மாறுபாடானவற்றைப் போதிக்கும் துருபதேசக்காரர்கள்..!

// அன்று எகிப்திலிருந்து தேவன் இஸ்ராயேல் மக்களை மோசேயின் தலைமையில் கூட்டி வந்தார். மக்களுக்கு மாமிசம் தேவைப்பட்டபோது மோசேயிடம் முறையிட்டார்கள். தேவன் அவர்களின் பயனத்திற்கு பொறுப்பேற்றபடியால் அவரே காடைகளை பொழிந்தார்.

இன்று தேவன் தங்களை தொலைக்காட்சி மூலமாக ஊழியம் செய்யும் படி அழைத்தார் என்று சொல்லிக்கொண்டு மக்களிடமே அதற்கு உண்டான பணத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். //

நீங்கள் இதுபோல பேசுவதற்கும் மக்களை அவர்கள்தான் சேர்த்துக் கொடுக்கிறார்கள்; அதாவது மாறுபாடானவற்றைப் போதிப்பவர்கள் தங்களது களமாகக் கொண்டுள்ளது இதுபோன்ற இளம் விசுவாசிகளையே;

அவர்கள் ஏதோ தவறாகக் கேட்டு நிர்ணயித்துக் கொண்டதைப் போலவும் இவர்களே சரியானதைச் சொல்லி அவர்களைக் காப்பாற்ற வந்தது (ஓநாய்கள்)போல)வும் வேடமிடுவர்;

இவர்களிடமிருப்பது சரியான சரக்காக இருக்குமானால் இவர்கள் இதுவரை சுவிசேஷத்தை கேள்விப்பட்டிராதோரிடம் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டவேண்டும்;

இன்றைக்கும் வெளிநாட்டு உதவிகளும் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தக விநியோகமும் பெறுவது மாறுபாடானவைகளைப் போதிக்கும் குழுக்களே;

இவர்கள் வெளிநாட்டுத் தொடர்பில்லாத தியாகிகளாக இருந்தால் மட்டுமே மற்றவரை குறை கூறமுடியும்;

சுவிசேஷத்தை பிரபல்யபடுத்த ஆவியானவர் பல வழிமுறைகளை பயன்படுத்துகிறார்;

மோசே கூட வானத்திலிருந்து காடைகளை வரவழைக்கவில்லை; அவனும் கூட ஆசரிப்பு கூடாரம் கட்ட மக்களிடமே அறிவித்தான்;தாவீதும் அப்படியே;

பவுலைத் தவிர வேறு யாரும் வேலை செய்து ஊழியம் செய்ததாக குறிப்பு இல்லை; பவுலும் கூட சுமார் இரண்டரை வருடம் மட்டுமே வேலை செய்தார்; பயணித்துக் கொண்டே இருக்கும் ஒரு நபர் நிரந்தர வேலை எதையும் செய்யமுடியாது;

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து- குறிப்பிட்ட மக்களுக்கு குறிப்பிட்ட நோக்கத்துடன்- எழுதப்பட்ட நிருப வாக்கியத்தை பொதுவான தன்மையுடைய போதனையாகவோ,கொள்கையாகவோ கொள்ளமுடியாது;

சுவிசேஷப் பணியை முழுநேரமாக செய்தோரால் மட்டுமே கிறிஸ்தவத்தில் ஒவ்வொரு துறையிலும் அரும்பெரும் சாதனைகளைச் செய்யமுடிந்தது;

மேம்போக்காக, நுனிப்புல் மேயும் போக்கில், காழ்ப்புணர்ச்சியுடன் ஊழியர்களை விமர்சிப்பதைவிட்டு சத்தியத்தை மட்டுமே நாம் தியானித்தால் நல்லது;

அவர்களுடைய வாழ்நாள் சாதனையின் வயதைக் கூட எட்டாதோர் “வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என எதையாவது பிதற்றுவதை (மாறுபாடானவற்றைப் போதிக்கும் துருபதேசக்காரர்கள்) தவிர்க்கவேண்டும்..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s