மக்கள் டிவியில் ஆழமான நம்பிக்கை..!

இன்று மக்கள் டிவியில் ” தமிழ்ப் பண்ணை “ எனும் நிகழ்ச்சியில் பேராசிரியர் மா.நன்னன் அவர்களது வழக்கமான தமிழ் மொழி செம்மை பயன்பாட்டினைக் குறித்த கருத்துரையில் கவனித்தது…
முதலில் ஒரு வாக்கியத்தினை எடுத்து அதன் நிறை குறைகளைச் சொல்லிக்கொண்டே வந்தார்; நானும் இடையிலிருந்தே நிகழ்ச்சியைக் கவனித்தபடியினால் முழுவிவரமும் கிட்டவில்லை;

முதல் கருத்து:
‘என்று உரைத்தார் என்று உரைப்பேன்’ என்பதை, “எத்தனை எளிமையாக என்றார், என்பேன் என்று சொல்லுகிறார்; தமிழ் மொழி இன்னும் வளரும் ” என்று பாராட்டுவது போல வஞ்சப்புகழ்ச்சியாகவோ என்னவோ சொல்லிமுடித்த பின்னர், “ஆழமாக நம்பினேன்” என்ற வார்த்தையை விமர்சித்தார்;

‘முழுமையாக, உறுதியாக நம்பினேன் ‘ என்றெல்லாம் சொன்னால் ஏற்புடையதாக இருக்கும்; அது என்ன ஆழமாக நம்பினேன், இதுபோல எந்த மொழியிலும் சொல்லப்படுவதில்லையே ” என்று அங்கலாய்த்து முடித்தார்; முடிவாக,”  தமிழை தமிழாசிரியர் மட்டுமே வளர்த்துவிட முடியாது;அதன் நிறைகுறைகளைச் சரி செய்து விடமுடியாது; எழுத்தாளர்களுக்கும் அதில் முக்கிய பங்கு உண்டு ” என்று அழுத்தி (..?)கூறியபோது எனக்கு சற்று பெருமையாக இருந்தது;

ஆனால் எனக்கோ எங்கு துணை எழுத்தைச் சேர்க்கவேண்டும், எங்கு வார்த்தையினைப் பிரித்து இடைவெளி விட்டு எழுதவேண்டும் என்று கூடத் தெரியாது;  தமிழறிஞர்கள் இதனைக் கவனித்தால் தாராளமாகத் திருத்தி காரணத்துடன் பின்னூட்டமிடலாம்;

தமிழுக்கு நாம் நன்மை செய்யாதுபோனாலும் தீமை செய்யாமலிருக்கலமல்லவா? நான் எழுதுவதெல்லாம் சங்கீதக்காரர்கள் ‘ கேள்வி ஞானம் ‘ என்று கூறுவது போல வாசிப்பு ஞானத்தைக் கொண்டு மட்டுமே..!

பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் ‘ஆழமாக நம்புவது’ என்பது சரியான சொல்லாட்சியல்ல, என்று கூறியபோது எனக்குத் தோன்றியது…
அவர்  ‘ மேலோட்டமாக ‘ எதையோ கூறுகிறாரோ என்பதே;
ஆம், ‘ ஆழமாக ‘ என்பதன் எதிர்ச் சொல் ‘ மேலோட்டமாக ‘ என்று இருக்குமானால் ஒரு குறிப்பிட்ட காரியத்தின் மீதான நம்பிக்கை  ‘ஆழமாக ‘ இருப்பதுதானே சரியானதாக இருக்கும்?

நாம் விண்ணைச் சார்ந்த வாழ்க்கை வாழுகிறோம் என்பது உண்மையானால் நம்பிக்கை ஆழமாக அல்லவா இருக்கவேண்டும்? உறுதி என்பது ஆழத்தில் இருக்கட்டுமே;
விவிலியமும் கூறுகிறது,
“விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,

சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;

அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகலபரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.” (எபேசியர்.3:17,18,19)

இந்த வேதப்பகுதியில் ‘ஆழம் ‘ என்ற வார்த்தையின் பயன்பாடு எந்த சூழ்நிலையில் அமைந்துள்ளது? அதற்கு இணையாக மற்றொரு வார்த்தை ‘ஆழம் ‘ சம்பந்தமாக வருகிறது, அது என்ன?

ஆம், ‘நம்பிக்கை ‘ எனும் துளிரானது ‘அன்பு ‘ எனும் வேரில் ஊன்றப்பட்டு அது ‘ஆழமாக ‘ ஊடுறுவியிருக்குமானால் நாம் ‘இலக்கை அடைவோம் ‘ என்பதில் ‘ஆழமான நம்பிக்கை ‘க் கொள்வதில் தவறென்ன..?

Advertisements

One thought on “மக்கள் டிவியில் ஆழமான நம்பிக்கை..!

  1. ஓன்று – ஆழமான என்பது ஒரு அளவுகோல். முழுமைக்கும் மேலோட்டதுக்கும் இடைப்பட்டது. முழுமை என்றால் நூறு சதவிகிதம். பரிபூரணம்

    இரண்டு – கிறிஸ்து, விசுவாசம், இருதயம், சுத்தம் தேவன், பரிபூரணம், ஐசுவரியம், வேதம் – இதெல்லாம் தூய தமிழா ?
    ஸ்தோத்திரம், பெலம்- இதெல்லாம் தமிழா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s