார். நெல்லை நகரில் ஆங்கிலப் பள்ளி நிறுவ அவர் உதவி செய்தார்.
பெண்களுக்கான செமினரி பள்ளியைத் திருமதி இரேனியஸ் கண்காணித்தார். அதில் பயின்ற பெண்களின் வம்சாவழியினர் இன்றும் உலகம் முழுவதும் உயர்நிலையில் உள்ளனர். அப்பள்ளி பற்றி இரேனியஸ் எழுதிய நாட்குறிப்பை மிகச் சுருக்கமாகத் தருகிறேன். “இப்பள்ளியை இந்தியாவில் ஒரு புதுயுகம் எனலாம். பெண்கள் தங்களையும் தங்கள் இல்லங்களையும், சுத்தமாகவும், ஒழுங்காவும் வைத்துக் கொள்ளக் கற்பிக்கிறோம். தெளிந்த புத்தியும், உண்மையும் உள்ள மாணவிகளாகவும், தாய்மார்களாகவும் விளங்கத்தக்கவர்களாக அவர்களை உருவாக்குகிறோம்”.
1825 டிசம்பர் 8ல் ரேனியஸின் குழந்தை ஒன்று மரித்தது அவரைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. நாட்டு நலப்பணிக்காகப் பாடுபட்ட இரேனியஸ் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளைத் தமிழ் மண்ணில் புதைக்கவில்லை; விதைத்தார்கள். அதன் அறுவடையே இன்று நாம் காணும் கல்வியின் மேம்பாடு.
பாளை கதீட்ரல் ஆலயம் இப்போது இருக்கும் இடத்தில் ஒரு சிறிய ஆலயத்தை இரேனியஸ்1826 ஜனவரியில் தொடங்கி ஜுன் மூன்றாம் நாள் கட்டி முடித்தார். அதுவே இன்றைய திரித்துவ ஆலயம் எனப்படும் ஊசிக் கோபுரம் ஆகும்.(அதன் பிறகு பல மாற்றங்கள் பெற்றுள்ளது)
அறிவு நூல்கள் இரேனியஸின் உழைப்பு மிகக் கடினமானது. ஒருபக்கம் வேதாகமமொழி பெயர்ப்பு, இன்னொரு பக்கம் துண்டுப் பிரசுரங்களை எளிமையாக எழுதுவது, பிறிதொரு பக்கம் கிறித்தவ இலக்கியப்பணி.
இரேனியஸ் செய்த “வேதசரித்திரம்” என்ற தமிழாக்க நூல் செமினரி பள்ளிகளில் முக்கியப் பாடப்புத்தகமாகப் பயன்பட்டது. 1820இல் சுவிசேஷ சமரசம் என்ற ஒரு பெரிய நூலையும் எழுதினார். மாணவர்கள் உலக அறிவைப் பெறவேண்டும் என்ற எல்லை இல்லாத்தாகத்தில் பொது அறிவு நூற்களை வெளியிட்டார். அதில் வரலாறு, தாவரம், மண்வளம், கனிப்பொருள்கள் பற்றி தெளிவாக எழுதினார்.

அவரது நூல்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை சிலவற்றின் பெயர்கள் இவை.
1.வேத உதாரணத்திட்டு

 1. உருவ வழிபாடு
 2. சூரிய மண்ட லம்
  4.இயற்கையின் நிகழ்வு
 3. கால இயலும் வான இயலும்
  6.புதிய கோட்பாடு
  7.சமயத்துவம்
  8.பூமி சாஸ்திரம்
  9.தமிழ் இலக்கணம் (ஆதாரம் தமிழ் வரலாற்றில் கிறித்தவம், பக் 105)
  ஸ்மாலி என்பவர் 1822 இல் எழுதிய “இந்திய யாத்திரிகன்” என்ற நூலை அவர் திருத்திக்கொடுத்து அச்சிட உதவி செய்தார். ஞானதீட்சை பெறுவோரை ஆயத்தக்காரர்களாக்கி அடிப்படைஞானத்தைப் புகட்டிய பிறகே அவர் திருமுழுக்குக் கொடுக்கச் சம்மதிப்பார். அதற்காக 1822-இல் அவர் எழுதிய “ஞானப்போதிப்பு” என்ற நூல் அவர் காலத்திற்குப் பிறகும் திருத்தொண்டர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டுவந்தது.
  புதிய சபைகள் உயர்சாதியினரின் தொல்லைக்கு உள்ளாயின் இதனைத் தவிர்க்க விரும்பி இரேனியஸ் நிலங்களை விலைக்கு வாய புதுக் குடியிருப்புகளை எற்படுத்தி நல்லூர், மெய்யூர், சமாதானபுரம் முகலார், அடைக்கலாபுரம் போன்ற பெயர்களை அவற்றுக்குச் சூட அந்நாளிலேயே சமத்துவ சமாதானக்குடியிருப்புகளை அமைத்தார்.
  1827 இல் “வேதாகம மொழிபெயர்ப்பு விதிகள்” என்ற ஆங்கில நூலை எழுதினார். அது மொழிபெயர்ப்பாளர்களுக்கு இலக்கணம் போன்றும். கை நூல் போன்றும் அமைந்திருந்தது. இந்தியாவில் மொழிபெயர்ப்பியல் சிந்தனைக்கு அந்நூல் ஒரு முன்னோடி முயற்சியாகும்.
  1827 இறுதியில் “விக்கிரக வணக்கம்”, “மானிட வாலாறு” என்ற நூற்களை எழுதினார். அப்போது நெல்லைத் திருமண்டிலத்தில் சபைகள் தோன்றி இருந்தன.
  துண்டுத்தாள் வெளியீட்டுச் சங்கம் இரேனியஸ் எழுதிய பிரதிகளை இலட்சக்கணக்கில் அச்சடித்து இலவசமாகக் கொடுத்தது. அவ துண்டுப்பிரசுர ஊழியம் நெல்லைக்குவடக்கே நாறு மைல் தொலை உள்ள கம்பம் வரை பரவி பலர் பயனடைந்தனர்
  தீங்கநுபவி
  ஒருகுழந்தையின் திருமுழுக்கு காரணமாக எழுந்த கருத்து வேறுபாட்டி இங்கிலாந்து “திருச்சபை ஊழியர் கழக வெறுப்பைக் கக்கியது. இரேனியசின் செமினரியில் கற்ற சற்குணகம் (CMS) இரேனியஸ் மது யோசேப்பு என்ற இருவர் அக்காலத்தில் பா,தல் யாழ்ப்பாணம் சென்று உ கல்வி கற்றனர். மேற்கல்விக்காக வெளிநாட்ட தமிழ்க் கிறித்தவ மக்கள் இவர்களே. .
  1830 மே பத்தாம் நாள் இரேனியஸின் – தங்கையும் மரித்துப்போன செய்தில் ” அருமைத் தாயாரும், ஒல் தம்மை ஊழியத்திற்கு ஒப்புக் கொடுத்தபோ நோக்கி மனம் மருண்டு நின்றார். அப்பொழுது ”ஒருவன் தன் தாயையாவது, தகப்பனையாவது என்னிலும் அதிகமாக நேசித்தால் அவன் எனக்குப் பாத்திரன் அல்ல” என்ற வேத வசனத்தால் தெளிவு கண்டு ஊழியத்தைத் தொடர்ந்ததை நினைத்துப் பார்த்தார். “மிஷனெரிப் பணியில் சொந்த விருப்பு வெறுப்புக்கு இடம் ஏது” என்று தம் நாட்குறிப்பில் எழுதிவிட்டு வேதனைகளை உள்ளடக்கிக்கொண்டு தம் ஊழியப்பாதையைத் தொடரலானார்.
  அக்காலத்தில் இந்தியா முழுமைக்கும் கல்கத்தாவிலிருந்த பேராயர் ஒருவரே கிறித்தவ மக்களின் சமய வாழ்விற்கு பொறுப்பாகவிருந்தார். பெருகி வரும் திருச்சபையை லண்டன் சி.எம்.எஸ் சங்கம் தடுத்து நிறுத்துவது போல் இரேனியஸிற்குத் தோன்றியது. அவர் ஒரு வழி செய்தார். திறமையான ஏழு உபதேசிமாரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தாமே அருட்பொழிவு செய்ய அதிகாரம் தரும்படி சென்னை கமிற்றிக்கு எழுதினார். திருச்சபைக்கும் இரேனியசிற்கும் கொள்கை முரண்பாடுகள் முற்றின.

சுத்திகரிப்பு
மானுடவாழ்வில் ஒழுக்கம் தலையாயது என்று போதித்து வந்தார்; திருச்சபைக்குள் அதனைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினார். தலைவன் கோட்டை சபையில் ஒருவன் ஒருவிதவையின் பசுவைத்திருடிக் கொண்டு போனான். அதனைத் திரும்பக் கொடுத்து விடும்படி இரேனியஸ் கேட்டார். அவன் மறுக்கவே அவனைச் சபையை விட்டு நீக்கினார். மேல் நடவடிக்கை எடுத்தார்.
1832 ஆம் ஆண்டு மகாகொடிதாய் இருந்தது. காலரா நோய் நெல்லை மாவட்டத்தில் பல உயிர்களைக் கொள்ளை கொண்டது. தூத்துக்குடி, திருவில்லிப்புத்தூர், தென்காசி, சிவகாசி என்று எங்கும் பரவி கிராமங்களிலும் கோர தாண்டவமாடியது. இரேனியசும், ஷாப்டரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அயராது உதவி செய்தனர். காலரா பற்றிய அவரின் துண்டுப்பிரசுரங்கள் நல்ல பலன் தந்தன. அறியாமையால் காலராவில் மடிந்த மக்களை எண்ணி இரேனியஸ் துயருற்றார்.
1832 இல் பூமி சாஸ்திரம் என்ற அறிவியல் நூலை (750 பக்கங்களுக்கும் அதிகம்) எழுதினார். தொழிற்புரட்சியின் விளைவாகப் பிறந்த புதிய அறிவொளியினை அந்நூலில் அவர் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தார். உலகம் மாயை என்ற தத்துவத்தை மறுதலித்தார். விக்கிரக வழிபாட்டை எதிர்த்தார். மனிதன் அறிவில் தேறவும், இனிதாக வாழவும் கற்றுக் கொடுத்தார்.
“திருச்சபை” என்னும் பொருள் பற்றி எழுதிய ஒரு புத்தகத்தை இரேனியஸ் திறனாய்வு செய்து மேல் கமிற்றிக்கு அனுப்பி இருந்தார். அது லண்டன் தலைமைத்தலத்தில் பெரும் புயலைக்கிளப்பியது. கள்ளிக்குளம் என்ற ஊரில் உள்ள சபையார் தங்கள் வீட்டுப் பெண்களை ஆலய ஆராதனைக்கு அனுப்ப மறுத்தனர். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமம் என்ற உணர்வை ஏற்படுத்த இரேனியஸ்பெரும்பாடுபட்டார். புதிய குடியேற்றங்களான அன்பின் நகரம், ஆரோக்கியபுரம், விசுவாசபுரம், கடாட்சபுரம், அனுக்கிரகபுரம் ஆகிய இரேனியஸ் உருவாக்கிய நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் கல்வியறிவில் உயர்ந்து மிகச் சிறப்புடன் விளங்கின. ஊர்களின் பெயர்களைப் பண்புப்பெயர்களால் அமைத்தது இரேனியஸின் உயர் பண்பை பளிச்செனக் காட்டுகின்றது.
இரேனியஸ் தாம் நிறுவிய சபைகள், தம் சொந்தக் காலில் நிற்க விரும்பினார். “சமய சகாயநிதி” என்றொரு நிதிநிலையை ஏற்படுத்தி சபைகளை உறுதிப்படுத்தினார். “கைம்பெண்கள் சங்கம்” என்று அவர் ஏற்படுத்திய ஒரு நிதி ஆதாரம், பாதிக்கப்பட்ட விதவைகளைப் பராமரித்தது.
தர்மசகாய சங்கத்தின் உதவி கொண்டு ரேனியஸ் 1834, 35 களில் மாணிக்கபுரம், இரட்சண்ய புரம், சௌக்கியபுரம் முதலிய புதுக்குடியேற்ற கிராமங்களை நிறுவினார். அவர்களுக்கு சமூகக் கொடுமைகளில் இருந்து விடிவு கிடைத்தது. சௌக்கியபுரம் மக்கள் மூன்று ரூபாய் செலவில் தங்களுக்கென ஒரு அழகான சிற்றாலயத்தைக் கட்டி முடித்தனர். இரேனியசின் குடும்பம் – இரேனியஸ் ஐயரின் பிள்ளைகள் பற்றிய தெளிவான குறிப்புகள் இல்லை. இரேனியஸிற்கு யோசியா, சார்லஸ், பிரதெரிக்லுத்தர், தீமோத்தேயு, லூயி என்ற 5 ஆண்களும், கேத்தரின், தியோடோஷியா, லிதியா, சாரா, எமிலி என்ற 5 பெண்களும் பிறந்தார்கள். தியோடோஷியாவும், லூயியும் சிறு வயதில் இறந்து போனார்கள். யோசியா, சார்லஸ், லுத்தர் மூவரும் ஸ்காட்லாந்தில் கல்வி கற்று வந்தனர். மூத்தவளான 18வயது கேத்தரினுக்கும் 25 வயதான முல்லர் ஐயருக்கும் 1834 ஆம் ஆண்டு துவக்கத்தில் பாளையங்கோட்டையில் திருமணம் நடைபெற்றது மூத்தமகன் சார்லஸ் இங்கிலாந்தில் கல்வியை முடித்து 1845ல்லண்டன் நகல் அத்தியட்ச பேராயர் இடத்தில் உதவிக்குருவாக அருட்பொழிவு பெற சிஎம்எஸ்மிஷனெரியாக 1847 முதல் 1850 வரை திருநெல்வேலிச் சீமைய சுவிசேஷபுரத்திலும், டோனாவூரிலும் சமயத் தொண்டு ஆற்றினார்.
இரேனியஸ் ஒரு நல்ல தந்தை, தம் பிள்ளைகளைப் பொது நேசித்தார். தம் துணைவியாரிடம் மிகவும் பிரியமாக இருந்த நெல்லையைச் சுற்றி ஊழியம் செய்யும்போது தம் துணைவியா அழைத்துச் செல்வதில்லை. தூர இடங்கள் செல்லும்போது மடம் கூட்டிச்செல்வார்.
இரேனியசின் துணைவியார் ஓர் உத்தம மனைவி, கணவல் கருத்துடன் கவனித்து வந்தார். ஊழியப் பாதைக்கு உறுதுணைய இருந்தார். பெண் கல்விக்குப் பெரிதும் தொண்டாற்றியவர் – வேலைக்காரர்களுக்கும், மாணவ-மாணவியர்க்கும் அவர் ஓர் அறை தாயாகவிளங்கினார்.
பிரிவும், பிளவும்
லுத்தரன் திருச்சபை-சிஎம் எஸ். திருச்சபை என்ற கொள்கை முரண்பாடு அதிகமானது. 1835 மே 18 ஆம் நாள் இரேனியஸ் அடிகளாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் இரேனியஸ் எழுதிய ஒரு சிறு நூல் மதிப்பீட்டின் மூலம் தாய்ச் சங்கத்தார் அவருடன் உள்ள தொடர்பை முறித்துக் கொள்வதாகவும், அவருக்குப் பதிலாக டக்கர் ஐயர் திருநெல்வேலித் திருச்சபைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள விரைந்து வருகிறார் என்றும் செய்தி இருந்தது.
இரேனியஸ் கண் கலங்கினார். மக்கள் கூடிக் குமுறினர். இரேனியஸ் சபையைப் பிரிக்க விரும்பவில்லை. தாம் கட்டிக்காத்த சபைகளையும், நிறுவனங்களையும் கண்ணீரால் காத்தார். அப்படியே ஒப்புவித்தார்.
1835 ஜூன் 19 ஆம் தேதி புறப்பட்டு ஜுன் 29 ஆம் தேதி சென்னைத் துறைமுகம் சேர்ந்தார். ஆற்காடு நகரைத் தலைமைத் தலமாக்கினார். “ஜெர்மன் இவாஞ்சலிக்கல் மிஷன்” என்ற புதிய அமைப்புடன் ஊழியத்தை ஆரம்பித்தார், அவருடன் சென்ற 15 ஊழியர்களும் உற்சாகமாகச் செயல்பட்டனர். கிராமம் கிராமமாகச் சென்று, சமய, சமுதாயப் பணிகளை ஆரம்பித்தனர். ஆனாலும் இரேனியஸ் ஐயரால் நெல்லையை மறக்கமுடியவில்லை. நெல்லையிலுள்ள உபதேசிமார் பலர் அவருக்கு உற்சாகமூட்டி திரும்பவும் நெல்லைக்குக் கட்டாயம் வந்துவிடும்படி எழுதினர்.
நெல்லை மீதிருந்த பாசத்தால் இரேனியஸ் மீண்டும் செப்டம்பர் 25 ஆம் நாள் புறப்பட்டு திருச்சியில் 10 நாட்கள் தங்கிவிட்டு அக்டோபர் 22 ஆம் நாள் பாளையங்கோட்டை வந்து சேர்ந்தார். ஊழியர்கள் உற்சாகம் கொண்டனர். ஆனால் அதிகாரப்பூர்வமான வரவேற்பு இல்லை. சிலர் அவர் மீண்டும் வந்ததை விரும்பவில்லை. எனவே பாளையங்கோட்டையை விடுத்து நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் ஒருவீட்டைவாடகைக்கு எடுத்து பணியைத் தொடர்ந்தார்கள். ஆற்றுக்கு மேற்பக்கம் உள்ள சபைகள் இரேனியஸ் பக்கம் திரும்பின. பிரிவினை அதிகரித்தது; குழப்பநிலை உருவானது; சமாதான முயற்சிகள் தோல்வியுற்றன.
மீண்டும் தொண்டு தீவிரமடைந்தது. சபை, பள்ளி, கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தார். “திருநெல்வேலியின் காரியம் தெய்வத்தின் காரியம்” என்று தம் நாட்குறிப்பில் எழுதினார். இறுதி மூச்சுவரை 1837 புத்தாண்டு. உபதேசிமார்களைக் கூட்டி மூன்று சங்கங்களை நிறுவினார்.
ஜெர்மானிய நற்செய்திச் சங்கம்
வேதாகம துண்டுத்தாள் பிரசுர சங்கம்
சமாதான சங்கம் ஆகியவையே அவை.
புதிய சபைகள் தோன்றின.
புதிய எழுச்சி ஏற்பட்டது. 1837 மே மாதம் “தெய்வீகசாராம்சம்” என்ற ஒரு நூலை எழுதினார். விவிலியப்பகுதியான ஏசாயா என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
1837 ஜுலை மாதத்தில் அவரது குழந்தை அனிடாரதி மரணமுற்றம் 47 வயது இரேனியஸை இம்மரணம் அதிகமாக உலுக்கியது.
இரண்டு இரண்டு பேராய் கிராமங்களுக்குச் சென்று ஒருவர் துண பிரதிகளை விநியோகிக்க, மற்றவர் படித்துக் காட்டி விளக்கம் சொல் இவ்வாறு செய்யும் “யாத்திரிகர் சங்கம்” நன்கு செயல்பட்டம் கிராமங்களில் வாசகர் வட்டம் வளர்ந்தது.
பேர்ப்பிலான் குளம் பகுதியில் மேற்குப் புதூர் என்னும் இடத்தில் புதுச்சபையை அவர் நிறுவி விட்டு நெல்லைக்குத் திரும்பினார்.அது அவரது கடைசி சபை. இரேனியஸிற்கு இரத்தாசயத்தில் – உண்டாயிற்று. இரேனியஸின் நாட்குறிப்பு 1838 மே 9 ஆம் தேதி முடிகிறது. அதில் காணப்படும் கடைசி வாசகம் இப்படி உள்ளது.
“இன்று மாலை கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குபெற எனக்கு நல்ல சுகமில்லை . இன்று உஷ்ணம் அதிகம்”.
இதுவே அவரது கடைசி வரிகள். மே மாதம் 25ஆம் நாள் பணிகளை உற்சாகமாகச் செய்தார். ஸ்காட்லாந்தில் இருந்து 1 பிள்ளைகள் வந்திருந்தார்கள். அவருக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. ஜுன் 3 ஆம் நாள் இரேனியஸிற்கு இரத்த அழுத்தம் அதிக அட்டைகளைக் கொண்டு வந்து கடிக்க விட்டு அவரது அழுத்தத்தைக் குறைத்தார்கள். அதிலும் பயன் இல்லை.
1838 ஜூன் காலையில் பத்துமணிக்குக் கடிதங்கள் அனைத்த கையொப்பமிட்டார். பிற்பகல் இரண்டு மணிக்குத் தன் உணர்வ குடும்பத்தினர் கட்டிலைச் சுற்றி அமைகியோடு நின்றனர். 1838 ஜூன் மாலை 7.30 மணிக்கு இரேனியஸின் உயிர் அமைதியாகப் மதவேறுபாடின்றி பாளையங்கோட்டை நகர மக்கள் கூடினர். ப தளசிக்கோபுரத்தின் மணி துக்கமாக ஒலித்தது. “இஸ்ரவேலன் இன்று விழுந்தார்” என்று மகாசத்தமாய்க் கூறி மக்கள் அS ஏமாம் தேதி காலை அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அடை” கல்லறையில் அடக்கம் செய்தார்கள். ஷாப்டர் ஐயர் அடக்க ஆராதனை நடத்தினார்.
தெருத்தெருவாகச் சென்று நற்செய்தி அறிவித்த அவரது ஒய்வு எடுத்தன “நற்செய்தியை அறிவியாக இருக்தால் எனக்கு ஐயோ” என்பதே அவர் வாழ்வின் உயிர் மூச்சாய் இருக்க தமிழில் எழுதப்பட்ட குறிப்பு இவ்வாறு உள்ளது.
”சார்லஸ் இரேனியஸ் ஐயரவர்கள் 1790 ளூ நவம்பர் மீ) தேசத்தில் பிறந்து 1814 சூலாயி மீ4 உசென் அத்திசையிலும், விசேஷமாகத் திருநெல்வேலிகாமலும் 1838 சூன் மீதீ வரைக்கும் நல்ல சேவகத்தைப் பண்ணி நித்தியராச்சியத்துக்குட் பட்டார்”
“நீதியென்னும் கிரீடத்தை நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்தநாளிலே யெனக்கு மாத்திரமல்ல அவர் பிரசன்னமாகுதலை விரும்பின யாவருக்கும் தந்தருளுவார்” உதீமோ, ச. அ.
“சமாதானத்தைக் கூறி நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்” என்று ரோமர் 10:15 கூறுகிறது.
இரேனியஸ் அடிகளாருக்குத் தமிழ் இலக்கணம் கற்றுக்கொடுத்தத் திருப்பாற்கடல்நாதர் பாடிய இரங்கற்பாவிலிருந்து இரு அடிகளை மட்டும் தந்து முடிக்கிறேன்.
“காசினி தன்னில் ஆதித்தன்
கிரணம் போல் அறிவைப் பரப்பிய இரேனியூசு”
இணைப்பு
இரேனியஸ் ஐயர் எழுதிய சில தமிழ் நூல்களுக்கான குறிப்புகள்.

 1. வேதாகம சரித்திர வினாவிடை (1818 மே, 30) இந்நூலின் பெரும்பகுதி பழைய – புதிய ஏற்பாட்டு ஆகமங்களில் சரித்திர ரீதியான கேள்விகளும் விடைகளுமே. பத்துக் கற்பனைகள், கர்த்தருடைய ஜெபம், பரிசுத்த நற்கருணை, விசுவாசப்பிரமாணம் ஆகியன இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
 2. கிறிஸ்து மார்க்க சித்தாந்த வினாவிடை (1818) – கடவுளின் தன்மை, மனிதனின் இயல்பு, இரட்சிப்பின் திட்டம் என்னும் மூன்று சித்தாந்தங்களின் மீது வினாவிடை வடிவத்தில் எழுதப்பட்டது.
 3. வேதசரித்திரம் (1818) வாட் என்பவர் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு
 4. சுவிசேஷச் சமரசம் (1820) இந்நூல் ஏழுபாகங்களை உடையது. முதல் பாகத்தில் கிறிஸ்துநாதர் பற்றிய பழைய ஏற்பாட்டுத் தீர்க்க தரிசனங்களும், வாக்குத்தத்தங்களும் விளக்கங்களுடன் எழுதப்பட்டுள்ளன. – இறுதியாக ஏழாம் பாகத்தில் அப்போஸ்தலர் காலம் முதல் 18ஆம் நூற்றாண்டு முடிவுவரை கிறிஸ்து மார்க்க வியாபக சரித்திரமும், இரட்சகரின் இரண்டாம் வருகையும், நியாயத்தீர்ப்பின் உறுதியும் எழுதப்பட்டுள்ளன.
 5. ஞானப்போதிப்பு
  ஞானஸ்நானத்துக்குத் தம்மை ஆயத்தப்படுத்துவோர் கற்கவேண்டிய வேதாகம சித்தாந்த – கிறிஸ்தவச் சன்மார்க்க வினா விடைகள்.
 6. சீர்தூக்கல் (1831) “திருச்சபையும் அதன் பணிப்பெண்களும்” என்ற நூல்பற்த மதிப்பீடு. 7. கிறிஸ்து மார்க்க நிச்சயித்துவம் : (1834) 1852ல் மறுபதிப்பு. 319 பக்கங்கள் கொண்ட சிறந்த நூல்
 7. தெய்வீக சாராம்சம் (1838) இரேனியஸ் காலமாவதற்குச் சில நாட்களுக்கு முன்பு இந்து எழுதப்பட்டது. 39 பக்கங்கள் உள்ள இந்நூல் 1842 இல் மறுபதிப்பான
 8. வேதாகமத் துணைநூல் பிக்கர்ஸ்டெத் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் மொழிபெயர்
 9. 1. எபிரேய இலக்கணம் (தமிழில்)
 10. பூகோள சாஸ்திரம் (தமிழில்)
 11. தமிழ் இலக்கணம் (தமிழில்)
 12. சிற்றறிஞர் குறிப்பிடம் (தமிழில்)
 13. சரித்திரம் (தமிழில்)
 14. தர்க்க ம் (logic)(தமிழில்)
 15. தமிழ் இலக்கணம் (ஆங்கிலத்தில்)
 16. வேதாகம் முடிவுரை (தமிழில்)
 17. புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு (தமிழில்)
 18. பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு (தமிழில்)
 19. ஞான யோசனை விளக்கம் (தமிழில்)
 20. தெலுங்கு இலக்கணம், பிரஞ்சு இலக்கணம் என்று 12 நூல்கள் – இவை தவிர நூற்றுக்கணக்கான தமிழ்த் துண்டு பிரசுரங்கள்
This entry was posted on November 5, 2021, in Uncategorized. Leave a comment

அண்ணாத்தே திரைப்படமும் விவசாயிகள் போராட்டமும்


தில்லியில் இருந்து வரும் தகவல்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது…

கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது…

நான் எப்போதும் சொல்லி வருகிறேன் பிரதமர் மோடியோ, அமித்சாவோ சிறந்த அரசியல் வாதிகள் அல்ல… வெறும் ஊடக பிம்பங்களே என்று…

பிரதமர் மோடியாலோ, அமித்சாவாலோ மக்களிடம் செல்வாக்கு செலுத்த இயலாத நிலையில், காவல் துறையினரின் கைத்தடிகள் மூலம் மக்களை அடக்கி விடலாம் என கார்ப்பரேட்டுகள் நினைப்பது வெறும் பகல் கனவே…

காவல் துறையினரின் கைத்தடிகள் மூலம் இந்தியர்களை அடக்கி விடலாம் என்றால் வெள்ளையன் அதைச் செய்திருப்பானே தவிர வெளியேறி இருக்க மாட்டான்…

கைத்தடிகளின் மூலம் அடக்க முடியாத வெறியில்தான் வெள்ளையரால் 1943ல் வங்காள தேசத்தில் பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டது…

ஹிட்லர் உலகப் போரில் 60 லட்சம் பேரைக் கொலை செய்தான்…

ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் செயற்கைப் பஞ்சத்தை இந்தியாவில் 1943 ல் உருவாக்கி கிட்டத்தட்ட 70லட்சம் பேரைக் கொலை செய்தான்…

வங்காளப் பஞ்சம் ஏற்பட்டது எப்படி…

நீர்ப்பற்றாக் குறையோ, மண்வளப் பற்றாக்குறையோ, விளைச்சலில் பற்றாக்குறையோ இல்லாத சூழலில் பஞ்சம் எப்படி 1943 ல் இந்தியர்களைப் பலி கொண்டது…

மிகமிக எளிது…

விளைவிக்கப்பட்ட தானியங்கள் ஐரோப்பிய கார்ப்பரேட்டுகளால் இங்கிலாந்துக்குக் கடத்தப்பட்டன, விவசாயிகள் கொல்லப்பட்டனர், விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டன…

சர்ச்சில் என்ற கொடூரனால் செயற்கைப் பஞ்சம் மூலம் மக்கள் கொல்லப்பட்டனர்… விளைநிலங்கள் பிடுங்கப்பட்டன…

ஆக… விளை பொருட்களையும், விளை நிலங்களையும் பறி கொடுத்தால் பஞ்சத்தில் மக்கள் மடிவார்கள் என்பதுதான் வரலாறு கூறும் உண்மை… அன்றைய வைஸ்ராய் வெவல், சர்ச்சிலிடம் கூறிய கருத்தும் அதுதான்…

இந்திய மக்களை பஞ்சம் என்ற பெயரில் சர்ச்சில் படுகொலை செய்வதைக் கண்டு பொங்கி எழுந்த இங்கிலாந்து மக்கள் சர்ச்சிலைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்து அட்லியைப் பதவியில் அமர்த்தினர்…

வரலாறு மீண்டும் திரும்புகிறது…

புதிய வேளாண் சட்டத்தின் மூலம் நிலங்கள் விவசாயிகள் கைகளை விட்டுப் போகப் போவதை உணர்ந்துதான்…

செயற்கைப் பஞ்சத்திலிருந்து மக்களையும், விளைநிலங்களையும் காப்பாற்றவே இன்று இந்திய விவசாயிகள் சாதி மத வேறுபாடின்றி டெல்லியை அரணாகச் சூழ்ந்து நிற்கின்றனர்…

தனது சுயத்தை இழந்து விட்ட பிரதமர் மோடியாலும், அமித்சாவாலும் எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு மக்கள் மட்டுமல்ல, கார்ப்பரேட்டுகளும் வந்து விட்டார்கள் …

ஆக, விவசாயிகளின் மாபெரும் இந்தப் போராட்டம் இந்திய அரசியல் வரலாற்றையே மாற்றி எழுத ஆரம்பித்து விட்டது,பெரும் மகிழ்ச்சி …

இனி எதிர்பாராத பல நன்மைகள் இந்திய மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது, இதைப் புரிந்தவன் பிஸ்தா …😍

பின்குறிப்பு – இத்தகைய மாபெரும் வரலாற்று நிகழ்வினை தமிழக மக்கள் கூர்ந்து நோக்கா வண்ணம் :அண்ணாத்தே’யை கௌரவிக்கும்படி செய்து, ஊடகங்கள் மூலமாகவும் ஒரு நாடகம் நடத்தப்பட்டது.

வல்லாதிக்க அரசுக்கு எதிராக…
96,000 ட்ராக்ட்டர்கள்
22,000 லாரிகள்
6 மாதத்திற்கான உணவு பொருட்கள்
குளிரை தாங்கும் போர்வைகள்
செல்ஃபோன் சார்ஜர்கள் உள்ளிட்ட
அனைத்து விதமான பொருட்களுடன்

தலைநகர் #டில்லியில்
1 கோடியே 40 லட்சம் விவசாயிகள் களத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள்..!!

உலகிலேயே மக்கள் அதிகமாக கூடி
முன்னெடுத்த போராட்டம் இதுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிரதமர் மோடியின் அடிவருடி ஊடகங்கள்
இந்த வரலாற்று செய்தியை மூடி மறைக்க முயல்கின்றன.

எனதருமை உறவுகளே….
உங்கள் கைகளில் தவழும் ஒவ்வொரு கைபேசியும் ஒரு ஊடகம்தான்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க முற்றுகை செய்தியை உலகம் முழுக்க கொண்டு செல்வதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்புண்டு..!!

பாசிச அடக்குமுறை ஆட்சி வீழட்டும்..!!
மக்கள் புரட்சி வெல்லட்டும்..!!

பகிருங்கள்…

I Support
My Farmers
Because
I Need
3 Times Food..!

தயவு செய்து அனைவருக்கும் பகிரவும்.. Please 🙏

This entry was posted on November 5, 2021, in Uncategorized. Leave a comment