தள்ளிவிட்டது யாரு..?

ஒரு இராஜா தன‌து செல்ல மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேட எண்ணி தனது நாட்டு இளைஞர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார்;

அது ஒரு சாதாரண போட்டியல்ல; இராஜ அரண்மனையினைச் சுற்றியுள்ள அகழியை முதலில் கடந்து வருபவருக்கே தனது மகளைத் தருவதாக அறிவித்தார்; அதுவோ மிகவும் ஆழமும் அகலமுமாக இருக்கும்; அதில் நிறைய முதலைகளும் இருக்கும்; எனவே ஒருவரும் தம‌து உயிரைப் பணையம் வைத்து இந்த போட்டியில் பங்கேற்க முன்வரவில்லை;

ஆனாலும் ஆச்சரியமாக ஒரு இளைஞன் திடீரென அந்த அகழியில் விழுந்து நீந்தி இரத்த காயங்களுடன் கரையேறி வந்தான்; இராஜா மிகவும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் அந்த இளைஞனை வரவேற்று மாலையிட்டு கௌரவிக்க ஏற்பாடுகளைச் செய்தார்; இளைஞனோ சற்று தடுமாறி இராஜாவை நோக்கி இப்படி சொன்னான், “இராஜாவே மாலை மரியாதையெல்லாம் இருக்கட்டும்; அப்பாவியான, நீச்சல் தெரியாத என்னை‍ யார் தள்ளிவிட்டார் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்”

கதையின் நீதி:
நமது கிறிஸ்தவ வாழ்க்கை இதுபோன்றதொரு விபத்தாக அமையாமல் தெளிவான திட்டத்துடனும் உறுதியுடனும் அமையுமானால் ஜீவ கீரீடம் நிச்சயம் உண்டு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s