அநியாயத்துக்கு மதம் மாத்தறாங்க‌..!

மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு – தினமலர் செய்தி.

பந்தல்குடி : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஒன்றிய துவக்க பள்ளிகளில், மாணவர்களிடம், “பைபிள்’ வழங்குவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தெற்கு, வடக்கு பள்ளிகளில் 550 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த நவ.16ல், தூத்துக்குடியிலிருந்து வந்த கிறிஸ்தவ “மிஷினரி’யினர், மாணவர்களிடம், பைபிள் புத்தகம் வழங்கினர். இதை படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்று பிரசாரம் செய்தனர். புத்தகத்தின் கடைசியில் இருக்கும் உறுதிமொழி படிவத்தில் மாணவர்களை கையெழுத்திட கூறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் கூறியவை:

சிவலிங்கம்: மூன்று ஆண்டுகளாக, மத புத்தகங்களை கட்டாய படுத்தி கொடுக்கின்றனர். மதம் மாற்ற முற்படுகின்றனர். இது குறித்து கேட்டால், “இனி தரமாட்டோம்’ என்கின்றனர்.

கருப்பசாமி: சில ஆசிரியர் களால் இந்த தவறு நடக்கிறது. தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டபோது “புத்தகங்களை எடுத்து செல்லுங்கள், பிரச்னை செய்யாதீர்கள்’ எனக்கூறினார்.

ராகவன், (தலைமை ஆசிரியர், தெற்கு பள்ளி): மதம் பற்றிய புத்தகங்களை கொடுத்தது தவறு தான். அனைவருக்கும் கல்வி இயக்க மற்றும் கற்றல் வழி புத்தகங்களை இலவசமாக தர வருவர். அது போல என நினைத்து பார்க்காமல் விட்டு விட்டேன். “பைபிள்’ என தெரிந்ததும் அவற்றை வாங்கி வைத்து விட்டேன். இனிமேல் இதுபோல நடக்காது.

நாகலட்சுமி, (தலைமை ஆசிரியை, வடக்கு பள்ளி): மத சம்பந்தமான புத்தகங்களை கொடுக்க அனுமதிக்க கூடாது என்று எனக்கு தெரியாது. பெற்றோர் கூறிய பிறகு அவற்றை வாங்கி திருப்பி கொடுத்து விட்டோம். பெற்றோரிடமும் மன்னிப்பும் கேட்டோம்.

அருப்புக்கோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன்: தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், உயரதிகாரிடம் தெரிவித்த பின் செய்யுங்கள் என்று பலமுறை கூறி வருகிறோம். மத புத்தகம் வழங்கல் பற்றி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதிகாரி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138246

அரசாங்க பள்ளியில் பைபிள் கொடுத்து மதம் மாற்றுகிறார்களாம்;அது உண்மையா?

இங்கே புகைப்படத்தில் காணும் காட்சி என்ன, மாணவர்களே போட்டி போட்டுக்கொண்டு அதனை வாங்குகின்றனர்; யாரும் வற்புறுத்தி கொடுப்பது போலத் தெரியவில்லை; மேலும் இது இலவசமாகத் தரப்படுவதால் அதினால் எந்த பாதிப்பும் இருப்பது போலவும் தெரியவில்லை.

ஆனாலும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உள்நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை தினமலர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது;தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற எதிர்ப்புகளாலேயே கிறித்தவ மார்க்கம் வளருகிறது.

ஏனெனில் ஒன்றுமறியா சிறுபிராயத்தில் மாணவர்களுடைய சிந்தனையை மழுங்கச் செய்யும் ஒன்றுக்கும் உதவாத‌ தத்துவங்களையும் சடங்குகளையும் இந்து மார்க்கம் திணிக்கிறது;ஆனால் கிறித்தவமோ ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குகிறது.

இதனால் கவரப்படும் மாண‌வர்கள் சிறுவயதில் எளிதில் கிறித்தவத்தின்பால் அதாவது இயேசு எனும் வழிகாட்டியின் மீதான நம்பிக்கை கொள்கிறார்கள்;அதனை பெரியவர்கள் தடுக்கும் போது ஏன் தடுக்கிறார்கள் என்ற கேள்வியே ஒரு மாணவன் மனதில் பெரிய பாதிப்பை உண்டாக்கி மற்றொரு வாய்ப்பில் முழுமையான கிறித்தவனாக மாறுகிறான்.

ஆனால் இந்து மார்க்கத்தின் பெரியவர்களோ தன் பிள்ளை சினிமா பார்த்தாலோ அல்லது வேறு எந்த தவறான பழக்கவழக்கங்களையோ பழகினால் அதனைப் பெரிதுபடுத்தாத நிலையில் மெய்ஞான மார்க்கமாகிய இயேசுவின் மார்க்கத்தைக் குறித்து பெரியதாக எச்சரிக்கை செய்து மாணவர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறார்களே தவிர அதனைத் தடுக்க இயலாது என்பதே மனோதத்துவ ரீதியிலான உண்மையாகும்.

ரோட்டில் கைப்பிரதி கொடுக்கக்  கூடாது,மருத்துவமனையில் சென்று முன்பின் அறியாத ஏழை எளிய மக்களை சந்தித்து ஆறுதல் கூறி பிரார்த்தனை செய்யக்கூடாது, மாணவர்களுக்கு நல்வழிக்கான ஆலோசனைகளைக் கூறி அவர்கள் வெற்றிபெற உதவும் இயேசுவின் வரலாறு அடங்கிய புதிய ஏற்பாடு புத்தகத்தைக் கொடுக்கவும் கூடாது.

அப்படியானால் எப்படி மத நல்லிணக்கம் வளருமாம்?

ஆனால் இவர்கள் அனைத்து அரசாங்க அலுவலகத்திலும் பொது இடங்களிலும் ஆக்கிரமித்து கோவில் கட்டி உண்டியல் வைத்து ஒன்றுமறியாத மக்களை ஏமாற்றி வசூல் செய்யலாம்;ஒரு சாதாரண தெருவோர கோவிலைச் சுற்றியுள்ள எத்தனை கடைகள், எவ்வளவு பணப்புழக்கம் ? இதையெல்லாம் யார் கேட்பது  ? இது தான் மதசார்பற்ற இந்தியாவில் ஜனநாயகம் என்பதா ? இது தான் பத்திரிகை சுதந்தரத்தைக் குறித்து பெரிதாகப் பேசும் தினமலர் போன்ற பத்திரிகையாளர்களின் கருத்து உரிமை தத்துவமா ?

Leave a comment