“பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் “

“தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.

இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.

மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.

அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.

நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.

நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம்வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.

லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.

லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.

மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.

லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.

தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.

அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்; மற்றவன் கைவிடப்படுவான்.

திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.

வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.(லூக்கா.17:20‍ 37)

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய ஒரு வார்த்தையையோ- ஒரு கேள்வியையோ ஆராயும் முன்பதாக மிகவும் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்;

ஏனெனில் ஒரு காரியத்தை விளங்கிக் கொள்ள அதனைச் சொன்னவரின் மன ஓட்டம் மற்றும் சொல்லப்பட்ட செய்தியின் சூழலையும் கவனித்தாக வேண்டும்;

என்னுடைய கருத்தைப் படிப்பவருக்கு இதுவரை அறியப்பட்ட கருத்து மேலோட்டமானது என்றும் ஆண்டவர் சொன்ன செய்தியின் முழு சாராம்சத்தையும் யாரும் விளக்கிவிடவில்லை என்ற புதிய கோணத்தில் வெளிச்சம் உதிக்கலாம்;

விஷயத்துக்கு வருவோம்; இந்த வேத பகுதியின் அடக்கமானது மிகச் சரியாகப் பார்த்தால் 20-ம் வசன‌த்திலேயே துவங்குகிறது;

மையப் பொருள்: “தேவனுடைய ராஜ்யம்” அதன் அடையாளம் மற்றும் உதாரணம்; இறுதி செய்தி,அழிவைக் குறித்ததே; எனவே தான் “எங்கே” என்று கேட்டனர்;

எது அடையாளம்,என்ன உதாரணம்,எங்கே அழிவு என்று ஆராய்வதே உண்மையறிய உதவும்;

“தம்முடைய நாளிலே” என்று ஒரு காலத்தையும் “அதற்கு முன்பு ” என்று ஒரு நிகழ்ச்சியையும் அடையாளமாக‌த் தருகிறார்;

“நோவாவின் நாட்களில்” என்றும் “லோத்தினுடைய நாட்களில்” என்றும் சொல்லிவிட்டு “மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.” என்று உதாரணத்தையும் தருகிறார்; மேலும் “லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றொரு கூடுதல் உதாரணமும் தருகிறார்;

எல்லாவற்றுக்கும் மேலாக யூதரிடையே பிரபலமான ஒரு “ப‌ழமொழி“யினையே சீடருக்கு தனது பதிலாகக் கொடுக்கிறார்;

{தொடர்ந்து விளக்குகிறேன்…}

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s