கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை..!

இன்று (2pm) எனது நண்பர் பாலன் பால்ராஜ் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது வெளிப்பட்ட சிந்தனை…

‘ கடவுள் இல்லை ‘ என்று சொல்கிறவர்களை நாத்திகர் என்கிறோம்; நாத்திகர் கடவுள் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமா,அது ஏற்புடையதா என்று யோசிப்பதற்கு முன்னர் ” கடவுள் இல்லை ” எனும் கொள்கையிலுள்ள இல்லை என்ற சொல்லுக்குரிய கொள்கையை ஆராயவேண்டுமல்லவா?

இல்லை என்பதைக் குறித்த விளக்கம் ஆங்கிலத்தில் Absence of Something என்றும் Something that does not exist என்றும் கூறப்பட்டுள்ளது; இதன்படி இருக்கும் ஏதோ ஒன்று இல்லாமலிருப்பதே இல்லை (What is Something ? and what is Nothing ?) என்பதன் கொள்கையாம்;

உதாரணத்துக்கு, என் கையில் பணமில்லை என்றோ என் பாக்கெட்டில் அல்லது என் சட்டை பையில் பணமில்லை என்றோ சொல்வோமானால் பணம், இல்லை எனும் இரு சொற்களில் பணம் என்பதைக் குறித்து அறிந்திருந்தாலே அது இல்லை என்று சொல்லமுடியும்;

பணத்தின் அருமை யாருக்கு தெரியும்,அதனைப் பயன்படுத்தியவருக்கே அல்லவா? மனநிலை சரியில்லாதோருக்கும் குழந்தைகளுக்கும் பணத்தைக் குறித்து ஒன்றும் தெரியாது;

பணம் என்பது என்ன, அதை யார் உண்டாக்கினார், அதன் நோக்கம் என்ன, அதன் அவசியம் என்ன‌ போன்ற அம்சங்களே பணம் என்ற சொல்லின் ஆதாரமாக இருக்கிறது; அதனை உணர்ந்த பின்னரே அது இல்லாததைக் குறித்து அறிந்தோ அல்லது வருந்தியோ அது இல்லை என்று கூறமுடியும்;

இதுபோலவே கடவுள் இல்லை என்று கூறுவதற்கு முன்னர் அவர் யார் என்ற கொள்கையைக் கூறிய பிறகே அவர் இல்லை என்று கூறமுடியும்; கடவுளைக் குறித்து எதுவும் தெரியாமலே கடவுள் இல்லை என்பது ஒரு பொருளைக் குறித்து இல்லை என்று சொல்லக்கூடிய ஆதாரக் கொள்கைக்கு முரணானது ஆகும்; இல்லாத ஒன்றை இல்லை என்று கூறவேண்டிய அவசியமென்ன‌?

No God, No Peace; Know God, Know Peace..!

இப்போதைக்கு எனக்கு ” ஞானம் இல்லை “என்று வைத்துக்கொள்வோமா..?

5 thoughts on “கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை..!

  1. மிகவும் அருமையான சிந்தனை. எங்கே ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

  2. வரவுக்கும் தரவுக்கும் நன்றிகள் சகோதரரே…எனது நீண்ட இடைவெளிக்கான காரணத்தை நமது தளத்தில் { http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33287063 } விவரமாக எழுதியுள்ளேன்;விரைவில் எனது தள பணிகளைத் தொடருவேன்..!

  3. கடந்த மாத இறுதியில் எனது கணிணி பழுதுபட்டது;அதனைச் சரிசெய்து நிமிருவதற்குள் இணையத் தொடர்பில் பழுது ஏற்பட்டது;அது சரியாகி சற்று சுதாரிப்பதற்குள் கடந்த இரண்டு நாட்களாக கணிணி வைரஸ் தாக்குதல்…!

    ஒரு மனுஷனுக்கு தான் எத்தனை சோதனை…இன்னும் சில சொந்த சோகங்களையும் எழுதலாம்;ஆனால் அனுதாபம் பெற விருப்பமில்லாததால் நிமிர்ந்து நிற்கிறேன்..!

    இதோ இரட்சகரின் தூதுவனாக‌ நாகர்கோவில் பகுதிக்குச் செல்லுகிறேன் (11.11.2010); வரவும் எனது பணிகளைத் தொடரவும் சுமார் ஐந்து நாட்களாகும் (16.11.2010);வாசக நண்பர்கள் சற்று பொறுத்துக் கொள்ளவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s