Archive | January 2010

அறிவடைய நாடு..!(அதுவே அறிவுடைய நாடு)


அண்மையில் ஒரு பள்ளி விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தேன்;அங்கு மேடையில் நடந்தவற்றை மாணவர்களும் பெற்றோருமாகக் கூடியிருந்தோர் யாரும் கவனிக்காவிட்டாலும் நான் சற்று சிரமத்துடன் உற்று கவனித்தேன்;

வரவேற்பு மற்றும் விளக்கேற்றி முடித்ததும் ஒரு இளம் ஆசிரியை உணர்ச்சிகரமாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்ததை கவனித்தேன்;அது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களது பிரபலமான கருத்துக்களையொட்டியதாம்;

அதனைக் குறிப்பெடுத்து இணையத்தில் தேடியெடுத்து எனது வாசகருக்காகப் படைக்கிறேன்;

சுருக்கமான இந்த தகவல் சார்ந்த தழுவல் கட்டுரைக்குக் கொடுத்துள்ள தொடுப்புடன் இதனை முழுவதும் விவரமாகத் தமிழில் மொழிபெயர்த்து வழங்கவும் முயற்சிக்கிறேன்;

இதிலுள்ள நிறைகுறைகளை வாசக நண்பர்கள் தெரிவிக்கவும் வேண்டுகிறேன்;இனி…

ஞானத்தை விரும்பாதவர் இந்த உலகில் யாருமில்லை; அது மிகவும் உயர்ந்ததும் ஆன்மிகம் சம்பந்தமானதுமானதாகத் தோன்றினாலும் அறிவடைய விரும்பாதோர் யாருமில்லை;

அறிவு என்பதன் ஆதாரங்களாக மூன்று கருவிகள் விளங்குகின்றன;

1. படைப்புத்திறன்     2. நெறிசார் நீதி     3. நெஞ்சுர‌ம்

1. படைப்புத்திறன்:

புதியனவற்றை நுணுக்கமாக சிந்தித்து செய்திட கற்றல் உதவுகிறது; கற்றலில் முக்கியப் பங்காற்றுவது வாசித்தலே; ஆம்,வாசித்தல் என்பது படிப்பதல்ல; கற்கும் வண்ணமாக வாசித்தல் வேண்டும்; கற்பதற்கு ஏதுவானதை வாசிக்கவேண்டும்;

படைப்புத்திறனே சிந்திப்பதை ஊக்குவிக்கிறது; சிந்தித்தல் அறிவைத் தர, அறிவுடைமையே ஒருவனைப் பெரியவனாக்குகிறது.

2. நெறிசார் நீதி

வாய்மையைச் சார்ந்துக்கொண்ட‌ மனமே நீதியுடைத்ததாகும்; அதுவே குணத்தின் அழகுமாகும்; அழகான நற்குணசாலிகளால் இல்லத்தில் ஒற்றுமை விளங்கும்; இதனால் தேசத்தின் ஒழுங்கும் உலகில் சமாதானமும் நிலைத்திருக்கும்.


3. நெஞ்சுர‌ம்

படைப்புத் திறனும் நெறிசார் நீதியையுமுடையோர் வித்தியாசமானதைச் சிந்திக்கும் மனவலிமையுடையோராவார்;

புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் உடையோராவார்;

வெளிப்படுத்தப்படாத புதிய பாதையில் பயணிக்கும் ஆற்றலையும் பெற்றிருப்பார்;

இயலாதவற்றையும் கண்டுபிடிக்கும் தைரியமும் தடைகளைத் தகர்த்து வெற்றி பெறும் வைராக்கியத்தையும் அடைந்திருப்பார்.

அறிவையடைதலுக்கு ஆதார அம்சங்களான இம்மூன்று தன்மைகளையும் பெற்று வெற்றிபெறும் வாய்ப்பு இளைஞர்களுக்கே அதிகமுண்டு;

அறிவையடைவீர்…வெற்றி பெறுவீர்..!

குறும்பு மனைவி..!


+1 படிக்கும் எனது தங்கை மகன் தன் அண்மையில் தன் வாழ்வை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தான்; தனது அனுபவத்தை இன்று (24.01.2010) ஒரு ஆலயத்தில் சாட்சியாகச் சொன்னான்;

வீட்டிற்கு வந்த பிறகு அவனை செல்லமாக விசாரித்த மனைவி சொன்னது,குறும்பு..!

“ராஜன் சாட்சி சொன்னியா…சாச்சி (சாய்த்து)சொன்னியா..?”

பைபிளைப் பிடிக்கலனா..?!


நீ பைபிளை பிடிச்சிட்டா பிசாசு (க்கு) உன்னைப் பிடிக்காது;

நீ பைபிளை படிக்கலனா பிசாசு (க்கு ரொம்ப‌) உன்னை பிடிக்கும்;

உனக்கு பைபிளைப் பிடிக்கலனா பிசாசுக்கு உன்னை பிடிக்கும்;

ஆண்டவருடைய வீடு..!


இது ஆண்டவருடைய வீடு;

கொஞ்சகால முன்பு இங்கே இந்த ஆலயத்தைக் கட்டின‌ வேலையாட்கள் இருந்தனர்;  கட்டுமானப் பொருட்களும் இருந்தன;

வேலையாட்கள் கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர்; கட்டுமானப் பொருட்களும் பிரித்து எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன;

ஆனால் இங்கே கட்டப்பட்ட தூண்களும் உத்தரங்களும் வாசற் கதவும் சன்னலும் இங்கேயே சாட்சியாக இருக்கிறது;

அதுபோலவே நீங்கள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்கள்; தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறார்;

இந்த ஆலயத்தில் சிலர் தூண்களாகவும் வாசலாகவும் ஒவ்வொரு பணியை ஏற்றிருக்கிறீர்கள்;  அவரவர் பணியை அவரவர் எல்லையிலிருந்து தங்களாலியன்ற வண்ணம் செய்யவேண்டும்..!

அப்போது தான் தேவனுடைய நாமம் உங்கள் மூலம் மகிமைப்படும்..!

(24.01.2010 அன்று திருவள்ளூர் மேலானூர் திருச்சபையின் அருளுரையில் வழங்கியது…)

புற்றுநோய் எனும் அரக்கன்..!


good bye,Armin..!

கடந்த 11.01.2010 அன்று பிரார்த்தனை உதவி செய்வதற்காக அர்மின்குமாரை சந்தித்தேன்; அப்போது எனது கைபேசியில் எடுத்த படமே இது;

வலதுகரத்தில் லேசான வீக்கம் என பரிசோதிக்கச் சென்றபோது அது எலும்பு புற்றுநோய் என்றும் ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்னரே நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளில் பரவி கடுமையாக பாதித்துவிட்டதாகவும் கூறி மருத்துவர்கள் கைவிட்டுவிட்டனர்;

15 வயதே நிரம்பிய துடிப்பான சிறுவனான அர்மின் கால்பந்து விளையாட்டில் தேறியவன்; கடவுள் காரியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பீடத்துக்கு அருகிலிருந்து இறைப் பணியாற்றியவன்;

இன்று (23.01.2010) உயிருடன் இல்லை; இன்று காலை மூச்சுத் திணறல் என சிகிச்சைக்காகச் சென்ற பிள்ளையை ஏதோ செய்து மூச்சை நிறுத்திவிட்டனர்;

கடந்த எட்டுமாத‌ மரணப் போராட்டத்தின் இறுதியில் மரணம் தோற்றது; அர்மின்குமார் ஜெயித்துவிட்டான்; ஏனெனில் அவன் இரவும் பகலும் வலியினால் துடித்து அழுத மரணக் கூச்சலுக்கு இனி அவசியமில்லை..!

கடந்த எட்டுமாத‌ மரணப் போராட்டத்தின் இறுதியில் மரணம் தோற்றது; அர்மின்குமார் ஜெயித்துவிட்டான்; ஏனெனில் அவன் இரவும் பகலும் வலியினால் துடித்து அழுத மரணக் கூச்சலுக்கு இனி அவசியமில்லை..!

NEVER GO TO HR (High Risk)People


NEVER GO TO HR (High Risk)People

After 3 years of selfless service, a man realized that he has not been promoted, no transfer, no salary increase no commendation and that the Company is not doing any thing about it. So he decided to walk up to his HR Manager one morning and after exchanging greetings,

He told his HR Manager his observation. The boss looked at him,laughed and asked him to sit down saying; My friend, you have not worked here for even one day.

The man was surprised to hear this, but the manager went on to explain.

Manager:- How many days are there in a year?

Man:- 365 days and some times 366

Manager:- how many hours make up a day?

Man:- 24 hours

Manager:- How long do you work in a day?

Man:- 8am to 4pm. i.e. 8 hours a day.

Manager:- So, what fraction of the day do you work in hours?

Man:- (He did some arithmetic and said 8/24 hours i.e. 1/3(one third)

Manager:- That is nice of you! What is one-third of 366 days?

Man:- 122 (1/3×366 = 122 in days)

Manager:- Do you come to work on weekends?

Man:- No sir

Manager:- How many days are there in a year that are weekends?

Man:- 52 Saturdays and 52 Sundays equals to 104 days

Manager:- Thanks for that. If you remove 104 days from 122 days, how many days do you now have?

Man:- 18 days.

Manager:- OK! I do give you 2 weeks sick leave every year. Now remove that 14 days from the 18 days left. How many days do you have remaining?

Man:- 4 days

Manager:- Do you work on New Year day?

Man:- No sir!

Manager:- Do you come to work on workers day?

Man:- No sir!

Manager:- So how many days are left?

Man:- 2 days sir!

Manager:- Do you come to work on the (National holiday )?

Man:- No sir!

Manager:- So how many days are left?

Man:- 1 day sir!

Manager:- Do you work on Christmas day?

Man:- No sir!

Manager:- So how many days are left?

Man:- None sir!

Manager:- So, what are you claiming?

Man:- I have understood, Sir. I did not realize that I was stealing Company money all these days.

Moral: NEVER GO TO HR FOR HELP!!!

பைபிளில் கடவுளின் வார்த்தைகள்..?


இன்று நான் சந்தித்த ஒரு நண்பர் சொன்னதொரு சிறப்பான கருத்து:

“அநேகர் பைபிளில் கடவுளின் வார்த்தைகள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்; ஆனால் வேதம் முழுவதுமே கடவுளின் வார்த்தைதான் என்ற அணுகுமுறையுடனே அதனைப் புரிந்துக் கொள்ளமுடியும்”

முஸ்லிம்களுக்கு அரபுமொழிப்பற்று ஏன்?


Mohamed siddiq:

//*முஸ்லிம்களுக்கு அரபுமொழிப்பற்று ஏன்?* தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் அரபு மொழி மீது பற்று கொண்டிருப்பது ஏன்?

பதில் : “எந்த ஒரு தூதரையும் அவரது சமுதாய மக்கள் பேசும் மொழியைக் கொண்டே நாம்
அனுப்பி வைத்தோம்” (அல்குர்ஆன் 14:4) என்று இறைவன் கூறுவதிலிருந்து எல்லா
மொழிகளும் சமமே என்பதே இஸ்லாத்தின் நிலைபாடு.

ஏக இறைவனின் இறுதிவேதம் அரபு மொழியில் இறக்கியருளப்பட்டதால் அதன் அசல்வடிவில்
ஓத வேண்டும் என்பதற்காகவே அரபி மொழி கற்கின்றோம். //

Chillsam:

இறுதி வேதம் என்று கூறப்படும் குரானுக்கும் முன்னரே குரானில் முற்பிதாக்களாகப் போற்றப்படுவோரின் மொழியான எபிரேயு மொழியில் இறைவன் பேசினாரே;  அதையல்லவா கற்றுக்கொண்டு ஓதியிருக்கவேண்டும்?

இறுதிவேதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள குரானைக் காட்டிலும் விவரமானதாக “தோரா” விளங்குகிறதே;

குரானை யாரோ ஒரு தூதன் வந்து தனிமையிலிருந்த முகமதுவுக்கு ஓதினானாம்; ஆனால் “தோரா” அதைக் காட்டிலும் பன்மடங்கு மேன்மையானது;  ஏனெனில் அந்த ஏக இறைவனே தம் அடியவர்களுக்கு ஒதியவை அடிபிறழாமல் உள்ளது, அதிசமல்லவா?

ஒரு காரியத்தை ஒருவரிடம் சொன்னால் அதனை செய்வது எளிதாக இருக்கலாம்; ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு வெவ்வேறு காலக் கட்டத்தில் சொல்லப்ப்டட செய்தியானது ஒன்று போலிருப்பது அதிசயமல்லவா?

இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்..!


இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளையும் மதிக்கும் நான் அவர்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான், தயவுசெய்து இயேசுகிறிஸ்துவையும் பைபிளையும் விமர்சித்து இஸ்லாத்தை வளர்த்துவிட முடியும் என்று தப்பெண்ணம் கொள்ள‌வேண்டாம்;

ஏனெனில் அன்று கண்ணை மூடிக் கொண்டு சொன்ன எல்லாவற்றையும் நம்பிய தலைமுறை இன்று இல்லை;  இன்றைக்கு கிறிஸ்தவர்களைவிட அதிகமாக பைபிள் இஸ்லாமியர்களால்
வாசிக்கப்படுகிற்து; அது இஸ்லாத்துக்கே ஆபத்தாக முடியப்போகிறது;

ஏனெனில் பைபிளை ஒருமுறை கையில் எடுத்துவிட்டால் அது அந்த நபருடன் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கும்; தூங்கவே விடாது;

ஆனானப்பட்ட போப்பு (RC) மார்க்கத்தவரே பைபிளைப் படிப்பதற்குத் தடை விதித்திருந்தார்கள்;  காரணம் பல்வேறு மார்க்கப் பிரிவினைகளுக்கும் குழப்பத்துக்கும் காரணமாகிவிடும் என்ற அச்சமே;

இன்று இஸ்லாமியர் பைபிளை படிக்கத் துவங்கியதால் அவர்களுக்கிடையே பல்வேறு  பிரிவினைகள் வந்து அந்த கூடாரமே கலகலத்துக் கொண்டிருக்கிறது;

அதுதான் புனித பைபிளின் மகத்துவம்..!

இங்கே முறைப்படி இஸ்லாமிய சகோதரர்களுக்கு பதிலளிக்கக் கூடிய ஒரு சகோதரருடைய தொடுப்பைத் தருகிறேன்;அவர் எத்தனையோ முறை வெளிப்படையான எழுத்துவிவாதத்துக்கு அழைத்தும் அவரை நேர(அ..?)டி விவாதத்துக்கே அழைக்கிறார்கள்;

இது எப்படி நியாயமாகும் என்று தெரியவில்லை; கிறிஸ்தவத்தின் புனித நூலான பைபிளை விமர்சிக்க இருக்கும் சுதந்தரம் குரானுக்கும் இருக்கவேண்டுமல்லவா?

எது எப்படியோ கிறிஸ்தவம் நிச்சயமாக வாளால் பரப்பப்பட்டதல்ல..!

http://isakoran.blogspot.com/2010/01/1.html

Please visit me..!


கர்த்தருக்குள் பிரியமான நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்;

இணைய உலகைக் குறித்து ஏதுமறியாவிட்டாலும் கர்த்தருக்காக ஏதேனும் செய்யவேண்டுமென்ற வைராக்கியத்தினால் கடந்த ஒரு வருடமாக கடினமாகப் பிரயாசப்படுகிறேன்;

எனது முயற்சிகளுக்காக ஜெபிக்கவும் எனது தளத்தைப் பார்வையிடவும் அன்புடன் அழைக்கிறேன்..!

http://chillsam.activeboard.com/