சாரு நிவேதிதா “பொம்பளை பொறுக்கியா..?”

N.Parthiban:
// Chillsam you dont have to fear about anything…Because fans of Charu are very much literate and composed so we would always take it cool about the comments and commentator

What is the importance of knowing that? Is it something useful for this society? Moreover it is his personal and no one has rights to comment on this except him…pls clarify how can you become brave and bold just by knowing those details??? //
“சாருநிவேதிதா” பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது; அவரது கதைகளையோ கட்டுரைகளையோ நான் இதுவரை படித்ததில்லை; அவரது எழுத்துக்களை மட்டுமே வைத்து அவரது குணாதிசயத்தை முழுவதும் கிரகித்துவிடமுடியும் என்றும் நான் நினைக்க‌வில்லை;

ஆனாலும் “அறிவுஜீவி” போலத் தன்னைக் காட்டிக்கொள்ள நினைக்கும் சிலர் சர்ச்சைக்குரியதும் சமூக அக்கறையில்லாததுமான‌ எதையாவது உளறி அதனால் புகழடையவோ, தொடர்ந்து பேசப்படவோ  தரம் தாழ்ந்த, மலிவான விளம்பரம் பெற முயற்சி செய்வதை அறிந்திருக்கிறேன்;

உதாரணத்துக்கு நடிகர் கமல்ஹசன் ‘இந்த சமுதாயத்தில் திருமணம் என்ற சடங்கே தேவையற்றது’ என்று சில வாரங்களுக்கு முன்பு சொன்னது அருவருப்பின் உச்சக்கட்டமாகும்;

அண்மையில் ஜூனியர் விகடன் பேட்டியில் “சாருநிவேதிதா” குறிப்பிட்டிருந்த ஒரு வார்த்தைக்கு தனது தளத்தில் (http://charuonline.com/blog/?p=178) புதிய அர்த்தமொன்றை அவர் வெளியிட அதன் பாதிப்பில் நானும் எனது கருத்தை வெளியிட்டேன்; ஆனாலும் பிரபலமான வெற்றி பெற்ற ஒருவரை விமர்சிக்கிறோமே என்ற அ(கூ)ச்சம் எனக்குள்ளிருந்தது;(பயமல்ல..!)

ஆனாலும் எனது தொடுப்பை (https://chillsam.wordpress.com/2010/03/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/)அவர் தனது தளத்தில் ஒரு நாள் மட்டும் இணைத்திருந்தது ஆச்சரியத்தை அளித்ததுடன் அதனால் இரண்டு விதமான உணர்வை நான் அடைந்தேன்; ஒன்று அவருக்கு சாதகமானதாகவும் மற்றது அவருக்கு பாதகமானதாகவும் இருக்கலாம்;

ஆனால் எனது விமர்சனத்துக்கு பின்னூட்டமிட்ட நண்பர் Devanathan அவர்களுக்கு எதிராக நண்பர் N.Parthiban அவர்கள் கொடுத்த விளக்கங்கள் இந்த சமுதாய அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது;

“சாருநிவேதிதா” எனும் தனிநபரைக் குறித்ததல்ல, இந்த பிரச்சினை; ஆனால் அவரே பொதுசொத்தான பிறகு- அதாவது தனது கருத்துக்களால் சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரபலமான பிறகு (குறைந்தபட்சம் தனது ரசிகைகள், வாசகிகள் வட்டத்திலாவது) பொறுப்புடன் கருத்துக்களை வெளியிட வேண்டாமா என்பதே எனது கேள்வியாகும்;  ‘ஒன்றுமில்லாமலும்’ தன்னைப் பெரிய ‘கவர்ச்சி நாயகனாக’க் காட்டிக் கொள்ளுகிறவர்களும் உண்டு, அது வேறு விஷயம்;

இங்கே “சாருநிவேதிதா” அவர்களுக்காக வரிந்து கட்டும் நண்பர் N.Parthiban தனிநபர் உணர்வுகள் குறித்து பேசுவதே ஆச்சரியமாக இருக்கிறது;  ஏனெனில் குறிப்பிட்ட வார்த்தையான “womanizer” என்பது விளக்கப்படாத வார்த்தையாகவே இன்னும் இருக்கிறது; ஆனால் அதற்கு விளக்கமளிக்காமலே அதைத் தெரிந்துகொண்டு ஆகப்போவதென்ன என்ற ரீதியில் கருத்து வெளியிடுவது சரியானதாகத் தோன்றவில்லையே;

நண்பர் Devanathan அவர்களோ ‘வுமனைஸர்’  (womanizer)
means “பொம்பளை பொறுக்கி” ன்னு அர்த்தம்…”என்று ‘நச்’சென்று அடித்துவிட்டுப் போய்விட்டார்;

“சாரு” பொம்பளை பொறுக்கியாக இருப்பதால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை; அது குறித்து அருமை “அண்ணியார்” அவர்களே கவலைப்படவேண்டும்;

ஆனால் ஒரு பிரபலமான தமிழ் எழுத்தாளர் பயன்படுத்தும் இதுபோன்ற வார்த்தைகள் அவரது ரசிகைகள் மற்றும் வாசகிகள் வட்டாரத்திலும் சமுதாயத்திலும் எந்தவிதமான அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை குறித்து யோசிக்கவேண்டாமா?

எனது மாணவப் பருவத்தில் ஒரு எழுத்தாளருடைய சிறுகதையினால் எனது உணர்வில் ஏற்பட்ட பாதிப்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது; அந்த எழுத்தாளர் “சுதாங்கன்” என்று நினைக்கிறேன், அவரது சிறுகதையின் கருவானது, இதுதான்; ஆண்மையற்ற ஒரு கணவன் தனது புதுமனைவியை திருப்திபடுத்த இளைஞன் ஒருவனை ஏற்பாடு செய்து தருவான்;

இதுபோன்ற கதைகளாலேயே இந்த சமுதாயம் சீரழிந்தது;  எழுத்து சினிமாவைவிட ஆழ்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தமுடியும் என்பது எனது தனிப்பட்ட எண்ணமாகும்;

பெண்ணியத்தைக் கேவலப்படுத்தும் எந்த சமுதாயமும் உருப்படாது; ‘வுமனைஸர்’ (womanizer) என்ற வார்த்தையின் எதிர்ச் சொல்லைக் கொண்டு பெண்களும் எழும்பினால் என்னவாகும்?
பெண் தானே சமுதாயத்தின் அடையாளம்; அவளை மையமாகக் கொண்டுதானே குடும்பமும் வாரிசுகளும் கலாச்சாரமும் நாகரீகமும் சுழல்கிறது?

அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவதைப் போன்ற கருத்துக்களாலும் வார்த்தைகளாலும் அடையும் கீழ்த்தரமான புகழைவிட அமைதியாக இருப்பதே சாலச் சிறந்தது;

பாரதி புகழடையவில்லையா? விவேகானந்தர் புகழடையவில்லையா? தலைமுறைகளைக் கடந்து நிலைத்திருக்கும் விதமான செயல்பாடுகளே இன்றைய சமுதாய‌ தேவை;

மற்றபடி சகோதரர் “சாருநிவேதிதா” அவர்களைக் குறித்து எனக்கு ஒன்றுமில்லை; எனது எண்ணங்களைப் பகிர்ந்துக்கொள்ள இந்த விவகாரத்தைப் பயன்படுத்துகிறேன், அவ்வளவுதான்..!

Leave a comment