Tag Archive | world

கொத்துக் குண்டுகள்..!


நான் நெடுஞ்சாலையின் ஓரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறேன்;எனக்கும் அரசாங்கத்துக்கும் ஏதோ கருத்துவேறுபாடு, பகை; எனவே நான் வசிக்கும் வீட்டின் மீது குண்டு போட்டு அழித்துவிடப் போவதாக எனக்கு தெரியவருகிறது; எனது வீடு என்பது சாதாரண ஓலை குடிசைதான்; மாற்று ஏற்பாடுகளை உடனே செய்யமுடியாத நிலையில் எனது பிள்ளைகளுடன் நடந்துசெல்லும் தூரத்தில் உள்ள மற்றொரு குடிசையை நோக்கி நடக்கிறோம்.

நாங்கள் அந்த குறிப்பிட்ட குடிசையை விட்டு வெளியேற சற்று முன்பதாக பூமி அதிருகிறது;அது மின்தூக்கி (lift)யில் செல்லும்போது ஏற்படும் அதிர்வைப் போல இருக்கிறது; எனவே எந்த பொருளையும் எடுக்கமுடியாத நிலையில் அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறுகிறோம்; ஆனாலும் நான் மட்டும் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்கிறேன்;எனது கணிணி மற்றும் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் வீட்டிலேயே விட்டு விட்டு அவசரமாக வெளியேறுவதால் ஏதாவதொரு விலைமதிப்புள்ள பொருளையாவது எடுக்கலாமே என்று யோசிக்கும்போதே வானத்தில் போர் விமானம் ஒன்று வட்டமிடுவதைக் காண்கிறேன்.

images?q=tbn:ANd9GcR4O-DfPh0J49QMOrgZklN-Ek-pcjQ0UVChK3ynEeRgeA2dz2doggimages?q=tbn:ANd9GcRagM3Savv1jM6xSqueAKMsIPV5y14gVLU4kL_YYN7WYw5CMeca

அப்போதும் கூட என் மனதில் என்ன தோன்றுகிறதென்றால் என்னை அரசாங்கம் மிரட்டவே செய்யும், என் வீட்டின் மீது குண்டு போடாது என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்;ஆனால் பயங்கரம் என்னவென்றால் வானத்தில் வட்டமிட்ட போர் விமானம் குண்டு போடத்துவங்கிவிட்டது ;அந்நேரத்தில் கூட நான் யோசிக்கிறேன்,அந்த குண்டுகள் தரையைத் தொடுவதற்கு முன்பு தீப்பிடித்த வீட்டுக்குள் சென்று எடுத்துவருவதைப் போல “ரிஸ்க்” (risk) எடுத்து ஏதாகிலும் ஒரு பொருளை, முக்கியமாக எனது கணிணியை மட்டுமாவது எடுத்து வந்துவிடலாமா, என்று.

images?q=tbn:ANd9GcRj70WeMwPJaTo0LyJvpK3xzSZ4TIZgzmddnQk9JaWOmajFXcbMimages?q=tbn:ANd9GcQ_dfR2mOKPrYAckIX_gx7r45ZVXdKpx59e56rhaHBVWDmy0-hX

ஆனால் நான் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோதே பயங்கரமான அந்த காட்சியைப் பார்த்து விக்கித்து நின்று விட்டேன்; வானத்தில் என் கண்ணுக்கு எட்டிய சுற்றளவில் ஆயிரக்கணக்கான குண்டுகள் எரிகற்களைப் போல பரவிக் கிடக்கிறது,அவை உடனே விழவில்லை,ஆனால் மெதுவாக இறங்கிக்கொண்டே இருக்கிறது,சிலது மத்தாப்பு போல பிரகாசமாக வந்தும் அந்தரத்திலேயே அணைந்தும் போகிறது; நானும் என் குடும்பமும் எங்களை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த எரிகின்ற குண்டுகளுக்குத் தப்பி எங்கும் ஓடமுடியாது எங்கே ஒடினாலும் அதில் ஏதோ ஒன்று எங்களை அழித்துபோடும். பதுங்குகுழிகளைப் பற்றிய தகவலோ எண்ணமோ இருக்கவில்லை; எங்களைச் சுற்றிலும் எந்த மனித சஞ்சாரமுமில்லை;என் மனைவியும் மகளும் மகளும் சாலையோரமாக ஏதோ ஒரு மறைவிடத்தை நோக்கி ஓட நான் என்னுடன் இருக்கும் எனது தங்கை மகனைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்க்கவும் தைரியமில்லாமல் “ஆண்டவரே” எனக் கதறிக்கொண்டே சாலையின் மத்தியில் நிற்கிறேன்.

வழக்கமாக இதுபோன்ற கனவுகளின் உச்சக்கட்டத்தில் தோன்றுவது போல நாம் தான் வீட்டுக்குள் பத்திரமாக இருக்கிறோமே, இது நிச்சயமாக கனவாகத் தான் இருக்கவேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து கனவுதான் என்ற நிச்சயத்துடடனும் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தேன்.

images?q=tbn:ANd9GcRmNIdlLXiHf_j2VQ0uVUZdzsq6ytt0INSy5KupLz9Uia2ie59H

இந்த கனவுக்கு மற்ற போதகர்களைப் போல ஏதேதோ மிகைப்படுத்தப்பட்ட விளக்கங்களைக் கொடுக்க எனக்குத் தெரியாது; இந்த பதட்டமான கனவின் பொருள் எதுவாக இருந்தாலும் எனது மனத் திரையில் உடனே தோன்றியது, இலங்கைத் தமிழர்களின் அவலநிலை தான்; சொந்த அரசாங்கத்தின் பகையாளிகளாக- தங்களைப் பாதுகாக்க வேண்டிய நிர்வாகத்தின் நாசகாரக் கரங்களாலேயே அழிக்கப்பட்ட கொடுமை வானத்தின் கீழே எந்த சமுதாயத்துக்காவது நிகழ்ந்திருக்குமா?

images?q=tbn:ANd9GcTGN9GwsITnqfB_57iORqWinvb6q3d9BvYJyhQMOk4nIXc2vUwRimages?q=tbn:ANd9GcSFYo7jgowE1YJwbDUUNw0LJGrVWlhXXxVIGZ930tJB5Zq3uokPHQ

அகதிகளுக்கே தேசக் குடிகளைவிட அதிகமான கரிசனையெடுத்து உணவு உடை மற்றும் இருப்பிடத்தையும் பாதுகாப்பையும் தரவேண்டியது ஒரு அரசாங்கத்தின் மாண்புக்கு அடையாளமாகும்;ஆனால் இலங்கை அரசாங்கம் எம் தமிழ் மக்களை கொத்தடிமைகளைவிட கேவலமாக நடத்தி வருவதும் அதனை ஊடகங்களில் எடுத்துச் செல்லும் தன்னார்வத் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது; சொந்த தேசத்திலேயே அகதிகளாக்கப்படும் கொடுமை இந்த நவநாகரீக உலகிலும் தொடரத்தான் வேண்டுமா?

images?q=tbn:ANd9GcTNmuOEM4LNRYPeobkRWM2JRo_KzPQqu4FOW_2g4S-9ONP9P8vL7gimages?q=tbn:ANd9GcSu3hTlHU4me9ivg6ICd4KG-CQWtBT3rZ7-CzMxdo6JfaCyTmlN

எரிகுண்டுகள் என்றும் கொத்துக்குண்டுகள் பற்றி இங்கே நம் தமிழ் ஆர்வலர்கள் மேடை போட்டு பேசும்போது அதன் தீவிரத்தை நாம் அறிந்தோமில்லை;ஆனால் அந்த பயங்கரத்தின் காட்சி என் மனதில் எப்படி தோன்றியது, ஏன் தோன்றியது என்றே புரியவில்லை;அதுபோன்ற யுத்த பூமியில் வாழ்ந்த அனுபவமும் எனக்கில்லை;சொப்பனமே இத்தனை கொடூரமாக இருக்கும் என்றால் நிதரிசனம் எப்படி இருந்திருக்கும்..? இதுபோன்ற கனவெல்லாம் இராஜபக்ஷே போன்ற மனித மிருகங்களுக்கும் நம்ம ஊர் அரிசியில்வியாதிகளுக்கும் வராதா..?

இலங்கைத் தமிழருக்காகப் பரிதபிப்போம்..!

இன்னும் கொடுமையான படங்களைக் காண மனோதைரியம் இருந்தால் தொடுப்பைத் தொடரவும்.

{இன்று காலையில் கலக்கத்துடன் எழுந்தேன்;காரணம், நீண்ட நாட்களுக்குப் பிறகு மறக்கமுடியாத ஒரு கனவும் அது தொடர்பான சிந்தனையும்…}

Advertisements

க்ரெடிட் கார்டு பெண்ணின் சில்மிஷம்..!


ஷீலா,ஆதரவற்ற பரிதாபத்துக்குரிய பெண்;சொந்தங்கள் இருந்தும் கரிசனையற்றவர்களாக இருக்க, மனநிலை சரியில்லாத தாய் ஊரில் பாட்டியின் ஆதரவில் இருக்க, சிறுவயதிலேயே ஓடிப்போன அப்பா , எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமில்லாத இளம்பெண்.

ஆனாலும் தன் சொந்த துக்கங்களை மனதில் புதைத்துக்கொண்டு, ஒரு இயந்திரம் போல, இங்கே ஒரு விடுதியில் தங்கி சொற்ப சம்பளத்தில் ஏதோ ஒரு அலுவலகப் பணியில் இருக்கிறாள்;சம்பளம் முழுவதும் பெரும்பகுதி ஊரில் அம்மாவை கவனித்துக்கொள்ளும் பாட்டிக்கும், தனது விடுதிக்கும் செலுத்திவிட்டு 27 வயதாகும் தன்னுடைய திருமணத்துக்காகத் தானே கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வருகிறாள்.

அவளுக்கு அலுவலகத்திலிருந்து வற்புறுத்தி கொடுக்கப்பட்ட க்ரெடிட் கார்டு மூலம் எந்த நன்மையும் இராதிருந்தும் தொல்லைகள் அதிகம் இருந்ததால் அதனை ரத்து செய்ய அண்மையில் முடிவுசெய்து அதற்கான சேவை அலுவலகத்துக்குச் சென்றாள்;

அங்கேயிருந்த பணிப்பெண், “க்ரெடிட் கார்டு “ மாத்திரமல்ல, அதன் இரகசிய  (PIN No. )எண்ணும் இருந்தாலே அதனை கணக்கு சரிபார்த்து ரத்து செய்ய முடியும் சூழ்ச்சியுடன் சொல்ல , இந்த அப்பாவிப் பெண் தன் க்ரெடிட் கார்டின் இரகசிய  PIN எண்ணையும் ஒப்புவித்துவிட்டு தன் அலுவலகத்துக்கு வந்துவிட்டாள்; அன்றிரவே அவளது கைபேசிக்கு ஒரு குறுந்தகவல் (Sms) வருகிறது, அவளது க்ரெடிட் கார்டிலிருந்து ரூபாய் 27,000/‍ -க்கு பொருள் வாங்கப்பட்டிருப்பதாக‌.

அதிர்ச்சியடைந்து உடனே வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டால் சரியான பதில் கிடைத்தபாடில்லை; பதட்டத்துடன் இரவெல்லாம் தவித்துபோய் காலையில் வங்கிக்குச் சென்று புகார் செய்யப்போனால் அவளுக்கு யாரும் பொறுப்பான பதில் சொல்லவில்லை;க்ரெடிட் கார்டை இரத்து செய்ய பெற்ற (திருட்டுப்) பணிப்பெண்ணும் அலுவலகத்துக்கு வரவில்லை;

ஷீலா வேறு வழியில்லாமல் தனது உறவினர்களைத் தொடர்பு விஷயத்தைச் சொல்லவும் ,அவர்கள் வங்கி அதிகாரிகளைக் கூப்பிட்டு மிரட்டவும், மிகத் தாமதமாக சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட அவர்கள் அடுத்து இந்த விஷயத்தை விவகாரமாக்காமல் மூடிமறைக்கும் சூழ்ச்சி வலைகளைப் பின்னத் துவங்கினார்கள்;

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் சட்டப்பூர்வமான நடவடிக்கை மன்றத்துக்குச் செல்லுவதைத் தடுத்து, இவர்களே விசாரணை அது இதுவென்று இதோ இழுத்து ஒரு வாரம் ஓட்டிவிட்டார்கள்; இந்த ஒரு வாரமாக ஷீலாவுக்கு அனுதாப விசாரிப்புகள், புத்திமதிகள், பரியாசம் போன்ற துன்பங்களுடன் வங்கியிலிருந்து விசாரணைக்கு அழைக்கும் போதெல்லாம் அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காமல் சிறப்பு அனுமதி (Permission) யும் கிடைக்காமல் இப்படி பல்வேறு மன உளைச்சல்…மன அழுத்தம்..!

இனி இழந்துபோன அந்த 27,000/- ரூபாய் கிடைத்தாலும் இந்த துன்பங்களுக்கெல்லாம் யார் ஈடு செய்யமுடியும்? தற்போதய நிலவரத்தில் வங்கி அதிகாரிகள் அந்த திருட்டுப் பெண்ணுக்கு பரிந்துபேசி, “நாங்க அவசரப்பட முடியாது’ம்மா, அந்த பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை ஏதாவது செய்துகொண்டால் பிரச்சினையாகிவிடும் “ என்கிறார்களாம்.

வேதம் சொல்லுகிறது,

“நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.” (உபாகமம்.28:12 );

இந்த வசனத்தின் ஆசீர்வாதத்தைக் குறித்த மேன்மை தெரியாத பலரும் இப்படியே சாத்தானின் திட்டங்களுக்கு பலியாகின்றனர்; கடன் வாங்குவதை அவமானமாக எண்ணியது ஒரு காலம்; இன்று க்ரெடிட் கார்டு இல்லாதிருந்தால் அவமானம் என்று நினைக்கும் நவீன காலம்.

இந்த பாழ் உலகின் மாயையில் சிக்கி ஆதியில் கடவுள் மனிதனை உண்டாக்கி அவனை கவலையற்றவனாக வைத்து பராமரித்த தயவை மறந்த மனிதன், தன் விருப்பத்துக்கு ஏற்ற உலகைத் தானே அமைத்துக்கொண்டான்; அதன் விளைவுகளே இன்று மனிதனை ஆட்டிப்படைக்கிறது; ஆசையையும் அவசரத்தையும் ஒழிப்பதே துன்பத்திலிருந்து நீங்கும் வழியாகும்; அதனையடைய கொஞ்சம் சுயகௌரவத்தை விட்டுவிட்டு சிருஷ்டிகரும் மீட்பருமாகிய இயேசுகிறித்துவைச் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்கு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்.