மாதா வணக்கம்..!

மாலையில் சகோதரி மெர்ஸி அவர்களது மாமியாருக்கு பிரார்த்தனை செய்ய அழைப்பு வந்தது; கடந்த சில மாதங்களாக காரணமில்லாத வயிற்றுப்போக்கு; மருத்துவர்கள் எல்லா பரிசோதனைகளும் செய்துவிட்டு ஒரு வியாதியும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்; ஆனாலும் வயிற்றுப்போக்கினால் மிகுந்த பெலவீனத்தாலும் மரண பயத்தாலும் மிரண்டு போயிருக்கிறார்கள்;

அவர்களுக்குப் பிரியமான கடைக் குட்டி மகனும் கடந்த 10 வருடமாக சிங்கப்பூரில் நிரந்தர வருமானமில்லாமல் இங்கும் வரமுடியாமல் சிரமத்திலிருக்கிறார்;

அவர்களுடைய வீட்டுத் தெருவில் நுழையும்போது ஆண்டவர் என்னுடன் சொன்னதையே ஆலோசனையாகச் சொல்லி பிரார்த்தனை செய்தேன்; அது எனக்கும் ஒரு எளிமையான செய்தி வாக்கியமாக இருந்தது;

“அம்மா, கடந்த ஐந்து வருடமாக நான் வருகிறேன்; பிரார்த்தனை செய்கிறேன்; ஆனாலும் நான் சொன்ன ஒரு காரியத்தை நீங்கள் கவனிக்கவில்லையே;

நீங்கள் ஜீவனுள்ள தேவனிடம் வந்து விடுங்கள்; மாதா வணக்கம் எல்லாம் வேண்டாம்; நாம் இயேசுவைக் கூட ஏன் வணங்குகிறோம் தெரியுமா,அவர் பரமேறிச் சென்றதாலேயே; அவரைத் தவிர ஒரு புனிதரையும் வணங்க நமக்குக் கட்டளையில்லை;

ஏன்,வேதாகமத்திலேயே அதிகம் புகழப்படும் சிறந்ததொரு புனிதரான ஆபிரகாமையே யாரும் வணங்கியதில்லை;அவருக்குப் பின் வந்த புகழ் பெற்ற தலைவரான மோசேயையும் யாரும் வணங்கவில்லை;

எனவே நமக்கு வேதம் கற்பிக்காத ஒரு மார்க்கத்தை விட்டு நீங்கள் விலகவேண்டும்; கடவுளுக்காக உங்கள் ஆத்துமா ஏங்குகிறது; நீங்கள் சிறுவயது முதல் ஆண்டவரிடம் நம்பிக்கைக் கொண்டிருந்து செய்த பிரார்த்தனைகளுக்கெல்லாம் நிச்சயம் பலனுண்டு;

எனவே நம்பிக்கையுடன் ஆண்டவருக்கு மட்டும் ஆராதனை செய்யுங்கள்; அந்த விசுவாச வீரத்தில் தான் உங்கள் சரீரம் ஆரோக்கியமடையும்” என்றேன்.

One thought on “மாதா வணக்கம்..!

  1. அப்படி விசுவாச வீரத்திலும் ஆரோக்கியம் அடையவில்லை என்றால், என்ன சொல்வீர்கள்?
    அவர்களுக்கு விசுவாச வீரம் பத்தவில்லை என்பீர்களா?
    சரியாகிவிட்டால், ஆகா இதோ கர்த்தர் சரியாக்கிவிட்டார் என்பீர்களா?

    யாராருக்கு உடல் சரியில்லை என்ற் சரியாக மோந்து பார்த்து புடிக்கிறீங்கப்பா..
    பாவம் அப்பாவிகள் நன்றாக மாட்டிகொண்டு முழிக்கிறார்கள் உங்களிடம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s