காலில் விழலாமா..?

இன்று (12.10.2009) காலை (07:00am) தொலைக்காட்சியில் சுவிசேஷகர் வி.ஜி.செல்வராஜ் அவர்களது நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தேன்; அந்த நிகழ்ச்சியில் தனது இளைய மகனுடைய திருமண நிகழ்ச்சித் தொகுப்பை ஒளிபரப்பினார்; நிகழ்ச்சியின் பெயர் “வேதமே முழங்கு”

ஒரு ஹோட்டலில் (conference Hall ) எளிமையாக திருமண நிகழ்ச்சி நடைபெற்றது; அதில் பங்கேற்க வந்த பல பிரபலங்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த்; திருமண நிகழ்ச்சி சற்று தாமதமாக நடைபெற்றாலும் அவர் பொறுமையாகக் காத்திருந்தாராம்; அதைப் பெருமையாகக் குறிப்பிட்டார்,அண்ணாச்சி.

எல்லாம் முடிந்து மணமக்கள் வாழ்த்து பெறும் நேரத்தில்தான் நான் அதிர்ச்சியடைந்த சம்பவம் நடந்தது; மணமகனும் அவரைத் தொடர்ந்து மணமகளும் திரு.ரஜினிகாந்த் காலில் விழுந்தனர்; மணமக்கள் திருமணத்தை நடத்தி வைத்த மூத்த போதகர் மோகன் அவர்கள் காலில் கூட விழவில்லை;ஆனால்..?

சரி, அது அவர்கள் கலாச்சாரம் சார்ந்த குடும்பப் பாரம்பரியம் என விட்டுவிடலாம்; ஆனால் அண்மையில் ஊழியத்தில் ஈடுபட்டு வேகமாகத் தன்னை வளர்த்துக் கொண்ட “அண்ணாச்சி” கோல்டன் பீச் அருகே அவர்களால் கட்டப்பட்ட “உலக அமைதி ஆலயத்தை” “சுகஜீவ தேவ சபையாக ” மாற்றி அதற்கு மணமகனான தனது இளைய மகனையே பாஸ்டர் அல்ல “ரெவரெண்டு” ஆக்கிவிட்டார்; அதுவும்கூட தவறல்ல;

ஆனால் பொறுப்பான போதகராக கிறிஸ்துவுக்கு மட்டுமே கீழ்ப்படிந்திருக்க வேண்டிய இளம் போதகர் இதுபோல பொது இடத்தில் உலக மனுஷன் காலில் விழுவது எப்படி சரியாகும்?

சரியான அழைப்பின் நிச்சயம் இல்லாத இதுபோன்ற அவசர பாஸ்டர்கள் எப்படிப்பட்ட மரபை உருவாக்கப் போகிறார்களோ என்ற கவலை ஏற்படுகிறது; மணமகன் உணர்ச்சிவயப்பட்டு பழக்க தோஷத்தில் இதுபோல விழுந்திருக்கலாம்; ஆனாலும் இதை கவனித்தவர்கள் மற்றும் வாசகர்கள் என் மூலம் விவாதத்துக்குட்பட்ட இந்த காரியம் வேதத்தின் படி பிழையானது என அறிய வேண்டுகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s