ஹோமோசெக்ஸ் பழக்கம் தவறா? திருநங்கைகள்.Part.4

இது ஜாமக்காரன் எனும் கிறித்தவ பத்திரிகையின் கட்டுரையில் ஒரு பகுதியாகும்.

http://www.jamakaran.com/tam/2010/october/nithyananda.htm

ஹோமோ-லெஸ்பியன் என்ற பாவ பிரவேசம்

ஆண்-பெண் இருபாலாரிடையே இப்போது மிக வேகமாக பரவிவரும் பாவம் ஹோமோ செக்ஸ் – லெஸ்பியன் செக்ஸ் என்பது ஆகும். அலிகள், ஆண் புணர்ச்சிகாரர்கள் ஆகியவர்கள் (Gayism – Lesbianism) தங்களை இறைவனின் படைப்பு என்று இவர்கள் இருவரும் (மத் 19:12வசனத்தைக்காட்டி) நம்புகிறார்கள். இப்படிப்பட்டவர்களை மக்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்ககூடாது என்கிறார்கள்.

அலிகள், ஆண் புணர்ச்சிக்காரர்கள், பெண் புணர்ச்சி பாவம் செய்யும் பெண்கள் ஆகியவர்கள் (Gayism – Lesbianism) பிறக்கும் போதே அப்படிப்பட்ட பால் உணர்ச்சி உள்ளவர்களாகவே பிறக்கிறார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள், உலகமும் அதை நம்புகிறது. பிறப்பிலேயே அப்படியாக பிறந்தவர்கள் (மத் 19:12) லட்சத்தில் ஒன்றைத்தவிர, மற்றவர்கள் யாரும் இயற்கையின் படைப்பு அல்ல. அதைக்குறித்து விரைவில் மருத்துவ விஞ்ஞான உடல்கூறு விவரத்தோடு ஜாமக்காரனில் எழுதுவேன்.

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த வலையில் விழுந்துள்ளதால் நான் எழுதி அறிவிக்கவேண்டியது அவசியமாகிறது.

ஆண்-பெண் தன்மைக்குள்ள இரண்டுவித (Sex) பால் உணர்ச்சிகளும் நம் எல்லாருடைய சரீரத்திலும் உண்டு. விடுதியில் (ஹாஸ்டல்) தங்கி படிப்பவர்கள், தனிவீடு எடுத்து நண்பர்களாக தங்கி படிப்பவர்களை பெற்றோர்கள் கட்டுப்பாடற்ற முறையில் அவர்களின் போக்குக்கு விட்டுவிடுகிறார்கள். இப்படி வாழ்பவர்களிடம் இந்த பாவங்கள் மிக அதிகமாக தொற்றிக்கொள்கிறது.

மேலும் போதைக்கு அடிமையான பெண்கள் – ஆண்கள் இவர்களிடையேயும் இப்படிப்பட்ட பாவசெயல் மிக அதிகமாக காணப்படுகிறது. பள்ளிப்பருவத்தில் ஒருவரோடு ஒருவர் தொட்டு பழகுவார்கள் அல்லது விடுதியில்(ஹாஸ்டல்) தங்கி படிக்கும்போது நண்பர்கள் இருவர் ஒரே கட்டிலில் படுப்பது, இப்படி ஏற்பட்ட பழக்கம் அல்லது உறவுகளின் மூலம் உண்டாகும் தொடுதல் உணர்ச்சிகளால் உண்டான பாவத்தை விளையாட்டுபோல பழகியவர்கள், பள்ளிப்பருவம் அல்லது கல்லூரி பருவம் கடந்தபின்னும், அதை தொடருவதால் அந்த பாவத்துக்கு அடிமையாகி அதை பழக்கத்தில் கொண்டு வந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட தொட்டுபழகும் சூழ்நிலையில் பெண்களுக்கான சரீர பால்உணர்வு ஆண்களுக்கும் – ஆண்களுக்கான சரீர பால்உணர்வு பெண்களுக்கு உள்ளும் இயற்கையாக ஹார்மோன் செயல்பட்டால் உருவாகும்போது யார் எந்தவிதமான பால் உணர்வுக்கு அதிகமான தீனிபோடுகிறார்களோ அதுவாகவே மாறிவிடுகிறார்கள். (ஆண்கள் பெண்களைப்போல – பெண்கள் ஆண்களைப்போல) இவர்கள்தான் நாளடைவில் அலிகளாக ஹோமோ அல்லது லெஸ்பியன் கேரக்டர்களாக மாறுகிறார்கள்.

பல வருடங்களுக்குமுன் இரகசியமாக பேசப்பட்ட இத்தகைய பாவம் இப்போது கடவுளின் படைப்பு என்றும், இயற்கை என்றும் கூறப்பட்டு பொது பழக்கமாக மாறிவிட்டது. இதற்கு அரசாங்கமும் சட்டவடிவம் அமைத்து மனித உரிமை என்ற பெயரில் நியாயப்படுத்திவிட்டனர்.

(Natural Use – இயல்பான முறை), (Against Natural Use – இயல்புக்கு மாறாக) பெண்கள் சுபாவ அநுபோகத்தை சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்…… அப்படியே ஆண்களும்…. ஆணோடே + ஆண் அவலட்சணமானதை நடப்பி(க்கிறார்கள்)…. பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய்….. இருக்கிறார்கள். ரோ 1:26-32 என்று வேதம் எச்சரிக்கின்றது.

(ஒரு ஆண்) பெண்ணோடு சேர்க்கை கொள்வதுபோல் ஆணோடு சேர்க்கை கொள்ளாதே! லேவி 18:22.

ஒருவன் பெண்ணோடு மோகங்கொள்வதுபோல் (புணர்வதுபோல்) ஆண் மகனோடு புணர்வது அருவருப்பான காரியம். அப்படி செய்த இருவரும் கொலை செய்யப்படகடவர்கள். (They shall surely be put death. Lev 20:13). லேவி 20:13. இப்படி வேதத்தில் பழைய ஏற்பாட்டு சட்டம் கூறுகிறது.

இயற்கைக்கு மாறான பாவம் செய்வோர், இவர்களுக்கு கடவுளின் அரசு உரிமையாகாது. 1கொரி 6:9. ஆண்புணர்ச்சிக்காரர்…. தேவனுடைய இராஜ்யத்தை சுதந்திரிப்பதில்லை. 1கொரி 6:9.

நியாயபிரமாண சட்டம்… ஆண்புணர்ச்சிகாரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. 1திமோ 1:10,11. இப்படியெல்லாம் வேதத்தில் புதிய ஏற்பாட்டிலும் திட்டவட்டமாக எச்சரிக்கும்போது, இது எப்படி இயற்கை அல்லது இறைவனின் படைப்பு என்று கிறிஸ்தவ தலைவர்களே கூறுகிறார்கள்?

மேலே வாசிக்கப்பட்ட பாவ செயல்கள் எல்லாம் சோதோம் கொமாராவில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

ஆதி 19:5ல் சோதோமின் ஊர் ஜனங்கள் லோத்தை நோக்கி… நேற்று இராத்திரி உன்னிடத்தில் வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு சற்றுச்சரசமாடும்படி அவர்களை இங்கே கொண்டுவா.. (எங்களுக்கு உன் பெண் பிள்ளைகள் வேண்டாம்) என்றார்கள். ஆதி 19:5.

இப்படிப்பட்ட ஹோமோ செக்ஸ் – லெஸ்பியன் போன்றவர்கள் இயற்கை விதிகளுக்கும், மனித தன்மைக்கும் அப்பாற்பட்ட நிலையில் தங்கள் காமவெறியை தணித்துகொள்ள முயலுகிறதினால் இவர்கள் யாரும் இயற்கையாக அந்தவித பாலுணர்வை பெற்றவர்கள் அல்ல. அவர்களின் காமவெறியை மிருகத்துக்கு ஒப்பாக அவர்கள் அனுபவிக்க முயலுவதால் இதை வேதபுத்தகம் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகம் என்று குறிப்பிட்டு அதை பாவம் என்று அறிவிக்கிறது. இதை எந்த தேசமும், எந்த சபையும், எந்த ஊழியனும் ஊக்குவிக்ககூடாது. அவர்களுக்கு ஒரு ஆராதனை இடத்தை அமைத்துகொடுத்தால் அவர்கள் பாவத்தை நாம் கடவுளுக்கு விரோதமாக ஊக்கப்படுத்துகிறோம் என்பதாகும். இதன்மூலம் அந்த பாவம் செய்பவர்களுக்கும், அதை ஊக்கப்படுத்துபவர்களுக்கும் அதற்கான தண்டனை நிச்சயம்.

இப்படிப்பட்ட பாவத்துக்குள் விழுந்து எழுந்திருக்கமுடியாமல் தவிக்கும் பெண்களுக்கும் – ஆண்களுக்கும் ஆலோசனை கொடுத்து அவர்களை விடுவிக்க இப்போது மருத்துவதுறையில் ஆலோசகர்கள் (Psychologist) உண்டு. இவர்கள் மனநல வைத்தியர் அல்ல, மனநல ஆலோசகர் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் ஆரம்பத்திலேயே கொண்டுபோவது நல்லது. இப்படிப்பட்ட தவறான பால் உணர்வை வைத்தியத்திலும் சுகமாக்கலாம். வீட்டில் உங்கள் பெண் பிள்ளைகள் – ஆண் பிள்ளைகளின் நடவடிக்கைகளை சிறு வயதிலிருந்தே கவனிக்க தொடங்குங்கள். கவலையீனமாக விட்டுவிடவேண்டாம். உபவாசித்து அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் பேச்சும், அவர்கள் நடையும், அவர்கள் உடுத்தும் உடுப்பும், பழகும் விதமும், அவர்களுடன் பழகும் நண்பர்கள், பெண் பிள்ளையாக இருந்தால் அவர்களோடு நெருங்கி பழகும் அவர்களின் சிநேகிதிகளையும் கவனியுங்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் பழகும் விதத்தை மிக ஜாக்கிரதையாக கவனியுங்கள். கவலையீனமாக விட்டுவிடாதீர்கள். முழு குடும்பத்துக்கும் அது அவமானத்தை உண்டாக்கிவிடும்.

வெளிநாட்டில் ஊழியம் செய்ய நான் சென்றபோது கிறிஸ்தவ ஸ்தாபனத்தில் ஒரு வாலிப தம்பியின் நடவடிக்கைகளை கவனித்தேன். மற்றவர்கள் ஜெபத்துக்காகவும், ஆலோசனைக்காகவும் என் அறைக்கு வந்தபோது, இவனும் தனிமையில் என்னிடம் ஜெபம்மட்டும் செய்ய வந்தான். அங்கு நான் தங்கியிருந்த சிலவாரங்கள் அவன் நடவடிக்கைகளின் வித்தியாசத்தை ஆரம்ப முதலே நான் கவனித்ததால் அவனைப்பற்றியும், அவன் பலவீனத்தைபற்றியும் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவனிடமே அறிவித்தேன். ஒத்துக்கொண்டான்.

10ம் வகுப்பு படிக்கும்போதே இந்த பாவசெய்கைக்கு நண்பர்கள் என்னை கட்டாயப்படுத்தி கெடுத்துபோட்டதால் பின் அதை நானே பழக்கமாகவும் ஆக்கிக்கொண்டேன். Youth for Christ மூலம் இரட்சிக்கப்பட்டு இப்போது இந்த ஊழிய ஸ்தாபனத்தில் சேர்ந்து ஊழியத்தில் இறங்கியுள்ளேன். ஆனால் அவ்வப்போது இந்த பாவபழக்கம் எனக்குள் கடந்துவருகிறது. இரகசியமாக பல வாலிபர்களை ஜெபிக்க வாருங்கள் என்று கூறி அவர்களை என் பாவத்துக்கு இசைய வைத்தேன். என்னால் அந்த பாவத்தை விடமுடியவில்லை என்று என்னிடம் கூறிய அந்த சூழ்நிலையில்தான் அவன் அழ ஆரம்பித்தான்.

ஒரு நல்ல ஊழிய ஸ்தாபனத்தில் அந்த வாலிபன் இணைந்து நல்ல ஊழியம் செய்துக்கொண்டிருக்கும்போதுதான் அவனோடு அந்த என் சந்திப்பு நிகழ்ந்தது. கர்த்தர் அவனுக்கு நல்ல தாலந்துகளை கொடுத்திருந்தார். பிரசங்க தாலந்து, எழுத்து தாலந்து இதன்மூலம் அந்த ஸ்தாபனம் அவனை நம்பி ஊழிய பொறுப்பை அவன் வசம் கையளித்திருந்தது. என்னிடம் ஆலோசனைக்கு என்று வந்தவனின் பாவத்தைக்குறித்து அந்த ஸ்தாபன தலைவர்களிடமோ அல்லது வேறு யாரிடமும் நான் கூறக்கூடாது, அதுதான் இரகசிய ஆலோசனை தர்மம். ஆகவே அவனிடம் நீயாக ஊழியத்தை விட்டுவிலகி விடு – மனநல ஆலோசகரை சந்தித்து ஜெபத்துடன் உன்னை சீர்ப்படுத்திக்கொள் என்றேன்.

குறிப்பிட்ட அந்த ஸ்தாபனத்தின் மாத பத்திரிக்கை, தியான புத்தகம் யாவிலும் அவன் பிரசங்கம் இடம் பெறும். அவன் பிரசங்கத்துக்கு நல்ல ஆதரவும் உண்டு. ஆனால் பல வருடங்கள் கடந்தும் அவன் அந்த ஸ்தாபனத்திலிருந்து நீங்கவில்லை. அந்த ஸ்தாபனத்தைதேடி வரும் சிறுவர்களையெல்லாம் கெடுத்துப் போட்டான். என் உள்ளம் தவியாய் தவித்தது. ஸ்தாபனத்தின் உள்ளேயிருந்து இன்னும் எத்தனை சிறுவர்களையும், வாலிபர்களையும் இவன் சீர்அழிக்கப்போகிறானோ என்று அந்த ஸ்தாபனத்தைப் பற்றியும், ஸ்தாபனத்தில் உள்ளவர்களையும் நினைத்து கலங்கினேன். ஒரு வழியாக அந்த வாலிபனின் செயல் ஸ்தாபனத்தில் உள்ளவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டு அவனை அவர்கள் அவமானப்படுத்த துணியாமல் அவனாகவே ஸ்தாபனத்தைவிட்டு நீங்கும்படி செய்தார்கள்.

ஆனால் இப்போது அவன் அதே நாட்டில் சுதந்திரமாக ஏதோ பெரிய ஊழியம் செய்து கொண்டிருப்பதாக சமீபத்தில் கேள்விப்பட்டேன். ஆரம்பத்திலேயே அவன் தன்னை சரி செய்திருக்கலாம். இப்போது அவன் ஊழியம் செய்துகொண்டே எத்தனைபேர்களை கெடுத்து தன் பாவத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறானோ தெரியவில்லை!

இப்படிப்பட்ட பாவசெயல் திருமணமாகாமல் ஊழியம் செய்யும் சில பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களிடமும் காணப்படுகிறது. உதவி பாஸ்டர்களை தன் பாவசெயலுக்கு பெரிய பாஸ்டர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஈரோட்டில் ஒரு பாஸ்டர் இந்த பாவத்தில் பிடிக்கப்பட்டு சபை மூப்பர்களால் அந்த பாஸ்டர் மன்னிப்பு பெற்று இப்போதும் ஊழியம் செய்கிறார். இதை அங்குள்ள பெந்தேகோஸ்தே சபையில் உள்ள சிலர் அறிவார்கள். ஆனால் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.

சில சமயங்களில் சில பாஸ்டர்மார் பிடிக்கப்படுகிறார்கள், இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். கத்தோலிக்க சபை குருமார் கிரமித்த சிறுவர்களின் எண்ணிக்கை குறித்து பத்திரிக்கைக்காரர்கள் வெளியிட்டபோது போப் அவர்களும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாரே! இதுபோலவே பெண்கள் பகுதியிலும் பெண்கள் ஹாஸ்டல், பெண்கள் விடுதி, பள்ளி, அனாதை விடுதிகள், கைவிடப்பட்ட பெண்களின் விடுதிகள் இவைகளில் தங்கும் பெண்களிடம் இப்படிப்பட்ட பாவம் பெருகிக்கொண்டேயிருக்கிறது. ஜாக்கிரதை! ஜெபிப்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s