வரலாற்றை புரட்டுவது யார் ? வாட்சாப்பில் பரவும் புரட்டு கட்டுரை !

வரலாற்று ப்புரட்டே உன் பெயர்தான் கிறிஸ்தவமா?
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
தேவசகாயம் பிள்ளை
புனிதரா? புரட்டா?
…………………………………………
2012 ம் வருடம் ஜூன்28 ல் தேவசகாயம்பிள்ளையை புனிதர் ஆக்குவதற்கான முதல்படியாக அவரை “உயிர்த் தியாகி” என்று போப் பெனடிக்ட் அறிவித்தார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று தேவசகாயம்பிள்ளைக்கு விழா எடுக்க கத்தோலிக்க சர்ச் முடிவு செய்துள்ளது. தேவசகாயம் பிள்ளை கிறிஸ்தவ மதத்திற்காக பல சித்திரவதைகளை அனுபவித்ததாகவும்,அவர் கிறிஸ்தவராக மதம் மாறியதால்தான் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஒரு வரலாற்று ச்சம்பவம் கிறிஸ்தவ கத்தோலிக்க சபையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த வரலாறு நம்பகமானதா?
அலசுவோம்
………….

தேவசகாயமபிள்ளை வலங்கை செட்டி சமுதாயத்தை சார்ந்தவர்.அவர் கூட்டத்தினரே அவரைக் கொன்றனர் என்று பௌலினோஸ் பாதிரியார் பதிவு செய்துள்ளார்
……….
தேவசகாயம் பிள்ளை நாயர் சமுதாயத்தை
ச்சேர்ந்தவர்.மன்னர் மார்த்தாண்ட வர்மா அவரைக்கொன்றார. ( கோட்டார் மறைமாவட்ட இணையதளம்)
கேள்வி1 :
அவர் உண்மையில் எந்த சமுதாயத்தில் பிறந்தார்? அவரை உண்மையில் யார் கொன்றார்கள்?
இரணியலை அடுத்த மேக்கோடு என்ற ஊரைச்சேர்ந்த பார்கவி அம்மாளை நீலகண்டபிள்ளை மணந்தார். (கோட்டார் மறைமாவட்ட
இணையதளம் )
………………………
கேள்வி 2: திருமணத்திற்கு ப்பின் பெண்வீட்டிற்கு
ச்செல்லும் மருமக்கதாயத்தைப்பின்பற்றும் நாயர் நீலகண்டன் எப்படி நட்டாலத்தில் இருந்திருப்பார்? மேக்கோட்டிற்கல்லவா சென்றிருக்க வேண்டும் ?
உண்மையில் அவர் எங்கு வாழ்ந்தார்? நட்டாலம் நாடகமா?
………………………..
தேவசகாயம் பிள்ளைக்கு வர்மசாஸ்திரமும் களரியும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கற்றுக்கொடுத்தனர் (கோட்டார் மறைமாவட்ட இணையதளம்)

கேள்வி3 : வர்மக்கலையும் களரியும் தென்இந்தியக்கலை என்பது உலகறிந்த உண்மை.அவற்றை 18ம் நூற்றாண்டில் கத்தோலிக்கர்கள் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு கற்றிருந்தார்களா?

உண்மையில் அவர் களரி கற்றாரா? கட்டற்ற கற்பனையா?
………………………..
தேவசகாயம் பிள்ளை காலத்தில் மதமாற்றத்தடைச் சட்டம் திருவிதாங்கூரில் நடப்பில் இருந்தது.
( கோ ம மா இணையதளம்)
மதமாற்றத்திற்குப் பின் தேவசகாயம் பிள்ளை தன்னை கிறிஸ்தவ படைப்பிரிவில் சேர்த்துக்கொள்ள அரசரிடம் வேண்டினார்
( கோ ம மா இணையதளம்)
கேள்வி 4:
மதமாற்றத்தடைச் சட்டம் அமலில் இருக்கும் நாட்டில் மதம் மாறியவர் தன்னை எப்படி மன்னரிடமே கிறிஸ்தவ படைப்பிரிவில் சேர விண்ணப்பிக்க முடியும்?
கேள்வி 5:
கிறிஸ்தவ படைப்பிரிவே வைத்திருக்கும் ஒரு அரசர் எப்படி மதமாற்றத்தடைச் சட்டத்தை நடப்பில் வைத்திருந்தார்?
கேள்வி 6:
சரி ஒருவேளை கிறிஸ்தவ படைப்பிரிவு என்பது திருவிதாங்கூர் அரசரிடம் பணியாற்றிய ஐரோப்பிய படைப்பிரிவு என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், அதில் தன்னைச்சேர்க்க மதம் மாறியவர் கோரினார் என்றால் அது எதைக்காட்டுகிறது? மதம் மாறினால் தேசத்தையே ஒருவன் மாற்றிக்கொள்வான் என்பதை அல்லவா காட்டுகிறது? இது உண்மையில் தேச துரோகம் அல்லவா?

தேவசகாயம் பிள்ளை அரசாங்க கருவூலத்தில் பணியாற்றினார்
(கோ ம மாஇணையதளம் )

மதம் மாறிய தேவ சகாயம் கிறிஸ்தவ படைப்பிரிவில் தன்னை இணைத்துக்கொண்டார் (கோ ம மா இணையதளம்)
கேள்வி7 :
அவர் உண்மையில் எங்கு பணியாற்றினார்? ஆயுதப்படைப்பிரிவிலா? அலுவலகப் பணியா?
ஆயுதப்படையா? அலுவலக ப்பணியா? எது உண்மை?
தேவசகாயம்பிள்ளை சக வீரர்களை மதம் மாற்றி இயேசுவின்கீழ் சொர்க்க ராஜ்ஜியத்திற்காக போரிடும் வீரர்களாக மாற்றினார்.(கோ ம மா இணையதளம்)
தேவசகாயம்பிள்ளை ராஜ துரோக குற்றத்துக்காக கொல்லப்பட்டார் (பௌலினோஸ் பாதிரியார்)
கேள்வி 8:
இதன் உண்மையான பொருள் என்ன 17ஆம் நூற்றாண்டில் தேவனின் சாம்ராஜ்யம் என்பது கத்தோலிக்க ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆட்சியை குறிக்கும் சொல். கோட்டார் மறைமாவட்ட இணையதளம் சொல்வதையும் தேவசகாயம்பிள்ளை குறித்த மிகப்பழமையான ஆதார நூலான பௌலினோஸ் பாதிரியார் சொல்வதையும் இணைத்துப் பார்க்கும்போது இவர் மதம் மாறியதை விட ஐரோப்பிய கத்தோலிக்க காலனிய சக்திகளுக்காக ஒற்றன் வேலை செய்தார் என்பது உறுதிப்படுகிறதே?
தேவசகாயம்பிள்ளை 1752ம் ஆண்டு திருவிதாங்கூர் படைவீரர்களால் துப்பாக்கியால் ஐந்து முறை சுடப்பட்டு கொல்லப்பட்டார்
(கோ ம மா இணையதளம்)
1820 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் மொத்தம் 31 துப்பாக்கிகள் இருந்தன அவைகளும் தளபதிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன(சர்வே ஆப் திருவாங்கூர்)
கேள்வி 9 :
1820 லேயே 31 துப்பாக்கிகள் என்றால் 1752 இல் எத்தனை துப்பாக்கிகள் இருந்திருக்க முடியும் ?
*துப்பாக்கியே இல்லாத திருவிதாங்கூர் வீரர்கள் எப்படி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்க முடியும்?
(ஆரல்வாய்மொழியில் தேவசகாயம் பிள்ளை மன்னரால் தூக்கிலிடப்பட்டார்
“லெப்டினன்ட் வார்ட் மற்றும் கானர்)
கேள்வி 10:
எது உண்மை? தூக்கா? துப்பாக்கியா?
திருவிதாங்கூர் மன்னர்கள் கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தினர் தேவசகாயம் பிள்ளை மதம் மாறியதால் அவர் கொல்லப்பட்டார் (கோட்டார் மறை மாவட்ட இணையதளம்)
திருவிதாங்கூரில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினர் மீது மன்னர் செலுத்திவரும் பரிவுக்கு நன்றி ( ஜுலை2: 1774ல் போப் கிளமண்ட்XlV திருவிதாங்கூர் ராஜாவுக்கு எழுதிய கடிதம்)
கேள்வி 11:
தேவசகாயம் பிள்ளையை கொன்றதாகச்சொல்லப்படும் காலகட்டத்தில் வாழ்ந்த போப் கிளமண்ட்XIV தமது கத்தோலிக்கர்களைநல்லபடியாக நடத்துவதற்கு திருவிதாங்கூர் அரசருக்கு நன்றி தெரிவித்திருப்பதை மறந்து இன்றைய நம்மூர் கத்தோலிக்கர்களில் சிலர் தங்கள் சொந்த மதவெறிக் காகவும் ஆதாயங்களுக்காகவும் போப்பாண்டவரையே பொய்யர் என சுட்டிக்காட்டும் கொடுமையை எதிர்க்க வேண்டியவர்கள் யார்?
நீலகண்டப் பிள்ளை மதம் மாற வடக்கன்குளம் பாதிரியார் புட்டாரிக்கு டிலனாய் கடிதம் கொடுத்து அனுப்பினார்
-கோட்டார் மறை மாவட்ட இணையதளம்
கேள்வி 12:
* பிராட்டஸ்டன்ட் டச்சு தேசத்தை சேர்ந்தவரான டிலனாய் கத்தோலிக்க கிறிஸ்தவராக தேவசகாயம் பிள்ளை மதம் மாற கடிதம் கொடுப்பாரா?
*இந்த காலகட்டத்தில் தானே கொச்சி கண்ணனூர் தூத்துக்குடி கத்தோலிக்க சர்ச்சுகள் பிராட்டஸ்டண்ட்களால் இடிக்கப்பட்டன?
*இப்படி பாதுகாப்பில்லாத இடத்துக்கா டிலனாய் தேவசகாயம் பிள்ளையை அனுப்புவார்?
:ஜனவரி 13 இல் கொல்லப்பட்டார் (கேரள கிறிஸ்தவ வரலாறு)
ஜனவரி 14ல் கொல்லப்பட்டார் (கோட்டார் மறை மாவட்ட இணையதளம்)
ஜனவரி 14 அல்லது பதினைந்தில் கொல்லப்பட்டார் (CBCIஇணையதளம்)
கேள்வி 13 : ஏன் இந்த தேதி குழப்படிகள் 13 லிருந்து 14க்கு மாறியது****15 சேர்த்துக்கொள்ளப்பட்டது ஏன் ?
பொங்கல் பண்டிகையை கிறிஸ்தவ மயமாக்க வா?
***********
திருவிதாங்கூரில் கிறிஸ்தவ குற்றவாளிகளுக்கு டச்சு கிழக்கிந்திய கம்பெனி தான் தண்டனை வழங்க வேண்டும். -1743 மாவேலிக்கரை ஒப்பந்தம்
***********
கேள்வி 14: இந்த ஒப்பந்தத்தின்படி தேவசகாயம் பிள்ளையை கொன்றவர்கள் கிறிஸ்தவர்கள். மன்னர் கொன்றார் என்றால் தேவசகாயம்பிள்ளை இந்துவாக இருந்திருக்க வேண்டும். இதில் எது உண்மை? *தேவசகாயம் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவரா? அல்லது செத்தபின் கிறிஸ்தவராக அறிவிக்கப்பட்ட அப்பாவி இந்துவா?
____________*
தெற்கு கேரளம், தமிழ்நாடு, வட இலங்கை பகுதிகளில் சர்ச்சுக்கும் சமுதாயத்துக்கும் பலனளிக்கும் வகையில் செயல்படுத்த ஒரு படை வீரர் தேவைப்படுகிறார். (கோட்டார் மறை மாவட்ட இணையதளம்)
————————————————-
கேள்வி 15: யார் படையின் வீரர்? யாரை எதிர்த்துப் போரிட்டார்? யாரை எதிர்த்து போரிட தூண்டுகிறார்? அதுவும் நம் பகுதிகளில்!
மதமாற்றம் செய்ய வன்முறையை தூண்ட வெறுப்பு வித்து விதைக்கப்படுகிறது.
வாடிகனால் புனிதர் பட்டம் பெற்றவர்கள் சுமார் 10,000! தகுந்த ஆதாரம் இல்லை என்று புனித விலக்கு அளிக்கப்பட்ட பட்டதாரிகள் இரண்டாயிரம்! ஏன் விலக்கப்பட்டார்கள்? அவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இல்லையாம்! ஒரு சில நிகழ்வுகள் கட்டுக் கதைகளாம்! இந்த புனிதக் கதைகள் பல நாடுகளை கிறிஸ்தவ மயமாக்கி விட்டது. காரியம் ஆனபிறகு இவை கட்டுக்கதைகள் என ஒப்புக்கொள்ளப்பட்டன. தேவசகாயம் பிள்ளையை புனிதராக்கி இந்துக்களை மதம் மாற்றி விட்டு பிறகு புனித விலக்கு தேவசகாயம் பிள்ளைக்கு அளிக்க ஏற்பாடோ? பன்னாட்டு நிறுவனங்கள் அழகு சாதன விற்பனையை இந்தியாவில் அதிகரிக்க இந்திய பெண்களை அழகிகளாக தேர்ந்தெடுத்தது போல் இந்தப் புனிதர் பட்டமும் ஒரு வியாபார தந்திரமா?
கேள்வி 16: மதமாற்ற வியாபாரத்திற்காக புனிதர் பட்டத்தை கேவலப்படுத்த லாமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s