Tag Archive | தமிழ்நாடு

மாட்டிறைச்சியும் முதலமைச்சரும்


என்றோ- எப்போதோ நடந்தது என்று நினைத்து ஒரு செய்தியை நேற்றிரவு பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகே தெரிந்தது அது மிக அண்மையில் நிகழ்ந்திருக்கிறது. அந்த அளவுக்கு நாம் இந்த உலகுக்கு அந்நியமாகிவிட்டோமே என்று ஆச்சரியமாக இருந்தது. விஷயத்தை கவனிப்போம்…
”தமிழக முதலை(?)மைச்சர் மாட்டிறைச்சி உண்பவர்..” என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட உடனே உணர்ச்சிவசப்பட்ட அவரது கட்சிக்காரர்கள் பத்திரிகை அலுவலகத்தை அடித்து நொறுக்குகிறார்கள். பத்திரிகையாளரும் கருத்து சுதந்தரம் பறிபோய்விட்டதாகவும் ஜனநாயகத்தின் நாடி நரம்பெல்லாம் நெறிக்கப்படுவதாகவும் நடுங்கிப்போனவராக பேட்டி கொடுக்கிறார்.

நாம் யோசித்தது என்னவென்றால் எது பத்திரிகை சுதந்தரம் ? எது ஜனநாயகம் ? ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ன கறி உண்கிறார் என்று செய்தி போடுவதா ? அதனால் நாட்டுக்கு என்ன நன்மை ? இதனால் மாட்டிறைச்சி உண்பரையும் கேவலப்படுத்தியிருக்கிறாரே பத்திரிகையாளர், குழப்பத்துக்கு யார் காரணம் ? உடனே தாத்தா அறிக்கை விடுகிறார்,அவர் ரொம்ப யோக்கியர் போல…இது கோர்ட் மூலம் தீர்க்கக்கூடிய பிரச்சினை,வன்முறை கூடாது என்பதாக.

நம் நாடு எங்கே போகிறது ?

http://www.youtube.com/watch?v=SzZNxXM6uuk&feature=related

Advertisements

ஜெயந்தி தனிமையில்…


பொதுவான அழைப்பும், தனிப்பட்ட அழைப்பும்..!

இன்று  சகோதரி ஜெயந்திக்கு ஆலோசனை கூறி பிரார்த்திக்கச் சென்ற போது மேற்கண்ட சிந்தனை வெளிப்பட்டது; அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று 3 நாட்கள் உபவாசமிருந்து பிரார்த்திக்கச் செல்லுகிறார்கள்; அங்கே இவர்களைப் போலவே தமிழ்நாடு முழுவதுமிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருவர்;

திரள்கூட்டத்தின் மத்தியில் இருக்கவேண்டும், அதுவே பாதுகாப்பு என்பது இன்றைக்கு பெரும்பாலான மக்களின் மனோபாவமாக இருக்கிறது;  எனவே அதிக உறுப்பினர் இருக்கும் சபையில் கலந்துக்கொள்ள செல்வதையும் ஆர்ப்பாட்ட இசைவெள்ளத்தில் மூழ்கி ஆராதிப்பதையும் அநேகர் விரும்புகின்றனர்;  இது தவறல்ல.

ஆனாலும் கடவுள் நம்மை தனியே சந்திக்க விரும்புகிறார்; நாமோ தனிமை நேரத்தை கடவுளுக்குத் தருவதே இல்லை; ஆனால் சாதனையாளர்களுடைய வெற்றியின் இரகசியத்தை ஆராய்ந்தால் அவர்கள் தனிமையில் உருவாக்கப்பட்டு பகிரங்கமாகப் போற்றப்பட்டனர்; இதற்கு பைபிளின் வரலாற்று நாயகர்களான புனிதர்களும் விதிவிலக்கல்ல;

“அறையில் ஆடாதவன் அம்பலத்தில் ஆடமாட்டான்” என்னும் பழமொழிக்கேற்ப தன்னைத் தனிமையில் உருவாக்கிக் கொள்ளாதவன் வாழ்க்கையில் சிறப்பானதைச் செய்வது கடினமாகும்; எதோ ஒரு பிரபலமான இடத்துக்குச் சென்று வருவதால் பாவம் தொலைவதோ ஆசீர் பெறுவதோ ஆகாத காரியமாகும்; இதுவும் ஒருவித மூடநம்பிக்கையே..!

இதனைக் குறித்து பொதுவான அழைப்பு,தனிப்பட்ட அழைப்பு என்ற கருத்தில் யோசித்தால், இந்தியாவின் சுதந்தர தின கொடியேற்றுவிழா நடைபெறுகிறது; அதில் பிரதமர் கலந்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு தேசபக்தியினையூட்டும் உரையாற்றுகிறார்; இது பொதுவானதொரு அனுபவமாகும்;

அதே பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட நபருக்கு தனிப்பட்ட அழைப்பு வருகிறது; அவருடன் பிரதமர் விசேஷித்த சில இரகசியங்களைப் பகிர்ந்துக் கொண்டு தனது அன்பையும் உபசரிப்பையும் வெளிப்படுத்துகிறார்; இதனால் அந்த மனிதனுக்குள் ஒருவித திருப்தியுணர்வும் சந்தோஷமும் காணப்படும்; இது தனிப்பட்டதொரு அனுபவமாகும்;

இதுவே மனிதனிடம் கடவுள் எதிர்பார்க்கும் குணாதிசயமாகும்; கடவுள் விரும்பும் ஸ்தானத்திலிருந்து அவர் விரும்பும் நேரத்தில் அவர் எதிர்பார்க்கும் அர்ப்பண இதயத்துடனும் சுயவிருப்பங்களை மறுத்த உணர்வுடனும் காத்திருந்தால் நிச்சயமாகவே கடவுள் எந்த ஒரு சாதாரண மனிதனையும் சந்தித்து தமது தூதுவனாக மாற்ற வல்லவராக இருக்கிறார்..!