இஸ்ரேல் ஈரானைத் தாக்கும் அபாயம்..!

ஜெருசலேம்: ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளை அமெரிக்கா உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால் இஸ்ரேல் நேரடியாக களமிறங்கி ஈரானின் அணு உலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை அடுத்த சில மாதங்களுக்குள் அமெரிக்கா எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் ஓராண்டுக்குள் இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

http://thatstamil.oneindia.in/news/2010/08/12/israel-hit-irans-n-sites.html


இது குறித்து அட்லாண்டிக் மேகசீன் இதழில் பாதுகாப்பு வல்லுனரான ஜெப்ரி கோல்ட்பெர்க் எழுதியிருப்பதாவது:

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அனுமதியைக் கூட பெறாமல் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தலாம்.

நூற்றுக்கணக்கான எப்-15இ, எப்-15எஸ், எப்-16சி ரக போர் விமானங்களை இஸ்ரேல் இதற்குப் பயன்படுத்தலாம்.

ஈரானுக்கு விமானங்களை தாக்க அனுப்பிவிட்டு அது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அந் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக், இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யூசி அராட் ஆகியோர் தகவல் தருவார்கள்.

அதற்கு முன் இரண்டு, மூன்று முறை தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்காவுக்கு தவறான சமிஞைகளை இஸ்ரேல் தரவும் வாய்ப்புள்ளது.

இந்தத் தாக்குதலை அமெரிக்கா கடுமையாக எதிர்த்தால் இரு நாடுகளின் உறவு சீர்குலையும். அதேபோல ஈரானை இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாகத் தாக்கினால் வளைகுடாவில் முழு அளவில் போர் வெடிக்கும். இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளும் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஈரானின் அணு ஆயுத தளத்தில் அதன் அதிபர்

போர் மூளும்-காஸ்ட்ரோவும் சொல்கிறார்:

அதே போல முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவும், இஸ்ரேல்-ஈரான் இடையே போர் மூள நிறைய வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறியுள்ளார்.

தனது நாட்டு பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், இஸ்ரேலின் மிரட்டல்களுக்கு ஈரான் நிச்சயம் அடி பணியாது. அதே நேரத்தில் இஸ்ரேலை கட்டுப்படுத்தும் சக்தி அமெரிக்காவிடமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையிடேமா இல்லை.

இதனால் ஈரானை இஸ்ரேல் தாக்கலாம். பதிலுக்கு ஈரானும் கடும் தாக்குதல் நடத்தலாம். இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதி தரும் அமெரிக்கா, அதை ஈரான் வைத்திருக்கக் கூடாது என்று சொல்ல என்ன அதிகாரம் உள்ளது?.

அதே போல தான் மட்டும் அணு ஆயுதம் வைத்திருக்கும் இஸ்ரேல், அதை ஈரான் வைத்திருக்கக் கூடாது என்று எப்படி சொல்லலாம் என்று கேட்டுள்ளார்.

10 thoughts on “இஸ்ரேல் ஈரானைத் தாக்கும் அபாயம்..!

  1. இஸ்ரேலை அழிப்போம் என்று ஏற்கனவே ஈரான் பிரதமர் சவால் விடுத்துள்ளார். இந்நிலையில் ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பது இஸ்ரேலுக்கு பெரும் அபாயமாக மாறும் வாய்ப்புள்ளது. ஆனால் இஸ்ரேல் சாதகபாதகங்களை ஆராய்ந்து நிதானமாகவே முடிவெடுக்கும் என்று நினைக்கிறேன்.

  2. நண்பரே, உங்கள் ஆழ்மனதின் விருப்பம் கேட்க நன்றாக இருந்தாலும் நிறைவேற நிறைவேற வாய்ப்பில்லை; ஏனெனில் அது சர்வ வல்ல இறைவனின் தேசம்; அந்த தேசத்தைப் பகைத்தவன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை;

    ஒரு வேளை நீங்கள் பைபிள் என்பது பழைய கதை என்று கூறலாம்; எனவே நீங்கள் கடந்த 50 வருட இஸ்ரேலின் வரலாற்றை எடுத்து ஆய்ந்து பாருங்கள்;

    இன்றைய இஸ்ரேலின் வெற்றிகளைப் பார்த்தே நாங்கள் பைபிள் மீதே நம்பிக்கைக் கொள்கிறோம்; நீங்கள் எத்தனைதான் பைபிள் என்பது இறைவேதமல்ல, திருத்தப்பட்டது, கட்டுக்கதை என்றெல்லாம் சொன்னாலும் அதில் கூறப்பட்டவை மட்டுமே ஒவ்வொன்றாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது;

    மேலும் இஸ்ரேல் எனும் தேசம் தானாக உருவானதோ யாரோ தாரை வார்த்து கொடுத்ததோ இல்லை; அதன் ஒவ்வொரு அடிமண்ணும் அதன் குடிமக்களுடைய கடின உழைப்பினால் வாங்கப்பட்டது;

    தனது எதிரியும் மறைமுகமாக இரசித்து நேசிக்கும் அழகிய தேசமாக யாருடைய தயவுமில்லாமல் அது வளர்ந்து வருகிறது; ஆனால் அதன் எதிரியான சதாமின் கதியை உலகமே பார்த்தது;

    தான் மதியீனமாக குவைத்தை ஆக்கிரமத்ததற்கு அமெரிக்காவிடமிருந்து வந்த அதிரடித் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஈராக்கின் சதாம் என்ன செய்தார், தனக்கு சிறிதும் சம்பந்தமில்லாத “டெல் அவிவ்” மீது குண்டு வீசினார்; அன்றே அவர் கதையை முடிக்கும் பிரமாணம் எழுதப்பட்டது;

    பைபிளின்படி தாழத் தள்ளப்படப்போகும் பாபிலோனின் மிச்சங்களையும் எச்சங்களையும் ருசித்துக் கொண்டிருக்கும் ஈரானும் அழிக்கப்படும் என்பது உறுதி..!

    ஏனெனில் இது மனித விருப்பமல்ல,தேவதிட்டம்;அதன் வழியே உலகமுழுவதற்கும் இறுதி எச்சரிக்கை விடப்படும்; இந்த உலகின் இரட்சகர் யார் என்பது அன்று தெரியவரும்..!

  3. சந்தித்து, சிந்தித்து ,முத்தான வரிகளால் பாராட்டின “ரோஜாவின் ராஜாவுக்கு”, அதான் நண்பர் ஜவஹருக்கு மனமார்ந்த நன்றிகள்.

  4. Pingback: 2010 in review « Chillsam's Blog

  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, நண்பர் செல்லத்துரை அவர்களே..!

Leave a comment