ஆசீர்வாதத்தின் திறவுகோல்

“ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்” (எசேக்கியேல்.33:24)

வருடத்தின் இறுதிப்பகுதியில் வந்துள்ள நமக்கு இந்த வார்த்தை விசேஷித்த உற்சாகத்தைக் கொடுக்குமா? ஒருவேளை இதுவே வருடத்தின் ஆரம்பமாக இருந்திருக்குமானால் மிகுந்த சந்தோஷமாக இதனை வாக்குத்தத்தமாக ஏற்றுக்கொண்டிருப்போம்; இந்த வசனம் குறிப்பிட்ட பகுதியின் நடுவில் இந்த ஒரு வரி மாத்திரம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது;

எனக்கு அருமையான நண்பர்களே, நம்முடைய ஆண்டவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்,

” தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது ” (2.நாளாகமம்.16:9) என்று நாம் வாசிக்கிறவண்ணமாக இந்த வார்த்தையானது நமது உள்ளத்தை அசைக்குமானால் நமக்கும் ஆண்டவர் தரப்போகும் வெற்றிக்காகப் பொறுமையாகக் காத்திருப்போம்;

“ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்” என்று வாசித்தோம்; சரி, ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக வேதம் கூறுவது என்ன‌?

“உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்.” (ஏசாயா.51:2 )

இங்கே நாம் வாசிக்கிறோம், ஆபிரகாம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டதாலேயே தேசத்தை சுதந்தரிக்க முடிந்தது; ஆனால் அவனது சந்ததியாரோ தேவச் செயலை மறந்து சுயம் சார்ந்த ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து தேவனைக் கோபப்படுத்தினர்; எனவே அவர்களை சத்துருக்களின் கைக்கு ஒப்புக்கொடுத்தார்; ஆனாலும் அவர்களை வெறுத்துவிடாமல் தீர்க்கர்களின் மூலம் அவர்களை உணர்த்தி நல்(தம்)வழிப்படுத்தவும் விரும்புகிறார்; இதுவே ஒரு தகப்பனின் இருதயமாகும்;

கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதால் ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்க முடிந்தது எனில் கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதிக்கக் காரணமாக இருந்தவற்றில் அவனுடைய பங்கு என்ன என்பதையும் தியானிப்போமாக‌.

ஏனெனில் தேசத்தை சுதந்தரிப்பது என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வார்த்தையின்படி நிலங்களையும் பொன் பொருள்களையும் சொந்தமாக்கிக் கொள்வது மட்டுமல்ல; நமக்கு சுதந்தரமான கிறிஸ்துவை இந்தியர் அனைவருக்கும் சுதந்தரமாக்குவதே மெய்யான சுதந்தரமாகும்;

எனவே இந்த சுதந்தர உணர்வு சாதித்த உணர்வாக ருசிக்கப்பட வேண்டுமானால் ஆபிரகாமின் வெற்றியிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்;ஆபிரகாமின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது என்ன என்று தியானிப்போமா?

தொடர்ந்து வாசிக்க எனது தளத்துக்கு அன்புடன் அழைக்கிறேன்..!
http://chillsams.blogspot.com/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s