// திருநெல்வேலி:
பிற மதங்களில் இருந்து, இந்து மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி, நேற்று நெல்லையில் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நெல்லையில் நேற்று மதமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதமாறும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பார்வதி சேஷ மகாலில் நடந்தது. இதில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் கிறிஸ்தவர்கள். சுத்தி ஹோமம் நடத்தப்பட்டு, அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமிகள் அவர்களுக்கு வீட்டில் பூஜை செய்ய விளக்குகள் வழங்கி, ஆசிர்வதித்தார்.
இது குறித்து வி.எச்.பி.,மாநில கோபாலரத்தினம் கூறுகையில், “”இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, இந்து மக்கள் மட்டுமே கேட்டு அதன்படி நடக்கிறார்கள். இதனால், மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.
மதமாற்றத்திற்காக, ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் விதைக்கின்றன. “இந்தியாவில் அறுவடை’ என்ற பெயரில் முகாம் நடத்தி, மதமாற்றங்களை நடத்துகின்றனர். ஆனால், மற்ற மதங்களுக்கு செல்லும் மக்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அங்கேயும் ஆலய வழிபாட்டில் பேதம், இடுகாடு போன்றவற்றில் ஜாதிப் பிரச்னை நீடிக்கிறது.
எனவே, தாய் மதமான இந்து மதத்திற்கு பலரும் தாங்களாகவே விண்ணப்பித்து மாறுகிறார்கள். நாங்களும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா… அரசின் நலத் திட்டங்களுக்காக மாறுகிறார்களா… என, ஆலோசித்தே சான்றிதழ் வழங்குகிறோம், என்றார். நிகழ்ச்சியில் தர்மபிரசார் அமைப்பாளர் பெருமாள், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். //
http://www.dinamalar.com/district_detail.asp?id=172793
மேற்கண்ட தினமலர் பத்திரிகையின் விஷமமான செய்தியை வாசித்ததும் பயங்கரமான சிரிப்பு வந்தது;மீனவர்கள் கடலுக்குச் சென்று வலைவீசி மிகுந்த பிரயாசத்துடன் மீன்பிடிக்கிறார்கள்;அப்படி பிடிக்கப்பட்ட மீன்களிலிருந்து சிலது கரையேறும் முன்பே துள்ளி கடலில் வீழும்;அங்கே அவற்றை விழுங்க திமிங்கலங்கள் காத்திருக்கும்;அதுபோலவே மனித வாழ்க்கை என்பது உள்ளேயும் சரி, வெளியேயும் சரி துன்பங்கள் நிறைந்தது;அநித்தியமானது;இதில் எங்கே இருந்தால் என்ன?
ஏன் சிரிப்பு வந்தது என்றால் இந்த நாளிதழ் நல்ல தரமான நிருபர்களை உடையதானாலும் இந்த குறிப்பிட்ட செய்தியின் வாசகங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்,இதில் பக்கத்தை நிரப்ப எதையாவது எழுதவேண்டுமே..!
இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக இந்துக்களின் தொகை வேகமாக குறைந்து வருகிறதாம்;மேலும் மதமாற்றத்தின் காரணமாகவும் இந்துக்கள் தொகை குறைந்து வருகிறதாம்;மதம் மாறியவர்கள் இந்தியாவில் தானே இருக்கிறார்கள்? அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும்? இந்த தேசபக்தர்கள் இந்தியாவை சுரண்டி வெளிநாடுகளில் இலட்சம் கோடிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்களே,அதுவல்லவா இந்தியாவை பெலவீனப்படுத்தும்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வந்தபோது அதில் முக்கிய குறிப்பாக வைத்தது,பெண்களையும் குழந்தைகளையும் மதம் மாற்றக்கூடாது என்பதே;ஆனால் இங்கே 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதம் மாறினார்களா;இது கேலிக்கூத்தாக இல்லையா? குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங்கே போய் சொல்லுவது? எப்படியோ இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாகி விட்டால் இந்தியாவில் சாதிக்கொடுமைகளோ வரதட்சணை கொடுமைகளோ இலஞ்ச லாவண்யமோ வர்க்கக்கொடுமைகளோ இல்லாது முழு இந்தியாவும் சுபிக்ஷமாகிவிடும் என்று நம்புவோமாக.
Atleast some people got freedom from the virus spread diseases. Be happy for that Chillsam.
எப்படியோ இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாகி விட்டால் இந்தியாவில் சாதிக்கொடுமைகளோ வரதட்சணை கொடுமைகளோ இலஞ்ச லாவண்யமோ வர்க்கக்கொடுமைகளோ இல்லாது முழு இந்தியாவும் சுபிக்ஷமாகிவிடும் என்று நம்புவோமாக.
- Even if the whole country becomes Christian country, there is no assurance that all attrocities will come to end. So what is the point. The codes of Dharma are laid down and any breach of Dharma will attract a punishment. There was no time neither a whole country (whether Hindu or Christian or Muslim) where everyone is living within the codes of laid down Dharma.
THAVARI VIZNTHA SIRU MEENGAL THMINGALATHUKKU IRRAIYAVATHU NIHCHAYAM. INTHA TIMINGALAITHIN VAIKKU YAAR KAPPADTHUVATHU