Satan loves You..!

  கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு சாத்தானின் கடிதம்

  அனுப்புநர்:
  சாத்தான்
  அக்கினி வாசல்
  எரிநரகம் 666

  பெறுநர்
  விசுவாசி,
  மாயமாலக்கோட்டை
  சிற்றின்பசாலை
  பூலோகம்

  அன்பான மகனே, மகளே.,
  உனக்குள் என் ராஜ்யத்தை ஸ்தாபிப்பது மிகவும் கடினம் என்று எண்ணினேன்.ஆனால் என் வேலையை நீ மிக சுல‌பமாக்கினாய், அதிகாலையில் எழுந்தவுடன் முழ‌ங்காற்படியிட்டு ஜெபிக்கவேண்டிய நீ ஜெபிக்காமலேயே அன்றாட கடமைகளை செய்யத் துவங்கினாய்.முதலில் எனக்கு ஏற்பட்ட இந்த வெற்றி என்னுடைய பல வெற்றிகளுக்கு வித்திட்டதை எண்ணினால், எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது தெரியுமா

  வெரிகுட் கீப் இட் அப்..!

  சாப்பிடுவதற்கு முன் ந‌ன்றி ஜெபம், வேலைக்கு கிளம்புவதற்கு முன் பாதுகாப்பு ஜெபம்…இப்படி ஏதாவது செய்துவிடுவாயோ என பயந்திருந்தேன். ஆனால் நீயோ அடுத்தடுத்து செய்யவேண்டிய வேலைகளை நினைத்தபடி பிஸியாக இருந்தாய்.தேவனிடத்தில் ந‌ன்றியில்லாத உன் இருதய‌மும் எளிதில் ப‌த‌ற்ற‌ம‌டைகிற‌ குண‌மும் தான் உன்னிட‌த்தில் எனக்கு மிகவும் பிடிக்கும்!

  ஏய்! நீ தான் எனக்குக் கிடைத்த முத்தான சொத்து!

  பல ப‌ரிசுத்த ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்துக் கொண்டு,எத்தனையோ புத்தகங்களை வாசித்து ந‌ல்ல கருத்துகளை தெரிந்துகொண்டும் மாற்ற -மில்லாமல் நீ தொடருகிறாயே, அது தான் என்னை மிகவும் கவர்ந்த குணம்.நீ நரகத்துக்கு வந்த பிற‌கு நாம் இருவ‌ரும் சேர்ந்து வாழுவதை விட,பூமியில் சேர்ந்திருக்கிறோமே என்னை பூரிப்பாக்குகிற உண்மை இது. நான் இருக்கிற இடத்திலே உன்னை சேர்ப்பதற்கு நான் எடுக்கிற எல்லா நடவடிக்கைகளும் உன் விஷயத்தில் வெற்றியாய் அமைவதை நினைத்தால் என் இருதயம் இன்பத்தால் நிரம்பி வழிகிறது தெரியுமா?

  டிவியில் வருகிற தொடர் நாடகங்கள் பார்ப்பது, அவ்வப்போது சினிமா நிகழ்ச்சிகளை ரசிப்பது, மற்றவர்களைப் பற்றி தர‌க்குறைவான வார்த்தைகளை தாராளமாய் பேசுவது, உன் தலைமை அதிகாரியை மதிக்காமல் ந‌டப்பது போன்ற‌வை எல்லாம் என்னுடைய சிறப்பான ஆற்றலால் உனக்குள் நான் புகுத்திய காரியங்கள் என்பது மட்டும் என‌க்கு மகிழ்ச்சி அல்ல,இத்தனையும் செய்துங்கூட “கிறிஸ்தவன்” என்ற போர்வைக்குள் நீ மறைந்திருக்கிறாயே அதுதான் விசேஷம்!

  ஆனால் எனக்கு ஒரே வருத்தம் என்னன்னா…நீ உலக வாழ்க்கையை முடித்து என்னிடம் நிரந்தரமாய் வந்தவுடன் உன்னை சந்தோஷமாய் வைக்கமுடியாதது தான். நான் இருக்கிற இடமே அக்கினிக் கடல் தானே.அதனால் தான் உன்னை இப்பவே சிற்றின்ப சாலையில் வைத்து சந்தோஷப்படுத்துகிறேன்.கிடைக்கிற சான்ஸை விட்டுவிடாதே!

  அனுபவி நன்றாக அனுபவி..!

  மரணத்திற்கு பின்னிருக்கிற நித்திய பரலோக வாழ்வைக் குறித்து எடுத்துக் கூறி,யாராவது உன்னை என்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என முன்பு நான் பயந்தது உண்டு.ஆகவே தான் நீ என்னுடைய ஆள் என்று வெளியே பிரபலமாகாதபடிக்கு உன்னை வெளிப்படையான கிறிஸ்த‌வ‌ நடைமுறைக‌ளை‌ப் பின்ப‌ற்றச் செய்தேன்.

  பாவ‌ப் ப‌ழ‌க்க‌ங்களைத் தொட‌ர்ந்து பின்ப‌ற்றிய‌தால் நீ என்னிட‌ம் நிர‌ந்த‌ர‌மாய் வ‌ந்து சேருகிற‌ நாள் ச‌மீப‌மாகிவிட்ட‌து.நீ என்னிட‌ம் வ‌ந்துவிட்டால் பூமியில் என் ப‌க்க‌மிருந்து செய‌ல்ப‌ட‌ ஆள் தேவைப்ப‌டும்.ஆக‌வே இன்னும் நீண்ட‌ நாள் வாழ‌விருக்கிற‌ சிறுபிள்ளைக‌ளுக்குள்ளும் இளைஞ‌ர்க‌ளுக்குள்ளும் கெட்ட‌ சுபாவ‌ங்க‌ள் ப‌தியும்ப‌டி அவ‌ர்க‌ளுக்கு முன்பாக‌ கோப‌ப்ப‌டுகிறாய்,கீழ்த்த‌ர‌மான‌ வார்த்தைக‌ளைப் பேசுகிறாய்,ச‌ண்டையிடுகிறாய்,இன்னும் ப‌ல‌ தீய‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுகிறாய்.இப்ப‌டியெல்லாம் நீ செய்வ‌தால் அவ‌ர்க‌ளும் என் ப‌க்க‌ம் வ‌ந்துவிடுவார்க‌ள்.
  அதும‌ட்டும‌ல்ல‌ என்னிட‌ம் வ‌ருகிற‌ பிள்ளைக‌ள் த‌ங்க‌ள் இள ர‌த்தத்தின் வ‌லிமையால் மேலும் ப‌ல‌ரையும் என் ப‌ணியில் இணைத்து விடுவார்க‌ள்.உன்னைக் குறித்து என் எதிர்பார்ப்பு இதுதான்.

  ப்ளீஸ்…என‌க்காக‌ இதெல்லாம் செய்ய‌க்கூடாதா என்ன‌..?

  நான் எத்த‌னை முறை உன்னைக் காப்பாற்றியிருக்கிறேன்,நீ பொய் சொல்லி, திருடி மாட்டிக் கொள்ள‌ வேண்டிய‌ இட‌த்தில்,உண்மையாய் வாழுகிற‌ வேறொருவரை மாட்டிவிட்டு உன்னைத் தப்புவித்திருக்கிறேன் அல்லவா?அதையெல்லாம் நினைத்துப் பார்த்து என‌க்கு நீ க‌ட்டாய‌‌ம் இந்த‌ உத‌வியைச் செய்!என் ச‌ந்தோஷ‌த்தை பரிபூர‌ண‌மாக்கு.ந‌ர‌க‌த்தினை உன் போன்றோரால் நிர‌ப்புகிற‌ என் ப‌ணி ந‌லிவின்றி தொட‌ர‌ உன் த‌ய‌வை நாடுகிறேன்.

  தேங்க்யூ பை,பை,சீ,யூ..!

  இப்ப‌டிக்கு,
  ச‌ங்கார‌ப் ப‌ணியில்,
  சாத்தான்

  {நன்றி: PASTOR இறையன்பு ஜாண்}

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s