மிஸ்ட் கால் (missed call) கொடுப்பவரா நீங்கள்..?

ஒரு புத்தகத்தை விரும்பி வாங்குகிறோம்;அதைப் பெரும்பாலும் வாசிப்பதில்லை;வாசித்தாலும் அதைக் குறித்த அனுபவத்தை மற்றவ‌ருடன் பகிர்ந்துக் கொள்ளுவதுமில்லை;

bxp37671h.jpg

ஒரு புத்தகத்தை வாங்கிய‌ நோக்கமே அதனை வாசித்து முடிப்பதாக இருக்குமானால் அதைக் குறித்து கலந்துரையாடுவது அதன் நன்மையை முழுவதும் அடைய உதவும்;

அதுபோலவே இரட்சிப்பு எனும் இலவசமான நுழைவுசீட்டைப் பெற்றுள்ள நாம் அதனை நிறைவேற்றுவதில் மந்தமாக இருக்கக்கூடாது;

(Pls follow the link…)

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=34927577

Advertisements

3 thoughts on “மிஸ்ட் கால் (missed call) கொடுப்பவரா நீங்கள்..?

 1. Dear bro i hope u r the one who write comment in Tamil hindu .com Pls dont reply in their site just to stimulate them they ll publish some of our comment they ll not publish our right reply which can shut their mouth they criticise very badly abt christianity and jesus i feel very sad b4 i also replied some time now i stopped no christians shd write comment there no hindus also posting thier comments for their spiritual articles with love edwin

 2. அன்பான சகோதரர் எட்வின் அவர்களுக்கு, வாழ்த்துக்கள்; தாங்கள் கணித்தவாறு நான் கிறித்தவ எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் தளங்களில் நமது நியாயங்களை எடுத்துச் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்;

  ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது தாங்கள் அறிந்ததுதானே; அவர்களுடைய தளத்துக்கு வரும் எண்ணற்ற இந்து நண்பர்கள் நம்முடைய தரப்பு நியாயத்தை பார்த்து ஓரிருவராது தெளிவடைய வாய்ப்புண்டாகுமோ என்றெண்ணியே இந்த பணியைத் தளராது செய்துவருகிறேன்;

  நம்முடைய ஆண்டவரை வரைமுறையில்லாமல் அவர்கள் தூஷிக்க நான் காரணமாகிவிட்டேனோ என்ற எண்ணத்தில்
  நீங்கள் கூறுவது போல எனக்கும் கூட அநேக முறை சலிப்பு வந்ததுண்டு; அண்மைக்காலமாக அந்த தளத்தை பார்வையிடுவதைக்கூட நிறுத்தியிருந்தேன்;

  ஆனால் அண்மையில் மிஷினரிகளைக் குறித்த குறிப்பிட்டதொரு கட்டுரையைப் புகழ்ந்து “திருச்சிக்காரன்” தளம் எழுதியிருக்க அந்த தளத்துக்காக எழுதியதொரு பின்னூட்டத்தையே “தமிழ்ஹிந்து”விலும் பதித்தேன்; அதிசயமாக – அதாவது வம்பு வளர்க்கவேண்டியே பதித்திருந்தார்கள்; ஆனால் மிகத் தந்திரமாக எனது அடுத்தடுத்த பின்னூட்டங்கள் உள்ளே செல்லாமல் செய்துவிட்டனர்;

  அதையும் தளராது மற்ற தளங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்; ‘இதன்பலன் என்ன, எனது பொன்னான நேரத்தை வீணான வாக்குவாதங்களில் செலவிட்டுக்கொண்டிருக்கிறேனோ,’என அடிக்கடி எனக்குள்ளிருந்து ஒரு எச்சரிக்கையுணர்வு தோன்றிக்கொண்டேயிருக்கிறது;

  ஆனாலும் இதுபோன்ற எதிர்மறைக் கருத்துக்களுக்கு ‘வேகம் அதிகம் விவேகம் குறைவு ‘ என்பதையுணர்ந்த நான் தகுந்த பதிலைத் தராவிட்டால் நமது விசுவாசத்துக்கு ஏதோ துரோகம் செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு வருகிறது;

  ஆணடவர் அனைத்தும் பார்த்துக்கொள்வார் என்பது உண்மைதான்; ஆண்டவர் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்; நாம் வைராக்கியமுடையவர்களாக இருக்கிறோமா,என்பதையும்;

  நான் இங்கே பதிவுசெய்து வைத்துள்ள செய்திகள் எக்காலத்திலும் பேசிக்கொண்டேயிருக்கும்; அவர்கள் தளத்திலிருந்து என்னுடைய கருத்துக்களை நீக்கினாலும் என்னுடைய தளத்தில் அது இருக்கிறது;

  மேலும் என்னுடைய வருத்தம் என்னவென்றால் நம்முடைய ஆண்டவருடைய பெயரால் ஊழியம் செய்து பல வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொண்ட எந்த ஊழிய ஸ்தாபனமும் நம்முடைய ஆண்டவரைக் குறித்த தூஷணங்களுக்கு எந்த விளக்கத்தினையும் முன்வைக்கிறதில்லை; இது எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை;

  அந்த மக்களுடன் நேரடியாக மோதாவிட்டாலும் தகுந்த விளக்கத்தினைக் கொடுக்கும் தார்மீக பொறுப்பையாவது நிறைவேற்றலாமே..?

  உதாரணமாக இஸ்லாமிய நண்பர்கள் இந்த இணைய தள வசதிகளைப் பயன்படுத்தி தங்களுக்கு எதிராகப் பேசுவோருக்கு பதிலளிப்பதிலும் தங்கள் மார்க்கத்தினைக் குறித்த போத்னைகளை பதிப்பதிலும் முன்னணியில் இருக்கின்றனர்;

  அதாவது அவர்களுடைய மார்க்க விளக்கப் போதனைகள் என்பது நமது வேதத்தையும் விசுவாசத்தையும் (கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதலை மறுத்து…) தூஷிப்பதே;

  இதனைத் தடுக்க நாம் செய்த முயற்சி என்ன?
  எண்ணற்ற கிறித்தவ இளைஞர்கள் அவர்களால் வஞ்சிக்கப்பட்டுக் கொள்ளை போய்க் கொண்டிருப்பதை உணர்ந்தோமா?

  கிறித்தவர்களின் சாட்சியற்ற ஜீவியம் மற்றும் ஊழியர்களின் தன்னலப் போக்கினால் சலித்துப் போன இளம் விசுவாசிகளைக் காப்பாற்ற நாம் செய்யப்போகும் முயற்சி என்ன?

  சற்று யோசியுங்கள்..!

 3. //கிறித்தவர்களின் சாட்சியற்ற ஜீவியம் மற்றும் ஊழியர்களின் தன்னலப் போக்கினால் சலித்துப் போன இளம் விசுவாசிகளைக் காப்பாற்ற நாம் செய்யப்போகும் முயற்சி என்ன?//

  வேதம் நம்மை நடமாடும் நிருபங்கள் என அழைக்கிறது…. எனவே, ஒவ்வொரு தனிப்பட்ட கிறிஸ்தவனின் சாட்சியும் மிக முக்கியம்..
  தங்கள் மோசமான நடக்கைகளால் அநேகருக்கு இடறலாக உள்ள விசுவாசிகளும் ஊழியர்களும் இந்த நாட்களில் மலிந்து இருப்பது வேதனைக்குரிய விஷயமே….

  மத்தேயு 5:16 இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
  1. குறைந்த பட்சம் இருக்கிற நாமாகிலும் இதற்கு கீழ்படிவோம்.
  2. நம்மை விட இளம் விசிவாசிகளுக்கு குறிப்பாக வாலிபர்களுக்கு வேதத்தை சரியாக போதிப்பதும், அனுதின வாழ்வில் நம்மை அவர்களுக்கு முன்மாதிரியாக காண்பிப்பதும், அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்து புத்தி சொல்வதும் நம்மேல் விழுந்த கடமை ஆகும்.. சுருக்கமாக சொன்னால், ஒவ்வொரு திமாத்தேயுவிற்கும் நாம் பவுலாக இருத்தல் அவசியம்…(I & II திமாத்தேயு)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s