நேத்து ராத்திரி யம்மா..!

நேற்றிரவு (09:10:2010) தூக்கம் பறிபோனது, துக்கம் வரவானது; காரணம் எங்கள் ஊரிலுள்ள பெருமாளுக்கு ஏதோ விசேஷமாம்; கடந்த மூன்று நாளாக அரற்றிக் கொண்டிருந்தார்கள்; நமக்கு அதில் ஆர்வமில்லாவிட்டாலும் கட்டாயப்படுத்துவது போல அதிகாலையிலிருந்து இரவு பத்து மணிக்கும் மேலாக ஊரை ஒலியினால் மாசுபடுத்தினர்;

எல்லாம் போக நேற்று ஒரு ஊர் பயணம் முடித்து திரும்பி சோர்வுடன் படுக்கைக்குச் செல்லவே இரவு 11:30 ஆனது; ஒலிபெருக்கி சத்தத்திலிருந்து தப்பிக்க கதவையும் சன்னல்களையும் அடைத்துவிட்டு காற்றுக்கு வழியில்லாமல் துன்பத்துடன் தூங்க முயற்சித்தபோது சில மணித் துளிகளில் “டமடம” வென அடித்துக் கொண்டும் பஜன் பாடிக் கொண்டும் சாமி ஊர்வலம் வந்தது;

போதாக்குறைக்கு பட்டாசு வெடி… அந்த மிகப் பெரிய சைஸ் பேண்டு (Big Band)கள் மூன்றும் பள்ளிகளில் ‘மார்ச் ஃபாஸ்டு’ க்கு அடிப்பது, அத்துடன் சாவுக்கு அடிக்கும் மேள வாத்தியமும் சேர நெஞ்சை படபடக்கச் செய்யும் இரைச்சலுடனும் பிணத்துக்கு முன்பாக ஆடும் அருவருப்பான கூத்து நடனத்துடனும் சாமி ஊர்வலம் வந்தது;

கூத்து நடனம் ஆடிய இளைஞர்களும் மற்றவரும் நல்ல போதையில் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது; இந்த ஊர்வலம் வருவதற்காகவே சில தினங்கட்கு முன்பு எங்கள் வீட்டு வாசலிலிருந்த நல்ல நிழல்தரும் மரத்தை வெட்டி வீழ்த்தியிருந்தனர்; இது அவர்கள் தேசமல்லவா, யாரையும் எதுவும் கேட்க முடியாது;நாங்களோ வாடகைக்கு குடித்தனம் இருப்பவர்கள்; ஏதாவது நியாயம் கேட்டாலும் வீட்டை காலி செய்யவைப்பர்; வேறு வீடும் தரமாட்டார்கள்;

ஒரு மாட்டு வண்டியில் சாமியை அலங்கரித்து வைத்து அதற்கு மின்வசதி தரும் மின்கலத்தையும் வண்டியுடன் இணைத்து மாட்டுக்கு பதிலாக மனிதர்கள் இழுத்துவந்தனர்; வண்டியிலோ ஒரு பூஜாரி ராஜா போல அமர்ந்துகொண்டு கொஞ்சமும் உணர்ச்சியற்ற நிலையில் இயந்திர கதியில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்;

பக்தர்கள் கொடுத்த பூஜை தட்டை சில நொடிகள் அந்த விக்கிரஹத்திடம் ஒரு காட்டு காட்டிவிட்டு பக்தர்களிடம் கொடுக்க, அவர்களும் இயந்திரத்தைப் போல பெற்றுக் கொண்டு திரும்பினர்;

ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கக்கூடிய மின்சாரம் மற்றும் கேபிள் தொலைபேசி சர்வீஸ் கம்பிகளில் உரசி, உயர்ந்ததும் மட்டமானதுமான அந்த காகித அட்டை அலங்காரம் கவிழ்ந்து சாமி தடுமாறி விழுந்துவிடுமோ ‘ வென இளைஞர்கள் அதற்கென ஒரு கம்பை தயாரித்து அதன்மூலம் சர்வீஸ் கம்பிகளை உயர்த்திபிடித்து சாமியின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர்;

சாமியின் அழகோ கண்கொள்ளா காட்சி…
‘ஒருவனுக்கு ஒருத்தி ‘ என குடும்பஸ்தர்கள் வாழும் தெருக்களில் நுழைந்த சாமியோ சைடுக்கு ஒன்றாக ரெண்டு குட்டிகளுடன் வந்தார்; போனவாரம் வந்து போன மிஸ்டர் கணபதி சிங்கிளாகத் தான் வந்தார்;

சாமி குட்டிகளை மட்டும் கட்டிக்கொள்ள நம்ம பக்தர்கள் அவருடைய பெண்சாதிகளுடன் அவரையும் சேர்த்து கட்டியிருந்தனர்; விழுந்துருவாரோ என்ற நல்ல எண்ணமோ அல்லது தனது ஜோடிகளுடன் ஓடிவிடுவாரோ என்ற கெட்ட எண்ணமோ தெரியவில்லை;

என்னைப் பொருத்தவரை அவர் மிஸ்டர் கிருஷ்ணனாக இருக்கவேண்டும்; ஆனால் அவரைக் குறித்து பெருமாள் என புகழ்ந்தனர்; ‘ லாஜிக் ‘ புரியவில்லை;

பெருமாளைப் பொறுத்தவரையில் அலமேலு அம்மாவுடன் இருப்பார்; அதுவும் ஏதோ கொடுக்கல் வாங்கல் தகராறில் கோவித்துக் கொண்டு திருப்பதி மேலேறி தவமிருப்பதாகவும் அவருடைய கடன் தீர்ந்தபிறகே வந்து குடித்தனம் பண்ணுவார் என்றும் ஐதீகமாம்; நம்முடைய ஏழை எளிய மக்களும் தங்கள் முடி உட்பட அனைத்தையும் ஆண்டாண்டு காலமாக தானமாக வழங்கியும் இன்னும் அவருக்கு திருப்தியாகவில்லை;

எல்லா சாமியும் ஆசீர்வதிக்கும் பாவனையில் போதும் என்பது போல வலக்கரத்தைக் காட்ட இவரோ இன்னும் வேண்டும் என்பது போல வலக்கரத்தையும் இடக்கரத்தை அள்ளி முடித்துக் கொண்டது போலவும் வைத்திருப்பார்;

அப்படியானால் எங்கள் தெருவுக்கு வந்தது பெருமாள் அல்ல; இத்தனை கலாட்டாக்கள் நடந்தும் சாமியோ சாமியாரோ மக்களுடைய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் சொல்லவில்லை; அவர் அருள் தருவதாகச் சொல்லுவதும் பக்தர்கள் வேண்டியது நடக்கும் என்று காத்திருப்பதும் சுயநலம் சார்ந்த பக்தியாகவே தோன்றுகிறது; ஏனெனில் ஒரு தெருவுக்கு சாமி வந்து போவதாலோ சாமியைத் தேடி பக்தன் சென்று வருவதாலோ ஒரு தனிப்பட்ட மனிதனுடைய வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டது போலத் தெரியவில்லை;

கோயிலில் விழாக்கோலம் ஒருபுறம், பக்தன் அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு மல்லாந்து கிடக்கும் அலங்கோலம் மறுபுறம்; அவன் பெண்டு பிள்ளைகள் அங்கே சாமியை விழுந்து வணங்கிக்கொண்டிருக்க இங்கே இவன் சாக்கடையில் விழுந்து எதையோ தேடிக்கொண்டிருக்கிறான்;

அந்த காலத்தில் கோயிலில் பரத்தையர் நடனமாடுவர்; இதனை பரதநாட்டியம் என்றும் கூறுவர்; இந்த நடனத்தால் வசீகரிக்கப்ப‌டும் ரிஷிகளும் மன்னர் பெருமக்களும் அன்றிரவு அவர்களோடு தங்களைப் பகிர்ந்துகொள்வர்;

இன்றோ ஒரு பாவமுமறியாத சிறுமிகளையும் வயதுக்கு வந்த இளங்குமரிகளையும் அதே கோவில் வாசலில் ஆடவிட்டு அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்;

வீட்டுக்கு ஒன்றாக ஆணாகவோ பெண்ணாகவோ பெற்று நம்முடைய எதிர்காலத்தில் நமக்குத் துணையாக பிள்ளைகளை வளர்த்து இதுபோன்ற காமாந்தகர்களுக்கு அவர்களை பலியாக்கும் ஆபத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது;

ஏனெனில் அங்கே இருக்கும் சாமிகளின் கதைகளும் புராணங்களும் வீரபராக்கிரமங்களும் அத்தனை பயங்கரமானது; இந்த காலத்தில் அவர்கள் இறங்கி வந்து நம்முடைய பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு போகாவிட்டாலும் அவர்களுடைய ஆவியை இளைஞர்கள் மனதில் புகுத்தி அவர்கள் மூலம் பெண் பிள்ளைகளைக் கெடுத்துவிடுகிறார்கள்; இன்னும் அடுத்தவன் மனைவியையும்கூட இந்த சாமிகள் விட்டு வைப்பதில்லையே;ஆனானப்பட்ட விஷ்ணு பகவான் உட்பட தனது பக்தர்களை ருசிபார்ப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்;

இதையெல்லாம் யோசித்து யோசித்து நேற்றிரவு தூக்கம் பறிபோனது; சாமி அங்கே வேஷத்தைக் கலைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்க பக்தர்களோ வழக்கம்போல தங்கள் அன்றாட பாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்; பொழுதுபோக்குக்கு எந்திரன் முதலான திரைப்படங்களும் தொலைக்காட்சி சீரியல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சமத்துவ சமதர்ம சமுதாய மறுமலர்ச்சிக்கான அற்புதமான தளமாக டாஸ்மாக் கடைகளும் இருக்கவே இருக்கிறது.

வாழும் பாரதம்… வளரும் தமிழகம்…!?

10 thoughts on “நேத்து ராத்திரி யம்மா..!

  1. சரியா சொன்னீங்க ..இவனுங்களை ஏன் noise polution ன்னு பிடிக்கமாட்டேங்கிறாங்க … இங்க வெடி வெடியா போடுவானுங்க …

  2. Comment on http://thiruchchikkaaran.wordpress.com/2010/10/07/rama-rama-jeya-raaja-ram/#comment-2282

    நண்பர்களே, எனது வரிகளில் ஒன்றுகூட-ஒரு எழுத்துகூட மிகைப்படுத்தப்படவில்லை; ஏனெனில் இதனை எனது டைரி பகுதியில் எழுதியிருக்கிறேன்; எனது டைரியில் பொய்களை எழுதும் வழக்கம் எனக்கு சிறுவயது முதலே கிடையாது; எனவே எனதருமை நண்பர் சதீஷ் அவர்கள் ஐயம் கொள்ளவேண்டாம்;

    அடுத்த முறை சிரமப்பட்டாவது- துணிச்சலுடன் இந்த காட்சிகளை படமாக்கி வந்து சமர்ப்பிக்கிறேன்; மெய்யாகவே அந்த ஆர்ப்பாட்டங்களைப் படமெடுக்க எனக்கு தைரியமில்லை; காரணம் அத்தனை வெறியுடன் ஆடிக்கொண்டு வந்தார்கள்; இதற்கு நிரூபணம் தேடவேண்டிய அவசியமே இல்லை; இங்கு வரும் நண்பர்கள் அவரவர் பகுதியில் நடைபெற்ற விழாக்களிலிருந்து நான் எழுதியதிலுள்ள உண்மைகளை அறிவார்கள்;

    நான் கிறித்தவ மார்க்கத்தைச் சார்ந்தவனாக இருப்பினும் எனது மூதாதையர்கள் வழியாக அறிந்த வண்ணமாக அமைதியான முறையில் இறைவனைத் தொழுவதையே விரும்புகிறேன்;

    மற்றவர்களுக்கு சொல்லித்தருமளவுக்கு எனக்கு பெலனில்லை; ஆனால் எனது ஆதங்கத்தைச் சொல்லும் உரிமையுண்டல்லவா?

    இந்த ஆர்ப்பாட்டங்களையும் பஜன்களையும் கிறித்தவர்கள் யாரிடமிருந்து கற்றார்கள் என்று நினைக்கிறீர்கள்,சந்தேகமில்லாமல் இந்துக்களிடமிருந்துதான்;

    ஏனெனில் யூதத்திலோ,இஸ்லாமிலோ, ஏன் ஆதி கிறித்தவத்திலோ (or) இன்றைய சமகால கிறித்தவ வழிபாட்டுத் தலங்களிலோ இந்த வழக்கமில்லை என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்;

    இந்தியாவின் பெரும்பான்மையினரான இந்து பெருமக்கள் தங்கள் அடிப்படையற்றதும் அப்பிரயோஜனதுமான வழிபாடுகளைவிட்டு மெய்ப்பொருளையடைந்து முக்திவழியினையடைய வேண்டுமென்பதே எனதுள்ளத்தின் அவா.

    இறுதியாக நண்பர் தனபால் அவர்களுக்கு நான் பதிலளிக்காததைக் குறித்து எனக்குப் புரியவில்லை; எனது தளத்தில் நண்பர் தனபால் அவர்கள் எப்போது எந்த பின்னூட்டமிட்டார் என்பதும் தெரியவில்லை; குறிப்பாகச் சொன்னால் பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.

    Thanks a lot n God bless you.

  3. // மத வெறி தெரிகிறது //
    எனது வேதனை உங்களுக்கு மதவெறியாகத் தெரிகிறதோ..?

    // இயேசு கிறிஸ்துவின் பெயரால் பல மார்க்கங்களை உருவாக்கிய மேலை நாட்டினர் //

    இது கொஞ்சமும் நாகரீகமானதாகத் தெரியவில்லை;
    எனது எழுத்துக்களில் மததுவேஷமோ மதப் பிரச்சாரமோ துளியும் இடம் பெறவில்லை;

    எனது ஆதங்கத்தையும் வேதனையையுமே சிந்தனைக்காக முன்வைத்துள்ளேன்;

    இதை எழுத நான் யாராக இருக்கவேண்டும் என்று புரியவில்லை; சாமான்ய மனிதனாக நின்று பகுத்தறிவுடன் யோசித்ததன் விளைவே இந்த கட்டுரை; இது கட்டுரையுமல்ல, எனது சொந்த அனுபவம்;

    இதில் அகத்தூய்மையுடன் சிரத்தையுடன் சாமி கும்பிட வேண்டும் என்கிறேன்; மற்றவருக்கு நள்ளிரவில் தொல்லை தராமல் நாகரீகமாக இருக்க வேண்டுகிறேன்;

    ஒலிபெருக்கி சத்தமும் அது பயன்படுத்தப்படும் நேரமும் அதற்கு உபயோகிக்கும் மின்சாரமும் உட்பட அனைத்தும் சட்டவிரோதமான‌ மோசடியே;

    மக்கள் அள்ளித்தரும் காணிக்கையை வைத்து விழா கொண்டாடாமல் மிரட்டி வசூலித்தும் வட்டி பணத்திலும் சாராய பணத்திலும் கட்ட பஞ்சாயத்து பணத்திலும் போலியானதொரு மாயைதனை பக்தி என்ற பெயரில் பரப்பும் இந்த சமுதாயம் உருப்பட வாய்ப்பே இல்லை..!
    comment on:
    http://thiruchchikkaaran.wordpress.com/2010/10/07/rama-rama-jeya-raaja-ram/#comment-2290

  4. ///எப்போது எந்த பின்னூட்டமிட்டார் என்பதும் தெரியவில்லை; குறிப்பாகச் சொன்னால் பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.///

    // அது உங்களின் சில்ல்சம் .blogspot முகவரியில்.தமிழ் ஹிந்துவின் முதல் பாவம் பற்றிய கட்டுரைக்கான பின்னூட்டம்.
    http://chillsams.blogspot.com/2010/09/yauwana-janam_1870.html

    இந்த கட்டுரையைப் பொருத்தவரையில் போகிற போக்கில் எதையாவது சொல்லுவது சரியாக இருக்காது என்ற காரணத்தால் வரிக்கு வரி நிதானித்து நேர்த்தியானதொரு கட்டுரையினை வரைய முயற்சித்தேன்;அதற்கேற்ற சமயம் வாய்க்காத ஒரே காரணத்தால் உடனடியாக எந்தவொரு பின்னூட்டமும் இடவில்லை;

    மற்ற தளங்களைப் போல திசைமாறிச் சென்று தலைப்புக்குப் பொருந்தாத எதையாவது பிதற்ற எனக்கு விருப்பமில்லை; மற்றபடி இங்கு வந்து தமது கருத்தை முன்வைத்துள்ள தனபால் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்;

    வேதத்திலும்கூட பதிலளிக்கப்படாத அநேக கேள்விகள் உண்டு;ஒவ்வொரு கேள்விக்கும் பதிலே பதிலாக இருக்கவேண்டிய அவசியமில்லை;

    கேள்வியும்கூட பதிலைப் போல செயல்பட்டு அநேகருக்கு பதிலாகும்; நமது கருத்துக்களால் நாம் மேற்கொள்ளாவிட்டாலும் அன்பினால் ஜகத்தை வெல்வோம்..!

    http://chillsams.blogspot.com/2010/09/yauwana-janam_1870.html

  5. குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேக்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள் போன்ற அபத்தங்களை கிருத்தவமும் செயவதின்றி இதே தொனியிலான மேடைபேச்சுகளும் சத்தம் சுகாதாரக்கேட்டையும் அனுபவித்த அனுபவமும் உள்ளது.

    மற்றும் தற்பொழுது நான் வாழும் நாடு கிருத்தவ மெஜாரிட்டி உள்ள நாடு, இங்கு இவர்களின் கொட்டம் கொஞ்சமும் இந்திய இந்துக்களுக்கு சளைக்காமல் இருப்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

    அதாவது மெஜாரிட்டிகளின் தொல்லை தாங்கத்தான் முடிவதில்லை.

  6. தளத்தைப் பார்வையிட்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்துள்ள நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்; குறிப்பாக புதிய நண்பர் விஜய் அவர்களுடைய வரவு நல்வரவாகுக‌.

    விஜய் அவர்களே, நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ ஆனால் எந்த நாட்டிலும் இதுபோன்ற காட்டுமிராண்டி வழிபாட்டு முறைகள் இருக்குமோ தெரியவில்லை;

    ஒருபுறம் சன்டிவி, விஜய் டிவி போன்ற ஊடகங்கள் இந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கொண்டு தானிருக்கிறது; இன்னும் பெரியார் வழிவந்தோரும் கம்யூனிசவாதிகளும் கருத்துப்பிரச்சாரம் மூலம் இந்த ஜனத்தோடு போராடிக்கொண்டிருக்கின்றனர்;

    இவர்களிடமிருந்து வெளியேறி வந்தோர் கிறித்தவம் மற்றும் இஸ்லாமை கெடுத்துக்கொண்டிருக்கின்றனர்; குறிப்பாக கிறித்தவத்தில் இதுபோன்ற எந்தவொரு ஆர்ப்பாட்டத்துக்கும் வழியே இல்லை; அதில் மீண்டும் மீண்டும் உபதேசிக்கப்பட்டது அர்ப்பணமே;

    தாங்கள் குறிப்பிட்ட குருடர், செவிடர், முடவர் சம்பந்த வசனமும் அப்படியே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுதான்; வேதத்தில் எங்குமே ஒரு அற்புதத்தை நிகழ்த்திக்காட்டி தமது சக்தியை நிரூபிக்க இயேசுவானவர் முயற்சிக்கவில்லை;

    தற்காலத்திலோ தலைவர்கள் பலருக்கும் உள்ள வியாதியானது தமது புகழை தக்கவைத்துக்கொள்ளும் பதட்டம்; இதன் காரணமாகவே பல்வேறு போலியான விளம்பர யுக்திகளைப் பயன்படுத்துகின்றனர்;

    நீங்கள் மெத்த படித்தவராக இருப்பின் இந்த மலிவான முயற்சிகளைப் பகுத்தறிந்து வேதத்தையும் கிறித்துவின் உபதேச வாக்கியங்களை மட்டும் ஆராய்ந்து பாருங்கள்; கிறித்து ஒரு மதத் தலைவரல்ல என்ற முடிவுக்கு வருவீர்கள்; அவரோ அவரது சீடர்களோ தமது புகழ்ச்சிக்காகவோ தமது புகழைத் தக்கவைத்துக் கொள்ளவோ எதுவும் செய்யவில்லை;

    இதனடிப்படையிலேயே நான் கிறித்துவின் நண்பனானேன்; உயிருடனிருப்பவருக்கு தானே நண்பனாகத் தொடர‌முடியும்..?

  7. அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள்; வருகைக்கும் கருத்தைப் பதிந்தத‌ற்கும் நன்றிகள்; தங்கள் உணர்வை மதிக்கிறேன்; ஆனாலும் எனக்கென்று ஒரு பாணியையும் தெளிவான நோக்கத்தையும் வைத்துள்ளேன்; நான் சொல்ல வந்த செய்தி சென்று சேரவேண்டிய இடத்தைச் சென்று சேர‌வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் எனக்கில்லை;

    தாங்கள் தலைப்பை (Title) மாற்ற சொல்லுகிறீரா செய்தி (Topic) யையே மாற்றச் சொல்லுகிறீரா என்று தெரியவில்லை;

    தாங்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவிரும்பினாலோ என்னைக் குறித்து இன்னும் அறிய விரும்பினாலோ எனது மின்னஞ்சலைக் கோரவும்… அல்லது தங்கள் மின்னஞ்சலைத் தரவும்…அது இங்கே பதிக்கப்படாது.

  8. Ayya, Ella mathathilum mudanambikaikal irukintana. Ennal Puthiya / Palaya erpatil vulla kuraikalai sutti katta mudium. Neengal sollum Noise Pollution koothu ellam kandippaga thollai tharupavai tham. Athey Pol Paratha Nattiyam patiya vungal karuthu miga thavaru. Parathaiyar enbavar veru, koyil thondatrupavar veru. There were more inscriptions stating the position and names of Kovil Pendukal. Neengal solvathu ippothu oru 200 years back nadanthathu. @ Vedam , Manu enbathu only for Bromins. Avarkalin adakku muraiyal mariponathu tamil valibadu .

  9. எனது வலைப்பூவினை நுகர்ந்து, நிதானமாக வரிவிடாமல் வாசித்து, தமது மேலான கருத்துக்களை முன்வைத்துள்ள நண்பர் எழில் அவர்களுக்கு நன்றி;

    எனது அன்புக்குரிய வாசகர்களின் வசதிக்காக அவரது தமிங்கில வரிகளை தமிழில் வரைகிறேன்…

    // ஐயா எல்லா மதத்திலும் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன;என்னால் புதிய/பழைய ஏற்பாட்டில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டமுடியும்;நீங்கள் சொல்லும் நாய்ஸ் போல்யூஷன் கூத்து எல்லாம் கண்டிப்பாக தொல்லை தருபவை தாம்;அதேபோல பரதநாட்டியம் பற்றிய உங்கள் கருத்து மிகவும் தவறு;பரத்தையர் என்பவர் வேறு,கோயில் தொண்டாற்றுபவர் வேறு;கோயில் பெண்டுக‌ளைக் குறித்த பெயர்களிலும் நிலைகளிலும் பல்வேறு குறிப்புகள் உண்டு;நீங்கள் சொல்வது இப்போது ஒரு 200 வருஷத்துக்கு முன்னால் நடந்தது;வேதத்தில் மனு என்பது பிராமணர்களுக்கு மாத்திரமே உரித்தானது;அவர்களின் அடக்கு முறையால் மாறிப்போனது வழிபாடு. //

    எழில் அவர்கள் முன்வைத்துள்ள கருத்தை இன்னும் ஆராய்ந்து மேல் விவரங்களைத் தரவேண்டியிருக்கிறது; குறிப்பாக பரதநாட்டியத்தின் வரலாறு, தேவதாசிகள் மற்றும் மனுதர்ம சாஸ்திரம் தொடர்பாக அவரிடமிருந்து ஆதாரப்பூர்வமான விவரங்களை எதிர்பார்க்கிறேன்; தொடர்ந்து பேசுவோம்..!

Leave a comment