எனது டைரிக் குறிப்பு:-

இன்று காலை துர்காவை சந்தித்தேன்; அவள் கடந்த சில மாதத்துக்கு முன்பு தனக்காக‌ பிரார்த்தனைக்காக செய்ய என்னைத் தொடர்பு கொண்டாள்;அது ஒரு சுவாரசியமான நிகழ்வு;அதனைக் குறித்து நிறைய எழுதவேண்டும்;

இன்று அவள் என்னிடம் கேட்ட கேள்வியும் அதற்கு நான் உள்ளூற தடுமாறினாலும் தடம் மாறாமல் அளித்த பதில் திருப்திகரமாக இருந்தது;

அவள் கேட்ட கேள்வி,ஏன் கிறிஸ்தவத்தில் இத்தனை பிரிவுகள்?

இது வழக்கமாக அனைத்து மார்க்கத்தவரும் கேட்கும் கேள்விதான்;அவர்கள் மார்க்கத்தில் எத்தனையோ பிரிவுகளிருப்பினும் கிறிஸ்தவ மார்க்கம் (மட்டுவாவது..?) பிரிவுகள் இல்லாததாக இருக்கட்டுமே என்ற நல்லெண்ணம் காரணமாக இருக்கலாம்;

முதலில் பொதுவானதொரு பதிலைச் சொன்னேன்;
இது அவரவர் விருப்பம் சார்ந்த விஷயம்;இதில் எது சரி என்று எளிதாகச் சொல்லமுடியாது;ஏனெனில் ஒவ்வொன்றும் நம்பிக்கை சார்ந்த காரியம்;

ஆனாலும் வேதம் இதற்கு தெளிவான வரையறைகளை வகுத்துள்ளது;வேதம் கடவுளின் தன்மையையும் அவரை அடையும் வகையையும் சொல்லித் தருகிறது;வேதம் என்பது பயின்று நிறைவேற்ற வேண்டியதாகும்;

ஆனால் கடவுள் என்றதுமே தொழுகையே முதலிடம் பிடிக்கிறது;காரணம் வாழ்க்கையின் தேவைகள்;தொழுகை அவசியமானாலும் அதுவே போதுமானதல்ல;

இதைக் குறித்த தெளிவு இல்லாததால் மனிதன் இரண்டு தவறு செய்தான்;ஒன்று, கடவுளை சிருஷ்டிகளுக்கு இணை வைத்தான்; இதனால் அவரைத் தாழ்த்தினான்;

இரண்டு, எல்லாவற்றுக்கும் அதிகாரியான மனிதன் தன்னை விட தாழ்ந்த சிருஷ்டிகளைத் தனக்குப் பணியாளாகக் கடவுள் சிருஷ்டித்தவற்றைப் பணிந்துக் கொண்டதால் தன்னைச் சிறுமைப்படுத்திக் கொண்டான்;

இப்படி கடவுளையும் தாழ்த்தி தன்னையும் சிறுமைப்படுத்திக் கொண்டதால் கடவுளை அடையும் வாசல் அடைபட்டது;

இதற்குக் காரணமாக அமைந்தது,மனிதனுக்குக் கடவுள் கொடுத்திருந்த சுயாதீனம்;இந்த சுய ஆளுமையினை தன்னாட்சியினை கடவுளுக்கு எதிர் வல்லமையிடம் இழந்ததால் அடிமைத்தனமும் பயமும் பிரிவினையும் மரணமும் வந்தது;சாவாமையுள்ள மனிதன் வாழ்வியல் அச்சங்களால் பீடிக்கப்பட்டான்;

அடுத்த சவால் மெய்ப்பொருளை அடைய வேண்டும்;
மெய்ப்பொருளான பரம்பொருளை எளிதில் அடையும் வாசல் அடைபட்டதால் மாற்றுவழியினைத் தேடும் மனிதனுக்கு முன்பாக இரண்டு கேள்வி உண்டு;
ஒன்று கடவுளின் தன்மை என்ன?
இரண்டு அவரை அடையும் வழி என்ன?

தொடர்ந்து படிக்க இங்கே வாங்களேன்..!

http://chillsams.blogspot.com/2009/12/blog-post_16.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s