“அப்பா, பிதாவே”

இன்று காமராஜபுரம் ஊழியத்தில் ஜெப நேரத்தில் வெளிப்பட்ட (thought) சிந்தனை…

இயேசுவானவர் இந்த உலகத்தில் 33 .5 வருடம் வாழ்ந்ததாகவும் சுமார் 3 .5 வருடம் ஊழியம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது; ஆனால் ஆவியானவருடைய பணி கடந்த 2000 வருடமாகத் தொடருகிறது;

அவருடைய உதவியாலே பிதாவாகிய தேவனை “அப்பா, பிதாவே” என்று அழைக்கும் உரிமையே எனக்குக் கிடைத்தது;

அவருடைய பெயரைச் சொல்லியே இந்த வருடம் முழுவதும் பிழைத்தேன்;உடுத்தினேன்;சுகமாகத் தங்கினேன்;

இந்த உலகில் நாம் விரும்பும் எத்தனையோ பேரை அண்ணா, அய்யா, அம்மா, அக்கா என்றெல்லாம் உறவு சொல்லி அழைக்கிறோம்; அவர்களெல்லாம் நம்மை மெய்யாகவே உறவாக நினைத்து தங்களிடமிருக்கும் அருமையானவற்றை நமக்குக் கொடுப்பார்களா?

ஆனால் சொந்த அம்மா,அப்பா கூட நம்மைக் காப்பாற்ற முடியாத நிலையில் நம்மை ஏற்றுக்கொண்ட ஆண்டவர் நம்மை போஷிக்கிறார்;

நாமோ மாம்சமும் மனசும் விரும்பினதையெல்லாம் செய்து கோபாக்கினையின் பிள்ளைகளாக மரணத்துக்கு ஏதுவானவர்களாக பயப்படுகிறவர்களாக இருந்தோம்;

ஆண்டவரோ நமக்கு இர(ற)ங்கி நம்மைச் சேர்த்துக்கொண்டு தமக்கு நம்மை உறவாக்கி அழகு பார்க்கிறார்;

பூமியின் கடைக்கோடியில் விசாரிக்கப்படாத நிலையிலிருந்தாலும் உன்னதத்திலிருந்து நம்முடைய கூப்பிடுதலைக் கேட்கிறார்

Amazing Grace..!

One thought on ““அப்பா, பிதாவே”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s