“கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம்”

அண்மையில் எனது ஆதங்கத்தை “மாயாவி ஜட்சன் ஆபிரகாம் கையில் விஷ்ணு சக்கரம்” என்ற கட்டுரையாக்கும் போது தீவிரமான ஒரு சிந்தனையிலிருந்தேன்; ஆம், சரியான மாற்றுவழியைச் சொல்லாமல் வெறுமனே கிறித்தவ ஊழியர்களை விமர்சித்து பேசிக்கொண்டிருந்து கெட்டபெயரை எடுப்பதைவிட தீவிரமாக எதையாவது செய்யவேண்டுமென;  “கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம்” போன்ற பெயரில் ஒரு சுயாதீன இயக்கத்தைத் துவங்கவேண்டும்; அது
தமிழகம் முழுவதும்
ஆங்காங்கு துவக்கப்பட்டு ஒரு இயக்கமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும்;  இதன் உறுப்பினர்கள் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படலாம்;  இவர்களின் பணியானது அஹிம்ஸா வழியில்- ஜனநாயக முறையில் அமைந்திருக்கவேண்டும்.

அதாவது சத்தியத்துக்கு விரோதமான செயல்களை வரையறுத்துக் கொண்டு முதலாவது அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை எச்சரிக்க வேண்டும்.

அடுத்து அவர்களை அழைத்து கூட்டம் போடும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சில ஆலோசனைகளைக் கூறி அவர்கள் கவனமாக இருக்கவேண்டிய காரியங்களை உணர்த்தவேண்டும்.

இந்த மோசடி ஊழியர்கள் தங்கள் வழியை மாற்றிக் கொள்ளாமலும் நம்முடைய எச்சரிப்பைக் குறித்து மேடையில் பகிரங்கமாக அறிவித்து விளக்கம் கொடுக்காத பட்சத்தில் இவர்கள் நடத்தும் கூட்டத்தில் இவர்களுடைய நடவடிக்கைகள் கிறித்தவ நடைமுறைகளுக்கு விரோதமானது என்பதை துண்டுபிரதிகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.

இன்னும் தேவைப்பட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்; மோசடி நிதிநிறுவனங்களையும் போலி மருத்துவர்களையும் கூட புகாரின் அடிப்படையிலேயே போலீஸார் விசாரிக்கின்றனர்; எனவே பாதிக்கப்படாதிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிக்கச் சொல்லி காவல்துறையில் புகார் செய்யலாம்.

இதில் ஒத்த கருத்துடைய சகோதரர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ‘எது சத்தியம், எது சத்தியத்துக்கு விரோதமானது’ என்ற வரையறைகளையும் நடவடிக்கை எடுக்கவேண்டிய வழிமுறைகளையும் இறுதி செய்யலாம்;

இதற்கு தலைவர் என்று யாரும் தேவையில்லை; ஜாமக்காரன் ஆசிரியர் போன்ற யாரையாவது கௌரவ ஆலோசகராக வைத்துக் கொள்ளலாம்.

இது அவசியமா என்று கேட்டால்…

இந்த தேசத்தில் பத்திரிகை சுதந்தரம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?

மனித உரிமை குறித்த விழிப்புணர்ச்சி இருக்கிறதல்லவா?

தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?

அவ்வளவு ஏன் இயேசுவானவரையே எந்த அதிகாரத்தில் இவற்றை செய்கிறீர் என்று கேள்வி கேட்டனரே?

அந்நியன் வந்து நம்மை கேள்வி கேட்டு அவமானப்படுத்துவதற்குள் நம்மை நாமே சரி செய்துகொண்டால் என்ன‌?

3 thoughts on ““கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம்”

  1. கிறிஸ்தவ விழிப்புணர்வு இயக்கம் நிச்சயம் தேவைதான். ஆனால் இதில் ஒரு முக்கிய பிரச்சனை என்னவென்றால், ஒருவருக்குத் தவறானவராகத் தோன்றும் ஊழியர் மற்றொருவருக்கு சரியானவராகத் தெரிவார். இதுதான் தவறான ஊழியர்களின் மிகப்பெரிய பலம்.

    ஓர் ஊழியர் ஒரு விஷயத்தில் தவறினாலும் அவர் தேவஊழியர் எனப்படுவதற்கு தகுதியானவர் அல்ல எனும் கருத்து எப்போது மேலோங்குகிறதோ அப்போதுதான் தங்கள் எண்ணம் ஈடேறும் என்பது எனது கருத்து.

  2. அன்பு நண்பரே ஆர்வத்துடனான பங்களிப்புக்கு நன்றிகள் பல;

    கிறித்தவ விழிப்புணர்வு என்பது வேறு விழிப்புணர்ச்சி என்பது வேறு; இதனை தாமதமாகவே நான் யோசித்து உணர்ந்தேன்; ஏன் நான் விழிப்புணர்ச்சி என்று எழுதாமல் விழிப்புணர்வு என்று எழுதினேன்; யார் அப்படி எழுத வைத்தது என்பதை யோசித்தபோது விடை கிடைத்தது; விழிப்புணர்வு என்பதே சரியானது என்ற தீர்மானத்துக்கு வந்தேன்;

    இதனடிப்படையில் இந்த உணர்வை யாரெல்லாம் அடைகிறார்களோ அவர்களெல்லாம் உணர்வால் ஒன்றிணைவார்கள்; அது ஏற்கனவே நடந்து கொண்டுதானிருக்கிறது; இதெல்லாம் சாத்தியம் தானா, சரிதானா என்ற தேடல் வந்தாலே சத்திய ஆவியானவர் உங்களுக்குள்ளிருந்து கிரியை செய்கிறார் என்பதும் மற்றவரை எச்சரிக்கச் சொல்லுகிறார் என்பதும் அறியவேண்டிய காரியமாகும்;

    இதன்படி நாம் யாருடைய போதனையையோ கேட்டோ அவருடன் இணைவதோ அல்லது இணையச் செய்வதோ நம்முடைய வேலையல்ல; அதற்கென்றே நிறைய குழுக்கள் இருக்கின்றது; நம்முடைய வேலையானது நமக்குள் ஏற்பட்ட இந்த விழிப்புணர்வை அடுத்தவருடன் பகிர்ந்துகொள்வது;

    அது என்னுடைய போதனையால் வரவேண்டிய அவசியமேயில்லை.

    (இன்னும் சொல்லுகிறேன்…)

Leave a comment